6 - தமிழ் - மூதுரை - மதிப்பீடு - வினா - விடைகள்

 வகுப்பு - 6

மூதுரை


மதிப்பீடு:


I. சொல்லும் பொருளும்:

மாசற - குறை இல்லாமல்

சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்து

தேசம் - நாடு


II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. மாணவர்கள் நூல்களை.......................கற்கவேண்டும்

அ) மேலோட்டமாக 

ஆ) மாசுற

இ) மாசற 

ஈ) மயக்கமுற 

விடை : இ) மாசற


2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இடம் + மெல்லாம் 

ஆ) இடம் + எல்லாம்

இ) இட + எல்லாம் 

ஈ) இட + மெல்லாம்

விடை : ஆ) இடம் + எல்லாம்


3. மாசற எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) மாச + அற 

ஆ) மாசு + அற

இ) மாச + உற 

ஈ) மாசு + உற 

விடை : ஆ) மாசு+ அற


4. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) குற்றமில்லாதவர் 

ஆ) குற்றம் இல்லாதவர்

இ) குற்றமல்லாதவர் 

ஈ) குற்றம் அல்லாதவர்

விடை : அ) குற்றமில்லாதவர்


5. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) சிறப்புஉடையார் 

ஆ) சிறப்புடையார்

இ) சிறப்படையார் 

ஈ) சிறப்பிடையார்

விடை : ஆ) சிறப்புடையார்


III. குறுவினா :


1. கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?


  • மன்னனையும், குறை இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால், மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர், என்றும்

  • மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு, கல்வி கற்றவருக்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு,

என்றும் கற்றவரின் பெருமைகளை மூதுரை கூறுகிறது.


IV. சிறுவினா :


1.கல்வியின் சிறப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?


கல்வியின் சிறப்புகளில் சில :

  • கல்வி மனிதனை முழு மனிதனாக மாற்றுகிறது, உயர்த்துகிறது.

  • கல்வியும் ஒருவகை செல்வமாகவே கருதப்படுகிறது.

  • பிறருக்குத் தந்தாலும் குறையாமல், வளரும் தன்மையுடைய ஒன்று கல்வி மட்டுமே.

  • கல்வியை யாராலும் கொள்ளை கொள்ளவோ, அழிக்கவோ முடியாது.

  • கல்வியைக் கற்றவன் எங்கு சென்றாலும், எப்போதும் சிறப்பு பெறுவான்.

  • கல்வி கற்றவரே கண்ணுடையவர்.


V. சிந்தனை வினா :

1. கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிடுக.


  • கல்லாதவர் தனது சொத்து, செல்வங்களை பாதுகாக்க கற்றவரை நம்பியே இருக்க வேண்டும், சுயமாகப் பாதுகாக்க முடியாது.

  • குறைந்தபட்ச கல்வித் தகுதி இல்லயென்றால், இன்றைய சூழ்நிலையில் வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் கூடப் பெற இயலாது.

  • திறமைகள் இருந்தாலும், கல்லாதவரால் சிறந்த பணிகளில் பணிபுரிய இயலாது. கீழ்நிலைப் பணிகள் மட்டுமே பணிபுரிய முடியும்.

  • கல்லாதவர்கள், பல சமயங்களில் அடுத்தவரை நம்பியே வாழும் சூழல் உள்ளது.


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்