6 - அறிவியல் - வெப்பம் - மதிப்பீடு - வினா-விடைகள்

 வகுப்பு - 6


வெப்பம்


மதிப்பீடு


I. சரியான விடையைத் தேர்ந்தெடு.


1. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது அதிலுள்ள மூலக்கூறுகள்

அ)வேகமாக நகரத் தொடங்கும் 

ஆ) ஆற்றலை இழக்கும்

இ) கடினமாக மாறும்

ஈ) லேசாக மாறும்

விடை : அ)வேகமாக நகரத் தொடங்கும்


2. வெப்பத்தின் அலகு

அ) நியூட்டன்

ஆ) ஜூல்

இ) வோல்ட்

ஈ) செல்சியஸ்

விடை : ஆ) ஜூல்


3. 30°C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50°C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச்சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை 

அ) 80°C

ஆ) 50°C க்கு மேல் 80°C

இ) 20°C

ஈ) ஏறக்குறைய 40°C


விடை : ஈ) ஏறக்குறைய 40°C


4. 50°C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக்குண்டினை, 50°C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது

அ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்

ஆ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்கோ மாறாது

இ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்

ஈ) இரண்டின் வெப்பநிலை உயரும்

விடை:ஆ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்கோ மாறாது


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.


1. வெப்பம் ............... பொருளிலிருந்து ................... பொருளுக்குப் பரவும்

விடை :  உயர் வெப்ப நிலையில் உள்ள , குறைந்த வெப்ப நிலையில் உள்ள 


2. பொருளின் சூடான நிலையானது ............... கொண்டு கணக்கிடப்படுகிறது.

விடை : வெப்பநிலைமானி


3. வெப்பநிலையின்SI அலகு ..................

விடை : கெல்வின்


4. வெப்பப்படுத்தும் பொழுது திடப்பொருள் ............... மற்றும் குளிர்விக்கும் பொழுது ...................

விடை : விரிவடையும், சுருங்கும்


5. இரண்டு பொருள்களுக்கிடையே வெப்பப் பரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ...................நிலையில் உள்ளன

விடை : வெப்பச்சமநிலையில்


III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தறவாக இருப்பின் சரியாக எழுதவும்.


1. வெப்பம் என்பது ஒருவகை ஆற்றல். இது வெப்பநிலை அதிகமான பொருளிலிருந்து வெப்பநிலை குறைவான பொருளிற்கு பரவும்.

விடை : சரி


2. நீரிலிருந்து வெப்பம் வெளியேறும் பொழுது, நீராவி உருவாகும்.

விடை : சரி


3. வெப்ப விரிவு என்பது பொதுவாக தீங்கானது.

விடை : தவறு. அனைத்து வெப்ப விரிவாக்கங்கள் தீங்கானது அல்ல, சில பயனுள்ள வெப்ப விரிவாக்கங்களும் உள்ளன.


4. போரோசிலிகேட் கண்ணாடியானது வெப்பப்படுத்தும் பொழுது அதிகம் விரிவடையாது.

விடை : சரி


5. வெப்பம் மற்றும் வெப்பநிலை இரண்டும் ஒரே அலகினைப் பெற்றுள்ளன. 

விடை: தவறு . 

வெப்பத்திற்கான அலகு ஜூல், வெப்பநிலைக்கான அலகு கெல்வின், இரண்டும் வெவ்வேறு அலகினைப் பெற்றுள்ளன.


IV. கீழ்க்கண்டவற்றிற்கு காரணம் தருக.


1. கொதிக்கவைத்த நீரை சாதாரண கண்ணாடி முகவையில் ஊற்றும்பொழுது, விரிசல் ஏற்படுகிறது. ஆனால் போரோசில் கண்ணாடி முகவையில் ஊற்றும்பொழுது விரிசல் ஏற்படுவதில்லை.


  • கொதிக்கவைத்த நீரை போரோசில் கண்ணாடி முகவையில் ஊற்றும்பொழுது வெப்பத்தினால் அவை  மிக மிகக் குறைவாகவே விரிவடையும். எனவே அதில் விரிசல் ஏற்படுவதில்லை

  • சாதாரண கண்ணாடியில் கொதிக்கும் நீரை ஊற்றும்போது, ​​கண்ணாடியின் மேற்பரப்பு வெப்ப விரிவாக்கத்தின் குணகத்தின் படி விரிவடைகிறது. ஆனால் கண்ணாடியின் வெளிப்புற அடுக்கு அறை வெப்பநிலையில் உள்ளது மற்றும் விரிவடையாது. வெப்ப விரிவாக்கத்தில் ஏற்படும் இந்த வேறுபாடுகள் சாதாரண கண்ணாடி முகவையை வெடிக்கச் செய்துவிடும்.



2. மின்கம்பங்களில் உள்ள மின்கம்பியானது கோடைக்காலங்களில் தொய்வாகவும், குளிர்காலங்களில் நேராகவும் இருக்கும்.


  • கோடைக்காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்பொழுது, உலோகங்கள் விரிவடைவதால் மின்கம்பி தொய்வாக இருக்கும்

  • குளிர்காலங்களில் வெப்பம் குறைவாக இருப்பதால், உலோகங்கள் சுருங்கி மின்கம்பி நேராக இருக்கும்.


3. இரு உலோகத் தகடுகளைப் பிணைப்பதற்காக அறையப்படும் முன் கடையாணி வெப்பப்படுத்தப்படுகிறது.


  • நன்கு வெப்பப்படுத்தப்பட்ட கடையாணியை தகடுகளின் துளை வழியே பொருத்தி வெப்பப்படுத்தி கடையாணி உலோகத் தகடுகளை பிணைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

  • கடையாணி குளிரும் பொழுது சுருங்குவதால் இரு உலோகத் தகடுகளையும் இறுகப் பிடித்துக் கொள்ளும்.

