வ7 ப2 பா1 அறிவியல் - வெப்பம் மற்றும் வெப்பநிலை - மதிப்பீடு - வினா-விடைகள்
வகுப்பு - 7
வெப்பம் மற்றும் வெப்பநிலை
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. வெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை------------------
அ. கெல்வின்
ஆ. பாரன்ஹீட்
இ. செல்சியஸ்
ஈ. ஜூல்
விடை: அ. கெல்வின்
2. வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்
அ. விரிவடைகிறது
ஆ. சுருங்குகிறது
இ. அதே நிலையில் உள்ளது
ஈ. மேற்கூறிய ஏதுமில்லை.
விடை: அ. விரிவடைகிறது
3. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை
அ. 0°C
ஆ. 37°C
இ. 98°C
ஈ. 100°C
விடை: ஆ. 37°C
4. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம். அது ----------
அ. பாதுகாப்பான திரவம்
ஆ. தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது.
இ. ஒரே சீராக விரிவடையக்கூடியது.
ஈ. விலை மலிவானது
விடை: இ. ஒரே சீராக விரிவடையக்கூடியது.
5. கீழே உள்ளவற்றில் எந்த இணைதவறானது
K ( கெல்வின்) = °C ( செல்சியஸ்) + 273.15
°C K
அ. - 273.15 0
ஆ. - 123 +150.15
இ. + 127 +400.15
ஈ. + 450 +733.15
விடை: ஈ. + 450 +733.15
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மருத்துவர்கள் -------------- வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி மனிதனின் உடல் வெப்பநிலையினை அளவிடுகின்றனர்.
விடை: மருத்துவ
2. அறைவெப்ப நிலையில் பாதரசம் --------- --- நிலையில் காணப்படுகிறது.
விடை: திரவ
3. வெப்பஆற்றலானது ------------- பொருளில் இருந்து ---------பொருளுக்கு மாறுகிறது.
விடை: சூடான, குளிர்ச்சியான,
4. -7°C வெப்பநிலையானது 0°C வெப்பநிலையினை விட ----------.
விடை: குறைவானது
5. பொதுவாக பயன்படுத்தப்படும் ஆய்வக வெப்பநிலைமானி ----------------- வெப்பநிலைமானி ஆகும்.
விடை: பாதரச
III. பொருத்துக
விடை:
IV. மிகக் குறுகிய விடையளி
1. ஸ்ரீநகரின் (ஜம்மு & காஷ்மீர்) வெப்பநிலை-4°C மேலும் கொடைக்கானலின் வெப்பநிலை 3°C. இவற்றில் எப்பகுதியின் வெப்பநிலை அதிகமாகும். அப்பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு எவ்வளவு?
கொடைக்கானலின் வெப்பநிலை அதிகமாகும்.
ஸ்ரீநகரின் (ஜம்மு & காஷ்மீர்) வெப்பநிலை = -4°C
கொடைக்கானலின் வெப்பநிலை = 3°C.
வெப்பநிலை வேறுபாடு = -4°C (-) 3°C = 7°C
வெப்பநிலை வேறுபாடு = 7°C
எனவே, ஸ்ரீநகர், கொடைக்கானலை விட குளிர்ச்சியாக இருக்கும்.
2. ஜோதி சூடான நீரின் வெப்பநிலையினை மருத்துவ வெப்பநிலைமானியினை பயன்படுத்தி அளக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இச்செயல் சரியானதா அல்லது தவறானதா ? ஏன்?
இச்செயல் தவறானது. மருத்துவ வெப்பநிலைமானியில் 35°C முதல் 42°C வரையிலான வெப்ப நிலையை மட்டுமே அளக்கமுடியும்.
மருத்துவ வெப்பநிலைமானியைப் பயன்படுத்தி சூடான நீரின் வெப்ப நிலையை அளக்க முயற்சி செய்தால், பாதரசத்தின் அதிகமான விரிவினால் உருவாகும் அழுத்தத்தின் காரணமாக வெப்பநிலைமானியானது உடைந்துவிடக்கூடும்.
3. நம்மால் ஏன் மருத்துவ வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி காற்றின் வெப்பநிலையினை அளக்க இயலாது?
மருத்துவ வெப்பநிலைமானி மனித உடலின் வெப்பநிலையை அளக்கப் பயன்படுவதாகும்.
காற்றின் வெப்பநிலையானது, மருத்துவ வெப்பநிலைமானியால் அளவிடப்படும் வரம்பை விட அதிகமாக இருப்பதால், காற்றின் வெப்ப நிலையை, மருத்துவ வெப்பநிலைமானியால் அளக்க இயலாது.
4. மருத்துவவெப்பநிலைமானியில் காணப்படும் சிறிய வளைவின் பயன்பாடு யாது?
குறுகிய வளைவானது வெப்பநிலைமானியை பயன்படுத்தியபின், பாதரசம் மீண்டும் குமிழுக்குள் செல்வதைத் தடுக்கிறது. இதனால்,வெப்பநிலையை எளிதாக குறித்துக்கொள்ள இயலும்.
