7-தமிழ்- கலங்கரை விளக்கம்- மதிப்பீடு-வினா-விடைகள்
வகுப்பு - 7

மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வேயாமாடம் எனப்படுவது ______.
அ) வைக்கோலால் வேயப்படுவது
ஆ) சாந்தினால் பூசப்படுவது
இ) ஓலையால் வேயப்படுவது
ஈ) துணியால் மூடப்படுவது
விடை: ஆ) சாந்தினால் பூசப்படுவது
2. உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ______.
அ) காற்று
ஆ) வானம்
இ) கடல்
ஈ) மலை
விடை: இ) கடல்
3. கடலில் துறை அறியாமல் கலங்குவன ______.
அ) மீன்கள்
ஆ) மரக்கலங்கள்
இ) தூண்கள்
ஈ) மாடங்கள்
விடை: ஆ) மரக்கலங்கள்
4. தூண் என்னும் பொருள் தரும் சொல் ______.
அ ) ஞெகிழி
ஆ) சென்னி
இ) ஏணி
ஈ) மதலை
விடை: ஈ) மதலை
II. குறுவினா
1. மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?
மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது கலங்கரை விளக்கின் ஒளி ஆகும்.
2. கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?
கலங்கரை விளக்கில் இரவு நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்.
III. சிறுவினா
1. கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகளை எழுதுக.
கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்து விடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போலத் தோற்றம் அளிக்கிறது.
அது ஏணி கொண்டு ஏறமுடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது.
வைக்கோலால் வேயப்படாமல் திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடத்தை உடையது.
அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறை நோக்கி அழைக்கிறது.
IV. சிந்தனை வினா
1.கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
துறைமுகம் எங்குள்ளது என்பதை கடலில் பயணம் செய்பவர்கள், கப்பற்படை வீரர்கள் போன்றவர்களுக்கு அறிவிக்க உதவுகிறது.
கடலில் ஆய்வு செய்பவர்களுக்கு உதவுகிறது.
மீனவர்கள் திசைமாறிச் சென்று விடாமல் இருக்க வழிகாட்டியாக இருக்கிறது.