8 - அறிவியல்-வெப்பம்-மதிப்பீடு- வினா-விடைகள்

                    வெப்பம்

மதிப்பீடு


I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வெப்பம் என்பது ஒரு வகையான _____________.

அ) மின்னாற்றல்

ஆ) ஈர்ப்பு ஆற்றல்

இ) வெப்ப ஆற்றல்

ஈ) எதுவுமில்லை

விடை :  இ) வெப்ப ஆற்றல்

2. ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது பின்வருவனவற்றுள் எது/எவை நிகழ முடியும்?

அ) விரிவடைதல்

ஆ) வெப்பநிலை உயர்வு

இ) நிலைமாற்றம்

ஈ) அனைத்தும்

விடை : ஈ) அனைத்தும்

3. பின்வரும் பொருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது?

அ) திடப்பொருள்

ஆ) திரவப்பொருள்

இ) வாயுப்பொருள்

ஈ) அனைத்தும்

விடை : அ) திடப்பொருள்

4. திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது, எது அதிக விரிவுக்குஉட்படும்?

அ) திடப்பொருள்

ஆ) திரவப்பொருள்

இ) வாயுப்பொருள்

ஈ) அனைத்தும்

விடை : இ) வாயுப்பொருள்

5. திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு மாறும் நிகழ்விற்கு_________என்று பெயர்

அ) பதங்கமாதல்

ஆ) குளிர்வித்தல்

இ) உறைதல்

ஈ) படிதல்

விடை : இ) உறைதல்

6. வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம்___________ல் நடைபெறும்

அ) திடப்பொருள்

ஆ) திரவப்பொருள்

இ) வாயுப்பொருள்

ஈ) அனைத்தும்

விடை : அ) திடப்பொருள்


II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. கலோரிமீட்டர் என்ற சாதனம் ___________ஐ அளக்கப் பயன்படுகிறது. விடை : வெப்பத்தை

2. ஒருகிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ___________ எனப்படும்.

விடை : தன் வெப்பஏற்புத் திறன்

3. வெப்பக்கட்டுப்படுத்தி என்பது ___________ ஐ மாறாமல் வைத்திருக்கிறது.

விடை : வெப்பநிலையை

4. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு ஒரு பொருள் மாறும் நிகழ்விற்கு___________என்று பெயர்

விடை : குளிர்தல்

5. ஒரு அமைப்பிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது, அதன் வெப்பநிலை___________

விடை : அதிகரிக்கும்

6. ஒரு கலனிலுள்ள திரவத்தின் வெப்பநிலையை உயர்த்தும்போது அணுக்களுக்கிடையேயான தொலைவு ___________

விடை : குறையும்


III. சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.

1. ஒரு பொருளுக்கு அளிக்கப்படும் வெப்ப ஆற்றல், அப்பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது.

விடை : சரி

2. ஒரு பொருளின் வெப்பநிலையை அதிகரிக்கும்போது அப்பொருளின் பரிமாணத்தின் மதிப்பு அதிகரிக்கும்.

விடை : தவறு

சரியான கூற்று : ஒரு பொருளின் வெப்பநிலையை அதிகரிக்கும்போது அப்பொருளின் பரிமாணத்தின் மதிப்பு குறையும்.

3. ஒரு பொருளானது திடநிலையிலிருந்து வாயுநிலைக்கு மாறும் நிகழ்விற்கு குளிர்வித்தல் என்று பெயர்.

விடை : தவறு

சரியான கூற்று : ஒரு பொருளானது திடநிலையிலிருந்து வாயுநிலைக்கு மாறும் நிகழ்விற்கு பதங்கமாதல் என்று பெயர்.

4. திடப்பொருளில் வெப்பப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு வெப்பக் கடத்தல் என்று பெயர்.

விடை : சரி

5. ஒரு பொருள் ஏற்கும் வெப்பத்தின் அளவானது அதன் நிறையையும் உள்ளுறை வெப்பத்தையும் பெருக்கிக் கிடைக்கும் மதிப்பாகும். 

விடை : தவறு

சரியான கூற்று : ஒரு பொருள் ஏற்கும் வெப்பத்தின் அளவானது அதன் நிறையையும் வெப்ப ஏற்புத்திறனையும் பெருக்கிக் கிடைக்கும் மதிப்பாகும்.

