VIII-அறிவியல்-தாவர உலகம்-மதிப்பீடு-வினா-விடைகள்
தாவர உலகம்
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. தூதுவளையின் இரு சொற்பெயர் சொலானம் ட்ரைலொபேட்டம் ஆகும். இதில் சொலானம் என்ற சொல் எதைக் குறிக்கிறது.
அ) சிற்றினம் ஆ) பேரினம்
இ) வகுப்பு ஈ) துறைகள்
விடை : ஆ) பேரினம்
2. புளோரிடியன் ஸ்டார்ச் .................... ல் சேமிப்பு பொருளாக உள்ளது.
அ) குளோரோஃபைசி ஆ) பியோஃபைசி
இ) ரோடோஃபைசி ஈ) சயனோஃபைசி
விடை : இ) ரோடோஃபைசி
3.கூட்டமைப்பாகக் காணப்படும் பாசி
அ) ஆசில்லடோரியா ஆ) நாஸ்டாக்
இ) வால்வாக்ஸ் ஈ) குளோரெல்லா
விடை :இ) வால்வாக்ஸ்
4. உண்ணத் தகுந்த காளான்
அ) பாலிபோரஸ் ஆ) அகாரிகஸ்
இ) பெனிசிலியம் ஈ) அஸ்பர்ஜில்லஸ்
விடை : ஆ)அகாரிகஸ்
5. மண்அரிப்பைத் தடுக்கும் தாவரங்கள்.
அ) பாசி ஆ) பூஞ்சை
இ) பிரையோஃபைட்டுகள் ஈ) டெரிடோஃபைட்டுகள்
விடை : இ) பிரையோஃபைட்டுகள்
6. முதலாவது நிலத் தாவரங்கள்
அ) பிரையோஃபைட்டுகள் ஆ) டெரிடோஃபைட்டுகள்
இ) ஜிம்னோஸ்பெர்ம்கள் ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விடை : ஆ) டெரிடோஃபைட்டுகள்
7. நன்கு வளர்ச்சியடைந்த வாஸ்குலார் திசுக்களைக் கொண்ட தாவர உடலம் காணப்படுவது
அ) பிரையோஃபைட்டுகள் ஆ) டெரிடோஃபைட்டுகள்
இ) ஜிம்னோஸ்பெர்ம்கள் ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விடை : ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
8. இரு சொற்பெயரிடு முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு...............
அ) 1970 ஆ) 1975
இ) 1978 ஈ) 1623
விடை : ஈ) 1623
9. பெனிசிலின் ஒரு உயிர் எதிர்பொருள். இவை எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?
அ) பாசிகள் ஆ) பூஞ்சைகள்
இ) பிரையோஃபைட்டுகள் ஈ) டெரிடோஃபைட்டுகள்
விடை : அ) பூஞ்சைகள்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. "வகைப்பாட்டியல்" என்ற சொல் .......................மொழியிலிருந்து பெறப்பட்டது.
விடை : கிரேக்க
2.இரு சொற்பெயரிடு முறையை முதன்முதலில் ....................... என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை : கரோலஸ் லின்னேயஸ்
3) ஜெனிரா பிளாண்டாரம் என்று நூலை எழுதியவர்........................
விடை : பெந்தம் மற்றும் ஹீக்கர்
4. ஒரு விதையிலை தாவர விதைகள்....................... வித்திலைகளை மட்டுமே கொண்டுள்ளன.
விடை : ஒரு
5. பழுப்புபாசி .......................... வகுப்பைச் சாரந்தது
விடை : பியோபைசியே
6. அகார் அகார் .................................. என்ற பாசியிலிருந்து பெறப்படுகிறது.
விடை : சிவப்பு பாசிகள்
7. பூஞ்சைகளின் சேமிப்பு பொருள் .................... மற்றும் .....................
விடை : கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய்
8. ........................ முதலாவது உண்மையான நிலத் தாவரம்.
