8 அறிவியல் - காந்தவியல் - மதிப்பீடு வினா-விடைகள்
காந்தவியல்
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. பின்வருவனவற்றுள் காந்தத்தால் கவரப்படும் பொருள் __________
அ) மரப்பொருள்கள்
ஆ) ஏதேனும் ஓர் உலோகம்
இ) தாமிரம்
ஈ) இரும்பு மற்றும் எஃகு
விடை: ஈ) இரும்பு மற்றும் எஃகு
2. கீழ்க்கானும் ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
அ) மின்காந்தம்
ஆ) முமெட்டல்
இ) தேனிரும்பு
ஈ) நியோடிமியம்
விடை: ஈ) நியோடிமியம்
3. ஒரு சட்டக் காந்தத்தின் தென்முனையும், U வடிவ காந்தத்தின் வடமுனையும் _________
அ) ஒன்றையொன்று கவரும்
ஆ) ஒன்றையொன்று விலக்கும்
இ) ஒன்றையொன்று கவரவோ,விலக்கவோ செய்யாது
ஈ) மேற்கண்டவற்றுள் எதுவுமில்லை
விடை: அ) ஒன்றையொன்று கவரும்
4. கற்பனையான புவிக் காந்தப்புலம் எந்த வடிவத்தினைப் போன்றது?
அ) U வடிவ காந்தம்
ஆ) மின்னோட்டத்தைக் கடத்தும் நேர்க்கடத்தி
இ) வரிசுருள்
ஈ) சட்டக்காந்தம்
விடை: ஈ) சட்டக்காந்தம்
5. MRI என்பதன் விரிவாக்கம் __________
அ) Magnetic Resonance Imaging
ஆ) Magnetic Running Image
இ) Magnetic Radio Imaging
ஈ) Magnetic Radar Imaging
விடை: அ) Magnetic Resonance Imaging
6. காந்த ஊசி __________ பயன்படுகிறது.
அ) காந்தவிசைக் கோடுகளை வரைய
ஆ) காந்தப்புலத்தின் திசையை அறிய
இ) கடல் பயணத்திற்கு
ஈ) மேற்காண் அனைத்தும்
விடை: ஈ) மேற்காண் அனைத்தும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. காந்தத்தின்வலிமைஅதன்முனைகளில் _______________________.
விடை: அதிகமாக இருக்கும்
2. ஒரு காந்தம் _______________________முனைகளைக் கொண்டது.
விடை: இரு
3.மின்சார உற்பத்திக்குப் பயன்படும் காந்தங்கள் ___________________.
விடை: டைனமோக்கள்
4.கனமான இரும்புப் பொருள்களை உயர்த்தப்பயன்படுவது ________.
விடை: மின் காந்தம்
5. தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும் __________ வட, தென்முனைகளை நோக்கி இருக்கும்.
விடை: புவியின்
III. பொருத்துக.
விடை:
IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறு.
1. கூற்று: இரும்புத் துருவல்களின் செறிவு காந்தத்துருவப் பகுதிகளில் அதிகம்.
காரணம்:காந்தங்கள்மிகவும் கூர்மையானவை.
விடை: ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
2. கூற்று: புவியின்காந்தப்புலம் அதன் உள்ளகத்தில் உள்ள இரும்பினால் உருவாகிறது.
காரணம்: உயர் வெப்பநிலையில் ஒரு காந்தமானது அதன் காந்தப் பண்பினை இழக்கும்.
விடை: கூற்று தவறு, காரணம் சரி
V. சுருக்கமாக விடையளி.
1. காந்தப்புலம் – வரையறு.
காந்தப்புலம் என்பது, ஒரு காந்தத்தினைச் சுற்றி காந்த விளைவு அல்லது காந்த விசை உணரப்படும் பகுதி என வரையறுக்கப்படுகிறது.
இது டெஸ்லா அல்லது காஸ் என்ற அலகினால் அளக்கப்படுகிறது (ஒரு டெஸ்லா = 10000 காஸ்).
2. செயற்கைக் காந்தம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
ஆய்வகம் மற்றும் தொழிற்சாலைகளில் மனிதர்களால் உருவாக்கப்படும் காந்தங்களே செயற்கைக் காந்தங்கள் ஆகும்.