5. மருத்துவ வெப்பநிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்க பயன்படுத்தும் முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது?
மருத்துவ வெப்பநிலைமானியில் உள்ள குறுகிய வளைவானது வெப்பநிலைமானியை பயன்படுத்தியபின், பாதரசம் மீண்டும் குமிழுக்குள் செல்வதைத் தடுக்கிறது. இந்தப் பாதரச மட்டத்தினை கீழே கொண்டு வருவதற்காக வெப்பநிலைமானியை ஒரு சில முறை உதறப்படுகிறது.
V. குறுகிய விடையளி
1 . வெப்பநிலைமானியில் நாம் ஏன் பாதரசத்தினை பயன்படுத்துகிறோம்? பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலுமா? அவ்வாறு பயன்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
வெப்பநிலைமானியில் நாம் ஏன் பாதரசத்தைப் பயன்படுத்துகிறோம், என்றால் அது சீரான முறையில் விரிவடைகிறது, மேலும் இது வெப்பத்தினை நன்றாகக் கடத்தும்.
பாதரசம் சீராக விரிவடைகிறது, ஒளிஊடுடுருவாதது மற்றும், பளபளப்பானது.
பாதரசம் கண்ணாடி குழாயின் சுவர்களில் ஒட்டாது, இது வெப்பத்தினை நன்கு கடத்தக்கூடியது.
பாதரசம் அதிக கொதிநிலையும் (357°C) குறைந்த உறைநிலையும் (−39°C) கொண்ட து. எனவே அதிக நெடுக்கத்தினாலான வெப்பநிலைகளை அளக்க பயன்படுகிறது
பாதரசத்திற்கு பதிலாக தண்ணீரைப் பயன்படுத்த முடியாது;
ஏனெனில் நீர் நிறமற்றது, இது திரவத்தம்பத்தைக் குறிப்பதை மிகவும் கடினமாக்குகிறது.
100°C க்கும் மேலான மற்றும் 0°C க்கும் குறைவான வெப்பநிலைகளில், நீர் கொதித்து மற்றும் உறைந்து வெப்பநிலையை அளவிடப் பயனற்றதாக இருக்கிறது.
எனவே,வெப்பநிலைமானியில் பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலாது.
2. சுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக்கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள். நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா? காரணத்தினைக் கூறவும்.
ஆம், ரமணி கூறுவது சரியானது.
வெப்பநிலையானது சூடான நீரில் இருக்கும் நிலையிலேயே வெப்பநிலைமானியின் மூலம் அளவீடானது எடுக்கப்படவேண்டும்.
சூடான நீரை விட்டு வெளியே வெப்பநிலைமானியை எடுத்தபின்பு வெப்பநிலையினை அளவிடக்கூடாது.
ஏனென்றால், ஆய்வக வெப்பமானியில், மருத்துவ வெப்பமானியைப் போன்று குறுகிய வளைவு இல்லை, எனவே அதை திரவத்திலிருந்து வெளியே எடுக்கும்போது, பாதரசத்தின் அளவு குறைந்து உண்மையான வெப்பநிலையிலிருந்து வேறுபட்ட வெப்பநிலையைக் காட்டும்.
எனவே, திரவத்திலிருந்து வெப்பமானியை வெளியே எடுத்த பிறகு வெப்பநிலையை அளவிடுவது தவறான முறையாகும்.
3. இராமுவின் உடல் வெப்பநிலை 99°F. அவர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? ஏன்?
மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.6° F ஆகும். இராமுவின் உடல் வெப்பநிலை 99°F, இது சராசரி உடல் வெப்பநிலையை விட அதிகமாகும். எனவே அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
VI. விரிவான விடையளி
1. மருத்துவ வெப்பநிலைமானியின் படம் வரைந்து அதன் பாகங்களை குறிக்கவும்.
2. ஆய்வக வெப்பநிலைமானிக்கும், மருத்துவ வெப்பநிலைமானிக்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் யாவை ?
VII. உயர் சிந்தனை வினாக்கள்
1. செல்சியஸ் மதிப்பினை போன்று இரு மடங்கு மதிப்பு கொண்ட பாரன்ஹீட் வெப்பநிலையின் மதிப்பு யாது?
F = 9/5C + 32
இதனை இவ்வாறாகவும் எழுதலாம் F = 1.8C+32
கொடுக்கப்பட்ட வினாவின் படி: F = 2C
2C = 1.8C + 32
மாற்றி அமைப்பதன் மூலம், நமக்குக் கிடைப்பது
(2 - 1.8)C = 32
0.2C = 32
C = 32 / 0.2
= 160°C
F = 2C
F = 2 x 160°C
F = 320°F
2. கால்நடை மருத்துவரை சந்தித்து வீட்டு விலங்குகளான விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் சராசரி உடல் வெப்பநிலையினை கண்டறியவும்.