6. வெப்பக்குடுவையில், சில்வர் சுவர்கள் வெப்பத்தை வெளிப்புறத்தில் எதிரொளிக்கின்றன.

விடை : தவறு: சரியான கூற்று : வெப்பக்குடுவையில், சில்வர் சுவர்கள் வெப்பத்தை மீண்டும் குடுவையிலுள்ள திரவத்திற்கே அனுப்புகிறது.


IV. பொருத்துக


வெப்பக்கடத்தல்

திரவப்பொருள்

வெப்பச் சலனம்

வாயு திரவமாதல்

வெப்பக்கதிர்வீச்சு

திண்மம் வாயுவாதல்

பதங்கமாதல்

வாயு

குளிர்வித்தல்

திடப்பொருள்




விடை:


வெப்பக்கடத்தல்

திடப்பொருள்

வெப்பச் சலனம்

திரவப்பொருள்

வெப்பக்கதிர்வீச்சு

வாயு

பதங்கமாதல்

திண்மம் வாயுவாதல்

குளிர்வித்தல்

வாயு திரவமாதல்



V.  கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்க.

1. கூற்று :  வெற்றிடத்தில் வெப்ப ஆற்றல் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.

காரணம் : அணுக்களின் இயக்கமின்றி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வெப்பம் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.

2. கூற்று :  ஓர் அமைப்பினை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றமுடியும்.

காரணம் : ஒருஅமைப்பின் வெப்பநிலை மாறாமல் இருக்கும்போது இது நிகழ்கிறது.


அ)  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை  விளக்குகிறது.

ஆ)  கூற்று சரி, காரணம் தவறு.

இ) கூற்று தவறு,  காரணம் சரி.

ஈ)  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை  விளக்கவில்லை.

விடை : 

  1. அ)  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை  விளக்குகிறது.

  2. ஆ)  கூற்று சரி, காரணம் தவறு.


VI. சுருக்கமாக விடையளி.


1. அன்றாட வாழ்வில், வெப்பக்கடத்தல் நிகழ்விற்கு இரண்டு உதாரணம் தருக.


வெப்பக்கடத்தல் நிகழ்விற்கு  உதாரணங்கள் :

  • உலோகத்தாலான பாத்திரங்களில் நாம் உணவு சமைக்கிறோம்.சமையல் பாத்திரத்தை வெப்பப்படுத்தும்போது, வெப்ப ஆற்றலானது பாத்திரத்திலிருந்து உணவுப்பொருளுக்குக் கடத்தப்படுகிறது.

  • சலவைப் பெட்டியைக் கொண்டு துணியை சலவை செய்யும்போது சலவைப் பெட்டியிலிருந்து வெப்ப ஆற்றல் துணிக்குப் பரவுகிறது.

2.  வெப்ப ஆற்றலின் விளைவுகள் யாவை?

வெப்ப ஆற்றலின் விளைவுகள் :

விரிவடைதல்

வெப்பநிலை உயர்வு

நிலை மாற்றம்

3. வெப்பம் கடத்தப்படும் முறைகள் யாவை?

வெப்பம் கடத்தப்படும் மூன்று முறைகள் :

வெப்பக்கடத்தல்

வெப்பச் சலனம்

வெப்பக்கதிர்வீச்சு

4.  வெப்பக்கடத்தல் என்றால் என்ன?

திடப்பொருள்களில் அதிக வெப்ப நிலையிலுள்ள பகுதியிலிருந்துலை மாற்றம் குறைந்த வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் இயக்கம் இல்லாமல் வெப்ப ஆற்றல் பரவும் நிகழ்வு வெப்பக்கடத்தல் என்று வரையறுக்கப்படுகிறது.

5. வெப்பச்சலனம் பற்றி குறிப்பு எழுதுக  .

ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது, உயர் வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் இயக்கத்தினால் வெப்பம் கடத்தப்படும் முறைக்கு வெப்பச் சலனம் என்று பெயர்.

6.  தன்வெப்ப ஏற்புத் திறன் - வரையறு.

1 கிலோகிராம் நிறையுள்ள பொருள் ஒன்றின் வெப்பநிலையை 1°C அல்லது 1°Fஅளவு உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவே அப்பொருளின் தன்வெப்ப ஏற்புத் திறன் என்று வரையறுக்கப்படுகிறது.