விடை : டெரிடோஃபைட்டுகள்
9. ...................தாவரங்களில் சைலம் மற்றும் ஃபுளோயம் காணப்படுவதில்லை.
விடை : பிரையோஃபைட்
10. .................... தாவரங்களில் வலைப்பின்னல் நரம்பமைவு காணப்படுகிறது.
விடை : இருவிதையிலை
III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறான வாக்கியத்தைத் திருத்தி எழுதுக.
1. பாலிபெட்டலே துணை வகுப்பில் அல்லி இதழ்கள் தனித்தவை.
விடை : சரி
2. இரு சொற்பெயர் இரண்டுக்கு மேற்பட்ட சொற்களைக்கொண்டிருக்கும்
விடை : தவறு - இரு சொற்பெயரில் இரண்டு சொற்களைக்கொண்டிருக்கும்.
3. செயற்கை முறை வகைப்பாடானது தாவரத்தின் ஒருசில புறத்தோற்றப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.
விடை :சரி
4.பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது.
விடை :சரி
5. பைனஸ் ஒரு மூடிய விதைத் தாவரம்
விடை : தவறு - பைனஸ் ஒரு திறந்த விதைத் தாவரம்
6. அனைத்து பிரையோஃபைட்டகளும் நீர் வாழ்த் தாவரங்களாகும்.
விடை :தவறு - அனைத்து பிரையோஃபைட்டகளும் நீர் வாழ்த் தாவரங்கள் அல்ல.
7. இரு விதையிலை தாவரங்கள் ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களை விட நன்கு வளர்ச்சியடைந்த பண்புகளைக் கொண்டுள்ளன.
விடை :சரி
8.பிரையோஃபைட்டுகளில் மாஸ்கள் நன்கு வளர்ச்சியடைந்த தாவரமாகும்.
விடை :சரி
9.பிரையோஃபைட்டுகளில் ஸ்போரோபைட் தாவர நிலை ஓங்கியது.
விடை :தவறு - பிரையோஃபைட்டுகளில் கேமிட்டோபைட்டிக் தாவர நிலை ஓங்கியது.
10. டெரிடோஃபைட்டுகளில் ஸ்போரோபைட் நிலை ஓங்கியது.
விடை :சரி
IV.பொருத்துக.
விடை
V. மிகச்சுருக்கமாக விடையளி.
1.தாலஸ் வரையறு
பாசிகளின் தாள் போன்ற தாவர உடலம் தாலஸ் எனப்படும். தாவர உடலமானது வேர், தண்டு, இலை என்ற வேறுபாடற்றது.
2. இருசொற்பெயரிடு முறை என்பது என்ன? எடுத்துக்காட்டு தருக.
ஓர் உயிரினத்திற்கு இரண்டு சொற்களால் பெயரிடும் முறை இருசொற் பெயரிடுதல் எனப்படும். உதாரணமாக, மாஞ்சிஃபெரா இன்டிகா என்பது மாமரத்தின் தாவரவியல் பெயராகும். இதில் மாஞ்சிஃபெரா என்னும் சொல் பேரினத்தையும், இண்டிகா என்ற சொல் சிற்றினத்தையும் குறிக்கிறது
3.இரு விதையிலைத் தாவரங்களின் இரு பண்புகளை எழுதுக.
விதைகள், இரண்டு விதையிலைகளைக் கொண்டிருக்கின்றன.
இவை ஆணிவேர்த் தொகுப்புடனும், வலைப்பின்னல் நரம்பமைவு கொண்ட இலைகளுடனும் காணப்படுகின்றன.
4. ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களின் விதைகள் திறந்தவை. ஏன்?
ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களின் சூலானது சூற்பையால் சூழப்பட்டிருப்பதில்லை. எனவே இவை திறந்த விதைத் தாவரங்கள் எனப்படும்.
