VIII-அறிவியல்-விசையும் அழுத்தமும்-மதிப்பீடு- வினா விடைகள்
விசையும் அழுத்தமும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச்
செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது
அ) நின்று விடும் ஆ)அதிக வேகத்தில் இயங்கும்
இ) குறைந்த வேகத்தில் இயங்கும் ஈ)வேறு திசையில் இயங்கும்
விடை : அ)நின்று விடும்
2. திரவத்தினால் பெறப்படும்அழுத்தம் இவற்றாக அதிகரிக்கிறது.
அ) திரவத்தின் அடர்த்தி ஆ) திரவத்தம்ப உயரம்
இ) அ மற்றும் ஆ ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை : ஆ) திரவத்தம்ப உயரம்
3. அழுத்தத்தின் அலகு
அ) பாஸ்கல் ஆ) Nm-2
இ) பாய்ஸ் ஈ) அ மற்றும் ஆ
விடை : ஈ) அ மற்றும் ஆ
4. கடல் நீர் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு
அ) 76 செ.மீ பாதரசத் தம்பம் ஆ) 760 செ.மீ பாதரசத் தம்பம்
இ) 176 செ.மீ பாதரசத் தம்பம் ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை : அ) 76 செ.மீ பாரதசத் தம்பம்
5. பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது.
அ) நீரியல் உயர்த்தி ஆ) தடை செலுத்தி (பிரேக்)
இ) அழுத்தப்பட்ட பொதி ஈ) மேற்கண்ட அனைத்தும்.
விடை : ஈ) மேற்கண்ட அனைத்தும்
6. கீழ்க்கண்ட திரவங்களுள் எது அதிக பாகுநிலை உடையது?
அ) கிரீஸ் ஆ) நீர்
இ) தேங்காய் எண்ணெய் ஈ)நெய்
விடை : ஈ) நெய்
7.பாகுநிலையின் அலகு
அ) Nm2 ஆ) பாய்ஸ்
இ) kgms-1 ஈ) அலகு இல்லை
விடை : ஆ) பாய்ஸ்
II.கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ஆழம் அதிகரிக்கும் போது திரவ அழுத்தம் ____________________
விடை : அதிகரிக்கும்
2. நீரியல் உயர்த்தி_________________விதியை அடிப்படையாகக் கொண்டு
செயல்படுகிறது.
விடை : பாஸ்கல்
3. தாவரங்களில் நீர் மேலேறுவதற்குக் காரணம் ____________________என்ற
திரவப் பண்பே ஆகும்.
விடை : நுண்புழையேற்றம்
4. எளிய பாதரசமானி முதன்முதலில்____________________ என்பவரால் உருவாக்கப்பட்டது.
விடை : டாரிசெல்லி
III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.
1.கொடுக்கப்பட்ட பரப்பில் செயல்படும் விசை அழுத்தம் எனப்படும்
விடை : சரி
2. இயங்கும் பொருள் உராய்வின் காரணமாக ஓய்வு நிலைக்கு வருகிறது.
விடை : சரி
3.மிதப்பு விசையை விட அதிக எடை கொண்ட பொருள் மூழ்கும்
விடை : சரி
4. ஒரு வளி அழுத்தம் என்பது ஒரு சதுர மீட்டரில் செயல்படும்
100000 நியூட்டன் விசைக்குச் சமம்.
விடை : சரி
5.உருளும் உராய்வு நழுவு உராய்வை விட சற்று அதிகமாக இருக்கும்
விடை : தவறு,உருளும் உராய்வு நழுவு உராய்வை விட சற்று குறைவாகவே இருக்கும்.
6. ஆற்றல் இழப்பிற்கு உராய்வு மட்டுமே காரணம்
விடை : தவறு
7. ஆழம் குறைந்தால் திரவ அழுத்தம் குறையும்.
விடை : சரி
8. பாகுநிலை திரவத்தின் அழுத்தத்தைச் சார்ந்தது
விடை : தவறு
IV. பொருத்துக
விடை
ஆ.
விடை
V.ஒப்பிட்டு விடை தருக.
1. நூலில் போடப்பட்டுள்ள முடிச்சு : நிலை உராய்வு::பந்து தாங்கிகள் : .........................உராய்வு
விடை : உருளும் உராய்வு
2. கீழ் நோக்கிய விசை : எடை:: திரவங்களால் தரப்படும் மேல்நோக்கிய விசை : ..............................