பொதுவாக இரும்பு அல்லது எஃகு உலோகக் கலவைகளை மின் முறையில் காந்தமாக்குவதன் மூலம் செயற்கைக் காந்தங்கள் உருவாக்கப்படுகின்றன.
3. இயற்கை மற்றும் செயற்கைக் காந்தங்களை வேறுபடுத்துக.
4. புவியானது மிகப்பெரிய சட்டக்காந்தமாகும். ஏன்? காரணம் தருக.
புவியின் ஒரு புள்ளியில் தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்த ஊசியானது புவியின் வட - தென் திசையில் தோராயமாக வந்து நிற்கும். பூமியானது மிகப்பெரிய காந்த இருமுனையாகச் செயல்படுகிறது என்பதனையும் அதன் காந்த முனைகள் புவியியல் துருவங்களுக்கு அருகில் உள்ளன என்பதனையும் இது காட்டுகிறது.
5. காந்தத் தன்மையற்ற பொருள்களை எவ்வாறு அடையாளம் காண்பாய்? காந்தத் தன்மையற்ற பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
காந்தத்தால் கவரப்படாத பொருள்களை ‘காந்தம் அல்லாத பொருள்கள்’ அல்லது காந்தத் தன்மையற்ற பொருள்கள் என அழைக்கிறோம்.
எடுத்துக்காட்டு: இரப்பர், மரக்கட்டை
VI. விரிவாக விடையளி.
1. காந்தத்தின் அன்றாட வாழ்வியல் பயன்களைப் பட்டியலிடுக.
அன்றாட வாழ்வில் காந்தங்கள் பல்வேறு வகைகளில் பயன்படுகிறது.
⧫ முற்காலத்தில் கடலில் பயணம் செய்வோரால் திசையினை அறிவதற்கான ‘திசைகாட்டும் கல்லாக’ காந்தம் பயன்படுத்தபட்டது.
⧫ தற்காலத்தில் டைனமோக்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு காந்தங்கள் பயன்படுகின்றன.
⧫ மின்சார மணிகளிலும் மின்மோட்டார்களிலும் மின்காந்தங்கள் பயன்படுகின்றன.
⧫ ஒலிப்பெருக்கிகளிலும், நுண் பேசிகளிலும் (microphones) இவை பயன்படுகின்றன.
⧫ வங்கிக்காசோலைகள் மீது அச்சடிக்கப்பட்ட MICR எண்களை அறிந்து கொள்வதற்கு கணினிகளில் பொருத்தப்பட்டுள்ள காந்தங்கள் பயன்படுகின்றன.
⧫ காந்தப் பொருள்களோடு கலந்திருக்கும் காந்தம் அல்லாத கழிவுக் பொருள்களைப் பிரித்தெடுப்ப தற்கு தொழிற்சாலைகளில் ‘காந்தக் கடத்துப் பட்டைகள்’ (Conveyor belts) பயன்படுகின்றன.
⧫மருத்துவமனைகளில் வலிமையான மின்காந்தங்கள் பயன்படுத்தி, MRI - Magnetic Resonance Imaging மூலம் குறிப்பிட்ட உள்ளுறுப்பினை ஸ்கேன் (நிழலுரு படம்) செய்கின்றனர்.
2. ஓர் ஆணியை எவ்வாறு தற்காலிக காந்தமாக மாற்றுவாய்?
தற்காலிகக் காந்தங்கள், புறக்காந்தப் புலத்தின் உதவியுடன் தயாரிக்கப்படுகின்றன.
புறக்காந்தப்புலம் நீக்கப்படும்போது இவை வெகுவிரைவில் காந்தப் பண்புகளை இழக்கின்றன
🥛 ஆணி மற்றும் சட்டக் காந்தத்தை எடுத்துக் கொள்ளவும்
🥛சட்டக்காந்தத்தின் ஒரு முனையினால் ஆணியின் ஒரு முனையினைத் தொடவும்.
🥛 மெதுவாக ஆணியின் மீது காந்தத்தினை ஒரே திசையில் மறுமுனை வரை நகர்த்தவும்.
🥛 படத்தில் காட்டியவாறு இதே போன்று மீண்டும் 20 அல்லது 30 முறை நகர்த்தவும்.
🥛 ஆணியின் மீது முன்னும் பின்னும் நகர்த்தாமல் ஒரே திசையிலேயே நகர்த்த வேண்டும்.