5. பூஞ்சைகளின் ஏதேனும் இரு பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
நுண்ணுயிர்க் கொல்லிகள் பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
காளான்கள் அதிக அளவு புரதத்தையும் தாதுப் பொருள்களையும் கொண்டுள்ளன. உண்ணக்கூடிய பொதுவான காளான் அகாரிகஸ் (பொத்தான் காளான்) வகையைச் சார்ந்தது ஆகும்.
VI. பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி
1.இயற்கை முறை வகைப்பாட்டு முறைபற்றி சுருக்கமாக எழுதுக.
தாவரங்களின் பல்வேறு பண்புகளின் அடிப்படையில் இயற்கை வகைப்பாட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது.
பெந்தம் மற்றும் ஹுக்கரின் வகைப்பாட்டியல் முறை இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
விதைத்தாவரங்களின் புறத்தோற்றப் பண்பு மற்றும் இனப்பெருக்கப் பண்பின் அடிப்படையில் இந்த முறை வகுக்கப்பட்டுள்ளது.
பெந்தம் மற்றும் ஹுக்கர் தங்களது ஜெனிரா பிளாண்டாரம் புத்தகத்தில் மூன்று தொகுதிகளாக இதை விளக்கியுள்ளனர்.
இவ்வகைப்பாட்டு முறை உலகம் முழுவதும் உள்ள உலர் தாவரத் தொகுப்பு நிலையங்களிலும் (ஹெர்பேரியம்) தாவரவியல் தோட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
2. பாசிகளின் ஏதேனும் மூன்று பொருளாதார முக்கியத்துவத்தை
எழுதுக.
வேளாண்மை;
சில நீலப் பச்சைப் பாசிகள் வளி மண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை மண்ணின் வளத்தை அதிகரிக்கின்றன. எ.கா. நாஸ்டாக், அனபீனா
அகார் அகார்:
அகார் அகார் என்பது ஜெலீடியம் மற்றும் கிரேசிலேரியா ஆகிய சிவப்புப் பாசிகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இது ஆய்வகங்களிலுள்ள வளர்ப்பு ஊடகங்களில் பயன்படுகிறது.
அயோடின்:
லேமினேரியா போன்ற பழுப்புப் பாசிகளிலிருந்து அயோடின் பெறப்படுகிறது.
3. பாசிகளுக்கும் பூஞ்சைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
பாசிகள் மற்றும் பூஞ்சைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள்:
4. பிரையோஃபைட்டுகளில் எத்தனை வகுப்புகள் உள்ளது? அவை யாவை?
பிரையோஃபைட்டா தாவரங்கள் மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:
1. ஹெபாட்டிக்கே (ஈரல் வடிவம்) எ.கா. ரிக்சியா
இவை பிரையோஃபைட்டாவின் கீழ்நிலைத் தாவரங்களாகும்
2.ஆந்தோசெரட்டே (கொம்பு வடிவம்) எ.கா. ஆந்தோ செரஸ்
கேமீட்டோஃபைட் வேறுபடுத்த முடியாத தாலஸ் அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் வேர் வளரிகள் ஒரு செல்லுடன் காணப்படுகின்றன. இவற்றில் கிளைகள் கிடையாது.
3.மாஸ்கள் எ.கா. ஃபியூனேரியா
பிரையோஃபைட்டாவில் உள்ள உயர்நிலைத் தாவரங்கள். கேமீட்டோஃபைட் தண்டு, இலை மற்றும் வேர் என வெவ்வேறாக பிரிக்கப்பட் டுள்ளது.
5. டெரிடோஃபைட்டுகளின் ஏதேனும் நான்கு பண்புகளை எழுதுக.
டெரிடோஃபைட்டுகளின் பொதுப் பண்புகள் :
டெரிடோஃபைட்டுகளே சைலம் மற்றும் புளோயம் திசுக்களைக் கொண்டுள்ள முதலாவது உண்மையான நிலத் தாவரங்களாகும். எனவே, இவை கடத்துத் திசுக்களைக் கொண்ட பூவாத் தாவரங்கள் எனப்படுகின்றன.