  • எனவே பிணைப்பதற்காக அறையப்படும் முன் கடையாணி வெப்பப்படுத்தப்படுகிறது.


V. பொருத்துக :


வெப்பம்

0°C

வெப்பநிலை

100°C

வெப்பச்சமநிலை

கெல்வின்

பனிக்கட்டி

வெப்பம் பரிமாற்றம் இல்லை

கொதிநீர்

ஜூல்


விடை :


வெப்பம்

ஜூல்

வெப்பநிலை

கெல்வின்

வெப்பச்சமநிலை

வெப்பம் பரிமாற்றம் இல்லை

பனிக்கட்டி

0°C

கொதிநீர்

100°C


VI. ஒப்புமை தருக :


1. வெப்பம்  : ஜூல்  :: வெப்பநிலை:_________________ 

விடை : கெல்வின்


2. பனிக்கட்டி  : 0°C  :: கொதிநீர்: _________________

விடை : 100°C 


3. மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல்  :  வெப்பம்  ::

சராசரி இயக்க ஆற்றல்   :  _________________

விடை : வெப்பநிலை


VII.  மிகக் குறுகிய விடையளி :


1. வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிலிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் எனப் பட்டியலிடுக.


  • மின் இஸ்திரிப்பெட்டி

  • மின் வெப்பக்கலன்

  • மின் நீர்சூடேற்றி


2. வெப்பநிலை என்றால் என்ன?.

ஒரு பொருள் எந்த அளவிற்கு வெப்பமாக உள்ளது அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதனை அளவிடும் அளவுக்கு வெப்பநிலை என்று பெயர்.


3. வெப்பவிரிவு என்றால் என்ன?

ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது அது விரிவடைவதை அப் பொருளின் வெப்பவிரிவு என்கிறோம்.


4. வெப்பச்சமநிலை பற்றி நீ அறிந்ததைக் கூறுக.

  • வெப்பத்தொடரில் உள்ள இருபொருட்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அவை வெப்பச் சமநிலையில் உள்ளன எனப்படுகிறது.

  • அந்த வெப்பநிலையில் ஒன்றின் வெப்பநிலை மற்றொன்றை பாதிப்பதில்லை.


VIII.  குறுகிய விடையளி :


1. வெப்பத்தினால் திடப்பொருள்களின் மூலக்கூறுகளில்ஏற்படும் மாற்றங்களை விவரி

  • ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, மூலக்கூறுகளின் அதிர்வும், இயக்கமும் அதிகரிக்கிறது.

  • இந்த அதிர்வு ஒரு மூலக்கூறிலிருந்து அடுத்த மூலக்கூறுக்கு கடத்தப்படுவதால் வெப்பம் பரவுகிறது.

  • வெப்பத்தினால் மூலக்கூறுகளுக்கிடையே இடைவெளி அதிகரிக்கிறது.

  • இதனால் பொருள்களின் எல்லாப் பக்கங்களான நீளம், பரப்பளவு, கனஅளவு போன்றவை விரிவடைகின்றன.


2. வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.


வெப்பம்

வெப்பநிலை

வெப்பமானது வெப்ப நிலையை மட்டுமல்ல, ஒரு பொருளில் எவ்வலவு மூலக்கூறுகள் உள்ளன என்பதையும் பொறுத்தது

வெப்ப நிலையானது ஒரு பொருளிலுள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வளவு வேகத்தில் இயங்குகின்றன அல்லது அதிர்கின்றன என்பதைப் பொறுத்தது

வெப்பமானது அப்பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றலைக் குறிப்பிடும் ஊர் அளவீடு.

வெப்ப நிலையானது மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலைக் குறிப்பிடும் ஓர் அளவீடு.

வெப்ப ஆற்றலின் அலகு கலோரி

வெப்ப நிலையின் அலகு கெல்வின்


IX. விரிவான விடையளி :


1. வெப்பவிரிவைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.


ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது அது விரிவடைவதை அப்பொருளின் வெப்ப விரிவடைதல் என்கிறோம்.


அ) மரச்சக்கரத்தின் மீது இரும்பு வளையத்தைப் பொறுத்துதல்:

  • மரச்சக்கரத்தின் விட்டமானது இரும்பு வளையத்தின் விட்டத்தை விட பெரியதாக இருந்தால் இரும்பு வளையத்தை முதலில் வெப்பப்படுத்த வேண்டும். வெப்பத்தினால் இரும்பு வளையம் விரிவடையும். 

  • அப்பொழுது மரச்சக்கரத்தின் மீது இரும்பு வளையத்தை பொருத்தி இரும்பு வளையத்தைக் குளிர்ந்த நீரால் குளிர்வித்தால் இரும்பு வளையம் சுருங்கும். எனவே இரும்பு வளையம் மரச்சக்கரத்தின் மீது இறுக்கமாகப் பொருந்தும்.


ஆ) கடையாணி:

  • இரண்டு உலோகத் தகடுகளை ஒன்றிணைக்க நன்கு வெப்பப்படுத்தப்பட்ட கடையாணி தகடுகளின் துளை வழியே பொருத்தப்படுகிறது. 

  • கடையாணியின் அடிப்பக்க முனையைச் சுத்தியலைக் கொண்டு அடித்து மறுபுறம் ஒரு புதிய தலைப்பகுதி உருவாக்கப்படுகிறது. கடையாணி குளிரும்பொழுது சுருங்குவதால், அது இரண்டு தகடுகளையும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்கின்றது.



Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்