🥛 ஒரு மரப்பலகையின் மீது குண்டூசிகளைப் பரப்பி வைத்து அவற்றினருகே ஓர் இரும்பு ஆணியினைக் கொண்டு செல்லவும்.
🥛 இரும்பு ஆணி தற்காலிகக் காந்தமாக மாறுவதால், குண்டூசிகள் ஆணியின் மீது ஒட்டிக் கொள்வதைக் காணலாம்.
3. புவிக்காந்தம் பற்றி குறிப்பெழுதுக
❂ புவியானது, மிகப்பெரிய இருமுனையினை உடைய காந்தமாக அறிவியல் அறிஞர்களால் கருதப்படுகிறது.
❂ இருந்தபோதிலும், புவிக்காந்த முனைகளின் நிலைகளை தெளிவாக வரையறுக்க அவர்களால் இயலவில்லை.
❂ புவியின் உட்பகுதியில் உள்ள கற்பனையான காந்தத்தின் தென்முனையானது, புவியியல் வடமுனைக்கு அருகிலும் வடமுனையானது, புவியியல் தென்முனைக்கு அருகிலும் அமைந்துள்ளது.
❂ இந்த காந்தத் துருவங்களை இணைக்கும் நேர்க்கோடானது காந்த அச்சு என்று அழைக்கப்படுகிறது.
❂ காந்தத்தின் அச்சானது புவியியல் வடமுனையினைச் சந்திக்கும் புள்ளியானது வட புவிக்காந்த முனை அல்லது காந்த வடமுனை என்றழைக்கப்படுகிறது.
❂ காந்தத்தின் அச்சானது புவியியல் தென் முனையினை சந்திக்கும் புள்ளியானது தென் புவிக்காந்த முனை அல்லது காந்த தென்முனை என்றழைக்கப்படுகிறது.
❂காந்த அச்சு மற்றும் புவியின் அச்சு (சுழல் அச்சு) ஒன்றுக்கொன்று இணையாக இருப்பதில்லை.
❂ காந்த அச்சானது புவியின் அச்சிற்கு 10° முதல் 15° வரை சாய்வாக அமைந்துள்ளது.
VII. உயர்சிந்தனை வினாக்கள்.
1. பூமி மிகப்பெரிய காந்தம் போன்று செயல்பட்டாலும் பிற காந்தப் பொருள்களை பூமியால் கவரமுடியவில்லை ஏன்?
💮 பூமியே ஒரு காந்தம் அல்ல.
💮 பூமியில் காந்தப்புலம் உள்ளது, இது பூமியின் மேற்பரப்பில், 25 முதல் 65 மைக்ரோடெஸ்லா வரை (0.25 முதல் 0.65 காஸ் வரை) இருக்கும்.
💮 இந்த காந்தப்புலம் மிகவும் பலவீனமாக உள்ளது, இது பொதுவாக எந்த ஃபெரோ காந்தப் பொருட்களையும் நேரடியாக ஈர்க்காது.
💮 திசைகாட்டி ஊசி போன்ற ஒரு சிறிய காந்தத்தை சுழற்றுவதற்கு இது போதுமானதாக உள்ளது.
2. ஒரு இரும்புத் துண்டினை ஒரு காந்தத்தினைக் கொண்டு காந்தமாக்கும்போது முன்னும் பின்னும் நகர்த்த அறிவுறுத்தப்படுவதில்லை. ஏன்?
💮 காந்தத்தை ஒரு திசையில் மட்டுமே நகர்த்த வேண்டும்.
💮 எதிர் திசைகளில் நகர்த்தப்பட்டால் / ஸ்வைப் செய்தால் அது காந்தம் மற்றும் இரும்புத்துண்டு இரண்டின் காந்த சக்தியையும் போக்கி விடும்.
3. தமிழ்தாரகா மற்றும் சங்கமித்திரை ஆகிய இருவரும் சட்டக்காந்தத்தினைக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது காந்தமானது கீழே விழுந்து நான்கு துண்டுகளானது. அவற்றில் எத்தனை காந்தத்துருவங்கள் கிடைக்கும்?
💮 ஒவ்வொரு உடைந்த காந்தத்துண்டும் ஒரு தனி காந்தம் போல செயல்படும்.
💮 ஆகையால், ஒட்டுமொத்தமாக, நான்கு வட துருவம், நான்கு தென் துருவம் என எட்டு துருவங்களைக் கொண்டிருக்கும்.