விடை : மிதப்பு விசை
VI. கணக்குகள்
1. ஒரு கல்லின் எடை 500N எனில் 25 செ.மீ2 பரப்புடைய தளத்தில் கல்லினால் ஏற்படும் அழுத்தத்தை கணக்கிடுக.
கல்லின் எடை (விசை)= 500N
பரப்பு= 25 செ.மீ2
25
= -----மீ2 =0.25 மீ2
100
விசை 500 50000
அழுத்தம் =-------- = ----- = ------- = 2000 Nm-2
பரப்பு 0.25 25
அழுத்தம் = 2000 Nm-2
VII. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வுசெய்.
1. கூற்று: கூர்மையான கத்தி காய்கறிகளை வெட்டப் பயன்படுகிறது.
காரணம்: கூர்மையான முனைகள் அதிக அழுத்தத்தைத் தருகின்றன.
2.கூற்று:தோள் பைகளில் அகலமான பட்டைகள் அமைக்கப்படுகின்றன.
காரணம்: அகலமான பட்டைகள் நீண்ட நாள் உழைக்கும்
3.கூற்று: நீர்ச் சிலந்தி தண்ணீரின் மேற்பரப்பில் எளிதாக நகர்ந்து செல்கிறது.
காரணம்: நீர்ச் சிலந்தி குறைவான மிதப்பு விசையை உணர்கிறது.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை :
1. அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம்கூற்றுக்கான சரியான விளக்கத்தைத் தருகிறது.
2.ஆ.கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
3. இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு
VIII. மிகச் சுருக்கமாக விடையளி.
1.விசை, ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும் செயலுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
பலூனில் காற்றை ஊதும் பொழுது ஏற்படும் மாற்றம்.
ஸ்பாஞ்சை அழுத்தும் பொழுது அதன் வடிவத்தில் ஏற்படும் மாற்றம்.
2. ஒரு பொருளின் நிலைப்புத் தன்மையை விசை மாற்றுகிறது என்பதற்கு இரு உதாரணங்கள் தருக.
கால்பந்து ஓய்வில் இருக்கும்பொழுது அதன் மீது செலுத்தப்படும் விசை.
சப்பாத்தி தயாரிக்கும் பொழுது அதன் மாவின் மீது செலுத்தப்படும் விசை
3. மரப்பலகையில் இரும்பு ஆணி ஒன்று சுத்தி கொண்டு அடிக்கப்படுகிறது. சுத்தியால் ஆணி அடிக்கப்பட்டவுடன் ஆணியைத் தொடும்போது என்ன உணர்கிறாய்? ஏன் அவ்வாறு நிகழ்கிறது?
மிதமான வெப்பத்தை உணரலாம்.உராய்வு விசையின் காரணமாக அவ்வாறு நிகழ்கிறது.
4. ஒப்புமை இயக்கத்தில் இருக்கும் இரு பொருள்களின் புறப்பரப்புகளுக்கு இடையே உராய்வு எவ்வாறு உருவாகிறது?
ஒப்புமை இயக்கத்தில் இருக்கும் இரு பொருட்களின் ஒழுங்கற்ற வடிவியல் பரப்பின் காரணமாக உராய்வு விசை உருவாகிறது.
5. திரவ அழுத்தத்தை அளவிட உதவும் இரு கருவிகளின் பெயர்களைக் கூறுக.
திரவ அழுத்தத்தை அளவிட உதவும் இரு கருவிகள்
மானோமீட்டர் மற்றும்
பாரோ மீட்டர்.
6. ஒரு வளிமண்டல அழுத்தம் - வரையறு.
ஒரு வளிமண்டல அழுத்தம் என்பது திரவத்தம்பத்தில் உள்ள பாதரசத்தின் மீது காற்று செலுத்தும் அழுத்தம் என கருதப்படுகிறது.
7. அதிக எடையைச் சுமக்க உதவும் பைகளின் பட்டைகள் அகலமாக அமைக்கப்படுவது ஏன்?
முதுகில் சுமந்து செல்லும் பைகள் தோளின் மீது செலுத்தும்
அழுத்தத்தை குறைக்கவும், தோளின்மீதான தொடு பரப்பை
அதிகரிக்கவும் அகலமான பட்டைகள் அமைக்கப்படுகின்றன.