இதன் உடலானது தண்டு, வேர் மற்றும் இலை என பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றிலும் சந்ததி மாற்றம் நடைபெறுகிறது.
ஸ்போரோஃபைட் சந்ததி ஓங்குதன்மை கொண்டது. ஸ்போரோஃபைட்டானது ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
ஸ்போர்கள் வித்தகத்தினுள் உருவாகின்றன. வித்தகத்தை உருவாக்கும் இலைகள், வித்தக இலைகள் எனப்படும். பெரும்பாலும் அனைத்துத் தாவரங்களும் ஒரே வகையான ஸ்போரை (ஹோமோஸ்போரஸ் = ஒரே ஸ்போர்கள்) உருவாக்குகின்றன. அது மைக்ரோ ஸ்போராகவோ அல்லது மெகா ஸ்போராகவோ இருக்கலாம். சில தாவரங்கள் மைக்ரோ ஸ்போர் மற்றும் மெகா ஸ்போர் எனப்படும் இரண்டு வகையான ஸ்போர்களையும் (ஹெட் டிரோஸ்போரஸ் = இரு வேறுபட்ட ஸ்போர்கள்) உருவாகின்றன.
VI. விரிவாக விடையளி
1. பெந்தம் ஹீக்கர் வகைபாட்டு சுருக்க அட்டவணையை வரைக.
2. இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலைத் தாவரங்களுக்கு இடையே உள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
3. ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களுக்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக
4. ஜிம்னோஸ்பெர்ம்களின் பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
ஜிம்னோஸ்பெர்ம்களின் பொருளாதார முக்கியத்துவம் :
ஊசியிலைத் தாவரங்களின் மரக்கட்டையானது காகிதத் தொழிற்சாலைகளில் தாள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. எ.கா.பைனஸ், அகாத்திஸ்
ஊசியிலைத் தாவரங்களின் மென்கட்டைகள் கட்டுமானத்தொழிலுக்கும் பொருள்களைப் பொதிவதற்கும் மற்றம் ஒட்டுப் பலகைத் தயாரிப்பிற்கும் பயன்படுகிறது.எ.கா. செட்ரஸ், அகாதிஸ்
பைனஸ் தாவரத்தின் பசையிலிருந்து பெறப்படும் டர்பன்டைன், வண்ணப்பூச்சு தயாரிப்பிற்குப் பயன்படுகிறது. மேலும் இது மூட்டுவலி மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
பைனஸ் ஜெரார்டியானா என்னும் தாவரத்தின் விதைகள் உண்பதற்குப் பயன்படும்.
எஃபிடிரின் என்னம் அல்கலாய்டு எஃபிட்ரா என்னும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இது ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
அராவ்கேரியா பிட்வில்லீ என்னும் தாவரம் அழகுத் தாவரமாகப் பயன்படுகிறது.
5. மருத்துவத் தாவரங்களின் பெயர்களை எழுதி அதன் பயன்களை விவரிக்கவும்.
மருத்துவத் தாவரங்களின் பயன்கள்:
அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி) :
• இது யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் இலையை அரைத்துப்
பெறப்படும் பசை, தோலில் உள்ள தீக்காயத்திற்கு மருந்தாகும்.
• இந்த இலையின் சாற்றை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள உருளைப் புழுக்கள் அழியும்.
ஏகில் மார்மிலோஸ் (வில்வம்):
• இது ரூட்டேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
• இதன் காயானது செரிமானக் குறைபாடுகளைச் சரி செய்கிறது.
• இது தீராத வயிற்றுப்போக்கு, சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை):
• இது சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
• இதன் இலைகளும் கனிகளும் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.
• இது காசநோய் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
ஃபில்லாந்தஸ் அமாரஸ் (கீழா நெல்லி):
• கீழா நெல்லி யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
• இதன் தாவர உடலம் முழுவதும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப்
பயன்படுகிறது.
• இது கல்லீரலுக்கு வலிமையைக் கொடுத்து, கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.