வகுப்பு 6 ப1அ3 அறிவியல் நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருள்கள் வினா-விடைகள்
அலகு 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ______________ பருப்பொருளால் ஆனதல்ல. அ) தங்க மோதிரம் ஆ) இரும்பு ஆணி இ) ஒளி ஈ) எண்ணெய்த் துளி விடை: இ) ஒளி 2. 400 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மிலி நீர் ஊற்றப்படுகிறது. இப்போது நீரின் பருமன் அ) 400 மி.லி ஆ) 600 மி.லி இ) 200 மி.லி ஈ) 800 மி.லி விடை: இ) 200 மி.லி 3. தர்பூசணிப் பழத்தில் உள்ள விதைகளை ______________ முறையில் நீக்கலாம். அ) கைகளால் தெரிந்தெடுத்தல் ஆ) வடிகட்டுதல் இ) காந்தப் பிரிப்பு ஈ) தெளிய வைத்து இறுத்தல் விடை: அ) கைகளால் தெரிந்தெடுத்தல் 4. அரிசி மற்றும் பருப்பில் கலந்துள்ள லேசான ______________ மாசுக்களை முறையில் நீக்கலாம். அ) வடிகட்டுதல் ஆ) படியவைத்தல் இ) தெளிய வைத்து இறுத்தல் ஈ) புடைத்தல் விடை: ஈ) புடைத்தல் 5. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ______________ அவசியம் தேவைப்படுகிறது. அ) மழை ஆ) மண் இ) நீர் ஈ) காற்று விடை: ஈ) காற்று 6. ______________ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கல...