8. பரப்பு இழுவிசை தாவரங்களுக்கு எவ்வாறு உதவுகிறது?
தாவரங்களில் பரப்பு இழுவிசை காரணமாக, நீர் மேலே செல்கிறது. தாவரங்களில் சைலம் எனப்படும் மிக நுண்ணிய குழாய்கள்
காணப்படுகின்றன. தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்படும் நீர் மூலக்கூறுகள் இத்திசுக்குழாய்கள் வழியே நுண்புழை ஏற்றம்காரணமாக மேல்நோக்கிச் செல்கின்றன.
9. எண்ணெய் மற்றும் தேன் இவற்றுள் அதிக பாகுநிலை கொண்டது எது? ஏன்?
எண்ணெய் அதிக பாகுநிலை கொண்டது. ஒவ்வொரு திரவமும் உராய்வு விசையின் காரணமாக வெவ்வேறு வேகத்தில் இயங்கும். திரவங்கள் இயங்கும் போது அவற்றின் திரவ அடுக்குகளுக்கு இடையே அவற்றிற்கு இணையாக ஒரு உராய்வு விசை செயல்படுகிறது. தேன் எண்ணெயை விட வேகமாக இயங்குவதால் குறைவான பாகியல் விசையைக் கொண்டுள்ளது.
IX. சுருக்கமாக விடையளி.
1. உராய்வை வரையறு. அன்றாட வாழ்வில் உராய்வின்பயன்பாட்டிற்கு இரு உதாரணம் தருக.
ஒரு பொருளின் இயக்கத்தை எதிர்க்கும் விசைக்கு உராய்வு என்று
பெயர். உதாரணம் :
தீக்குச்சியை உரசிப் பற்றவைப்பது
துணியைத் தைப்பது
2. உராய்வைக் குறைக்க ஏதேனும் மூன்று வழிமுறைகளைக் கூறுக.
தொடுபரப்பை குறைத்தல்
உயவுப் பொருள்களை பயன்படுத்துதல்
பந்து தாங்கிகளைப் பயன்படுத்துதல்
3. பாஸ்கல் விதியைக் கூறி அதன் பயன்பாடுகளைத் தருக.
பாஸ்கல் விதி:
மூடிய அமைப்பில் ஓய்வுநிலையில் உள்ள திரவத்தின் எந்தவொரு புள்ளியிலும் அளிக்கப்படும் அழுத்தமானது அத்திரவத்தின் அனைத்துப்புள்ளிகளுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும் என்பது பாஸ்கல் விதியாகும்.
வாகனங்களை பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த பாஸ்கல் விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
வாகனங்களில் உள்ள வேகத்தடை அமைப்பு பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
4. மிதிவண்டியின் அச்சுகளில் பந்து தாங்கிகள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன?
உருளும் உராய்வு நழுவு உராய்வை விட குறைவாக இருப்பதால் பந்து தாங்கிகளைக் கொண்டு நழுவு உராய்வை உருளும் உராய்வாக மாற்றலாம். இந்தக் காரணத்திற்காகவே மிதிவண்டிகளின் சக்கர அச்சில் காரீயத்தினாலான பந்துத் தாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
X.விரிவாக விடையளி
1. உராய்வு ஒரு தேவையான தீமை விளக்குக.
உராய்வின் காரணமாக எந்தவொரு பொருளையும் நம்மால் பிடிக்க முடிகிறது.
உராய்வின் காரணமாகவே நம்மால் சாலைகளில் நடக்க முடிகிறது. செருப்பும், தரையும் நாம் நழுவி கீழே விழாமல் நடக்க உதவுகின்றன.
உராய்வின் காரணமாகவே பேனாவைக் கொண்டு காகிதத்தில் எழுத முடிகிறது.
சக்கரத்திற்கும் சாலைக்கும் இடையேயான உராய்வு விசை பாதுகாப்பான பயணத்திற்குக் காரணமாக உள்ளது.
இயங்கும் வாகனத்தை நிறுத்த தடையைச் செலுத்தும் போது உராய்வின் காரணமாகவே வாகனம் ஓய்வு நிலைக்கு வருகிறது.