7. ஒரு கலோரி - வரையறு.

1 கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை  1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு 1 கலோரி என வரையறுக்கப்படுகிறது.


VII. விரிவாக விடையளி :

1. கலோரிமீட்டர் வேலைசெய்யும் விதத்தை தெளிவான படத்துடன் விவரி.

விடை:  கலோரி மீட்டர்.

பொருள் ஒன்றினால் ஏற்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பத்தினை அளவிடப் பயன்படுத்தப்படும் உபகரணம் கலோரி மீட்டர் ஆகும்.



கலோரி மீட்டர் வேலைசெய்யும் விதம்:

கலோரி மீட்டர் வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்கு கடத்தும் தன்மையுடைய உலோகங்களான தாமிரம் அல்லது அலுமினியத்தால் ஆன பாத்திரம் ஒன்றைக் கொண்டுள்ளது. வெப்ப ஆற்றலை சுற்றுப் புறத்திற்கு அளிப்பதன் மூலம் வெப்ப இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக இது வெப்பத்தைக் கடத்தாத ஒரு கலனில் வைக்கப்பட்டுள்ளது. இக்கலனின் மூடியின் மீது இரண்டு துளைகள் உள்ளன. ஒரு துளையின் வழியாக பொருளின் வெப்பநிலையை அளவிடுவதற்கு வெப்பநிலைமானியும், மற்றொரு துளையின் வழியே பாத்திரத்திலுள்ள திரவத்தைக் கலக்குவதற்கு ஒரு கலக்கியும் வைக்கப்பட்டுள்ளது.வெப்ப ஏற்புத்திறன் கணக்கிடப்படவேண்டிய திரவமானது பாத்திரத்தினுள் நிரப்பப்பட்டுள்ளது. மின்கம்பி  வழியே  மின்சாரத்தைக்  கடத்துவதன்  மூலம்  இத்திரவமானது வெப்பப்படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்தி ஒரு திரவத்தின்வெப்ப ஏற்புத் திறனின் மதிப்பினைக் கணக்கிடலாம்.


2.  வெப்பக் கட்டுப்படுத்தி பற்றி குறிப்பு வரைக.


வெப்பக் கட்டுப்படுத்தி:

ஒரு பொருளின் அல்லது இடத்தின் வெப்பநிலையை மாறாமல் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனம் வெப்பக் கட்டுப்படுத்தி (தெர்மோஸ்டாட்) ஆகும். "தெர்மோஸ்டாட்" என்ற சொல் இரண்டு கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது. இதில் "தெர்மோ" எனும் சொல் வெப்பம் என்றும், "ஸ்டாட்" எனும் சொல் அதே நிலையில் இருப்பது என்றும் பொருள்படும். வெப்பமூட்டும் அல்லது குளிர்ச்சியூட்டும் உபகரணங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைவதற்காக இவை பயன்படுத்தப்படுகின்றன. இவை, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்தவுடன்,அந்த உபகரணத்தை செயல்பட வைக்கின்றன அல்லது நிறுத்தி விடுகின்றன. கட்டடங்களிலுள்ள சூடேற்றி, அறைகளின் மைய சூடேற்றி, காற்றுப்பதனாக்கி (Air conditioner), நீர் சூடேற்றி  மற்றும் சமையலறையிலுள்ள குளிர்பதனி, நுண்ணலை அடுப்பு ஆகிய அமைப்புகளில் வெப்பக் கட்டுப்படுத்தி பயன்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் உணர்வியாகவும், வெப்பநிலை அமைவுகளைக் கட்டுப்படுத்தும் கட்டுப்படுத்தியாகவும்  வெப்பக் கட்டுப்படுத்தி செயல்படுகிறது.


3.  வெப்பக் குடுவை வேலை செய்யும் விதத்தினை விளக்குக.