தீக்குச்சியைக் கொளுத்துவது, துணியைத் தைப்பது,முடிச்சுக்களைப் போடுவது, சுவற்றில் ஆணியை அடிப்பது என அனைத்திற்கும் உராய்வே காரணமாக உள்ளது.
உராய்வின் உதவியால் அன்றாட வாழ்வில் பெரும்பாலான வேலைகலை எளிதாக செய்ய முடிந்தாலும் இதனால் சில தீய விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே உராய்வை தேவையான தீமை என்றழைக்கின்றனர்.
2. உராய்வின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
உராய்வானது இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.
அவை,
நிலை உராய்வு மற்றும்
இயக்க உராய்வு ஆகும்.
நிலை உராய்வு:
ஓய்வு நிலையில் இருக்கும் பொருள்களில் காணப்படும் உராய்வு நிலை உராய்வு எனப்படும். எ.கா: புவியிலுள்ள பொருள்கள் அனைத்தும்
ஓய்வுநிலையில் நிலையாக உள்ளன.
இயக்க உராய்வு:
பொருள்கள் இயக்கத்தில் இருக்கும்போது ஏற்படும் உராய்வு இயக்க உராய்வு எனப்படும்.
இயக்க உராய்வானது
நழுவு உராய்வு மற்றும்
உருளும் உராய்வு என மேலும் இரு பிரிவுகளாக
வகைப்படுத்தப்படுகிறது.
ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் நழுவும்போது இரண்டு பொருள்களின் பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வு நழுவு உராய்வு எனப்படும்.
ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் உருளும் போது அந்த இரண்டு பொருள்களின் மேற்பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வு உருளும் உராய்வு எனப்படும்.
உருளும் உராய்வு நழுவு உராய்வை விட குறைவாக இருக்கும். இதன் காரணமாகவே வாகனங்கள், தள்ளுவண்டிகள்மற்றும் பெட்டிகளில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
3. உராய்வு, பரப்பின் தன்மையைச் சார்ந்தது என்பதை நிரூபிக்கும் சோதனையை விளக்குக.
பரப்பின் தன்மை உராய்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதை கீழே உள்ள செயல்பாடு விளக்குகிறது.
i)ஒரு பென்சில் அல்லது கோலிக்குண்டை எடுத்து சுத்தமான மேசையின் மீது வைக்கவும்
ii) பென்சில் அல்லது கோலிக்குண்டை கையால் சிறிது தள்ளி விட்டு, அது நிற்கும் இடத்தை குறிக்கவும்.
iii) இப்போது மேஜையில் சிறிது எண்ணெய் ஊற்றவும், அது மேசையில் சமமாகப் பரப்பிவிடப்படுவதை உறுதிசெய்யவும்.
iv) இப்பொழுது i) மற்றும் (ii) செயல்களை மீண்டும் செய்யவும்
v) முதல் மற்றும் இரண்டாவது செயல்பாடுகளுக்கு இடையிலான தூரத்தின் வேறுபாட்டைக் கவனியுங்கள்
vi)முதல் செயலுடன் ஒப்பிடும்போது இரண்டாவது செயல்பாட்டில் (மேசையில் எண்ணெயைப் பயன்படுத்திய பிறகு) உள்ள தூரம் அதிகமாக இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.
இரண்டாவது முறையில் குறைந்த உராய்வு இருப்பதால், தூரம் அதிகமாகி இது எளிதாகிறது.
இச்செயல்பாடு பரப்பின் தன்மையைப் பொறுத்து உராய்வு விசையின் அதிகரிப்பு அல்லது குறைவு வெளிப்படுகிறது என்பது நிரூபனமாகிறது.
4. உராய்வு எவ்வாறு குறைக்கப்படுகிறது என்பதை விளக்குக.
உயவுப் பொருள்களை பயன்படுத்துதல்:
உராய்வைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள் உயவுப்பொருள் எனப்படும். எ.கா. கிரீஸ், தேங்காய் எண்ணெய், கிராஃபைட், விளக்கெண்ணெய்.
இரண்டு பொருட்களின் ஒன்றையொன்று தொடும் ஒழுங்கற்ற பரப்புகளின் இடையில் உயவுப் பொருள்கள் சென்று நிரம்புவதால் அவைகளுக்கு இடையே ஒரு வழவழப்பான உறை உருவாகிறது.
இது இரு பரப்புகளுக்கான நேரடித் தொடர்பைத் தடுத்து உராய்வை குறைக்கிறது.
பந்து தாங்கிகளை பயன்படுத்துதல்:
உருளும் உராய்வு நழுவும் உராய்வை விட குறைவாக இருப்பதினால் பந்து தாங்கிகளைக் கொண்டு நழுவு உராய்வை உருளும் உராய்வாக மாற்றலாம்.
மிதிவண்டிகளின் சக்கர அச்சில் காரீயத்தினாலான பந்து தாங்கிகள் பயன்படுத்துவது இதுவே காரணமாகும்.
5. ஆழத்தைச் சார்ந்து அழுத்தம் அதிகரிக்கிறது என்பதை நிரூபிக்கும் சோதனையை விளக்குக.
சோதனை :
ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரே திசையில் மூன்று வெவ்வேறு உயரங்களில் மூன்று துளைகள் இடவும். நீரைக் கொண்டு பாட்டிலை நிரப்பவும். துளைகளின் வழியாக வெளியேறும் நீரை உற்று நோக்கவும்.
கூர்ந்து நோக்கியது :
மூன்று துளைகளின் வழியாக வெவ்வேறு விசைகளுடன் நீர் வெளியேறுகிறது. அடிப்பாகத்தின் அருகே உள்ள துளை வழியாக அதிக விசையுடன் நீர் வெளியேறுகிறது. மேலும் பாட்டிலிலிருந்து நீர் நீண்ட தொலைவில் போய் விழுகிறது. பாட்டிலின் மேற்புறம் உள்ள துளை வழியாக குறைந்த விசையுடன் நீர் வெளியேறுகிறது. பாட்டிலில் இருந்தும் குறைந்த தொலைவில் போய் விழுகிறது.
விளைவு :
இந்த செயல்பாட்டின் மூலம் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க திரவங்களால் செலுத்தப்படும் அழுத்தமும் அதிகரிக்கிறது என்பது உறுதியாகிறது.
XI. உயர் சிந்தனை வினாக்கள்
1. வானூர்தியில் பயணம் செய்யும் போது மை பேனாவைப் பயன்படுத்த ஏன் பரிந்துரைப்பதில்லை?
பொதுவாக மை பேனாக்கள் கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்துடன், அழுத்தத்தை சமன் செய்யும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. உயரத்தின் அதிகரிப்புடன் வளிமண்டல அழுத்தம் குறையும் போது, விமானங்களில் வைக்கப்படும் மைபேனா விமானத்தில் உள்ள காற்று அழுத்தத்தை விட பேனாவின் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் கசியத் தொடங்குகிறது.
2. உராய்வின் எண் மதிப்பை நேரடியாக அளவிட உதவும் சிறப்புமிக்க கருவியை உருவாக்க ஏதேனும் சாத்தியக் கூறுகள் உள்ளனவா?
ஆம் சாத்தியக் கூறுகள் உள்ளன. உராய்வின் எண் மதிப்பை நேரடியாக அளவிட உதவும் கருவியின் பெயர் டிரிபோமீட்டர்.
3. பாதரசம் விலை உயர்ந்தது என வித்யா நினைக்கிறாள். எனவே, பாதரசத்திற்குப் பதிலாக காற்றழுத்தமானியில் நீரைப் பயன்படுத்த அவள் விரும்புகிறாள். தண்ணீர் காற்றழுத்தமானி அமைப்பதில் உள்ள
சிக்கல்களைக் கூறு.
நாம் தண்ணீரை ஒரு காற்றழுத்தமானியில் பாரோமெட்ரிக் திரவமாகப் பயன்படுத்தலாம், ஆனால் நீர் மற்றும் பாதரசத்திற்கு இடையிலான அடர்த்தி வேறுபாடு 13.6 மடங்கு அதிகம். எனவே, பாதரச காற்றழுத்தமானியில் அளவிடப்பட்ட அதே அழுத்தத்தைப் பெற அதற்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டிய (COLUMN)நெடுவரிசையின் உயரமும் அமைக்கப்படவேண்டும்.
பாதரசம் அதன் அதிக அடர்த்தி காரணமாக மட்டுமே காற்றழுத்தமானிகளில் பயன்படுத்தப்படுகிறது மேலும் (COLUMN)நெடுவரிசையின் அளவையும் தேவேயான அளவில் உருவாக்க வேண்டும்.