வெப்பக் குடுவை வேலை செய்யும் விதம் :



வெற்றிடக் குடுவை இரண்டு சுவர்களைக் கொண்ட ஒரு கலனாகும். அதன் உட்புறமானது சில்வரால் ஆனது. இரண்டு சுவர்களுக்கும் இடையே வெற்றிடம் ஒன்று உள்ளது. அது, வெப்பச்சலனம் மற்றும் வெப்பக்கடத்தல் ஆகிய நிகழ்வுகளால் வெப்ப ஆற்றல் வெளியே பரவாமல் இருக்க உதவுகிறது. சுவர்களுக்கு இடையே சிறிதளவு காற்று இருப்பதால், வெளிப்புறத்திலிருந்து உள்புறத்திற்கும், உள்புறத்திலிருந்து வெளிப்புறத்திற்கும் வெப்பம் கடத்தப்படுவதில்லை. குடுவையின் மேற்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் இரண்டு சுவர்களும் இணைகின்ற இடத்தில் மட்டுமே வெப்பக்கடத்தல் மூலம் வெப்பமானது கடத்தப்பட முடியும். குடுவையிலுள்ள சில்வர் சுவர், வெப்பக்கதிர்வீச்சினை மீண்டும் குடுவையிலுள்ள திரவத்திற்கே அனுப்புவதால் நீண்ட நேரம் திரவம் சூடாக இருக்கிறது. 


VIII. உயர்சிந்தனை வினாக்கள்.

1. குளிர்காலங்களில் ஏரிகளின் மேற்பரப்பு உறைந்திருந்தாலும், அதன் கீழ்பகுதி உறையாமல் இருப்பது ஏன்?

குளிர் காலங்களில் ஏரிகளின் மேற்பரப்பு குளிர்ந்த வளிமண்டலத்துடன் தொடர்பில் இருப்பதால் உறைந்திருக்கிறது. எனவே மேற்பரப்பில் பனிப்படலம் உருவாகிறது. இந்த பனிப்படலம் நீரைவிடக் குறைந்த அடர்த்தி கொண்டதால் நீரில் கடந்து அடியில் செல்ல முடியாது. இந்தப் பனிப்படலம் காப்பான்கள் போலச் செயல்பட்டு கீழ்பரப்பில் உள்ள நீரை திரவ நிலையிலேயே வைத்திருக்கிறது.எனவே ஏரிகளின் கீழ்ப்பகுதி உறையாமல் இருக்கிறது.


2. வெப்பக்கடத்தல் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களுள் எது சரி?

அ) எஃகு > மரம் > நீர் 

ஆ) எஃகு > நீர் > மரம்

இ)  நீர் > எஃகு > மரம்

ஈ) நீர் > மரம்  > எஃகு


விடை : இ)  நீர் > எஃகு > மரம்

விளக்கம் :திடப்பொருளை விட திரவம் மிக விரைவாக வெப்பத்தைக் கடத்தும். எனவே நீர் எஃகைவிட வேகமாக வெப்பத்தைக் கடத்தும். மரம் ஒரு வெப்ப அரிதிற்கடத்தி ஆகும். எஃகு ஒரு வெப்ப நற்கடத்தி ஆகும். எனவே எஃகு மரத்தைவிட அதிகமாக வெப்பத்தைக் கடத்தும்.


IX. கணக்கீடுகள்.

1. ஒரு இரும்புப்பந்தின் வெப்பநிலையை 20°C உயர்த்த1000J ஆற்றல்  தேவைப்படுகிறது. அப்பந்தின் வெப்ப ஏற்புத் திறனைக் கணக்கிடுக.


தீர்வு :

வெப்ப ஆற்றல்,       Q = 1000J

வெப்பநிலை உயர்வு,     ΔT = 20°C = 20K

வெப்ப ஏற்புத்திறன், C’ = ?   

               C’ = Q/ΔT

       C’ =1000/20=50

        =50J/K

வெப்ப ஏற்புத்திறன்C’        = 50J/K-1


2. 100 கி.கி எடையுள்ள பாத்திரத்தின் வெப்ப ஏற்புத் திறன் 8000J/K. அதன் தன் வெப்ப ஏற்புத் திறனைக் கணக்கிடுக.


தீர்வு : 

நிறை,  m   = 100 கி.கி

வெப்ப ஏற்புத்திறன்C’ = 8000J/K

தன்வெப்ப ஏற்புத்திறன்C      = Q / m x ΔT

வெப்ப ஏற்புத் திறன், C’     = Q / ΔT

தன்வெப்ப ஏற்புத்திறன்C     =C’ / m

8000J/K

   = ----------= 80

100kg

தன்வெப்ப ஏற்புத்திறன்C    = 80JK-1kg-1 


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்