வகுப்பு 6- அறிவியல்-பயிற்சித்தாள் 1- அளவீடுகள் -விடைகள்
பயிற்சித்தாள் -1
அளவீடுகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. டன் அல்லது மெட் ரிக் டன் போன்ற அளவுகளால் அளவிடப்படுவது _________.
விடை: ஈ. மிகப் பெரிய அளவிலான எடை
2. கீழே கொடுக்கப்பட்டவற்றுள் பொருந்தாத ஒன்று ____________.
விடை: இ. வினாடி
3. உனது வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே உள்ள தொலைவினை அளவிட பயன்படுவது___________.
விடை: அ. அளவு நாடா
II. பொருத்துக
III. கோடிட்ட இடத்தை நிரப்புக
4. உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மாதிரியான அளவீட்டு முறை ______________.
விடை பன்னாட்டு அலகு முறை
5. நிறுத்து கடிகாரத்தை பயன்படுத்தி அளவிடப்படுவது____________.
விடை: நேரம்
6. ________ என்பது நிறையின் மேல் செயல்படும் புவிஈர்ப்பு விசை ஆகும்.
விடை: எடை
7. பொது தராசினை பயன்படுத்தி நாம் அளவிடுவது ____________.
விடை: நிறை
IV. சரியா தவறா என எழுதுக.
8. ஒரு பொருளின் நிறையை அளவிட பொது தராசு பயன்படுகிறது.
விடை: சரி
9. முற்காலத்தில் நிறுத்து கடிகாரத்தை பயன்படுத்தி நேரத்தை கணக்கிட்டனர்.
விடை: தவறு
முற்காலத்தில் மணல் கடிகாரத்தை பயன்படுத்தி நேரத்தை கணக்கிட்டனர்.
10. ஓடோ மீட்டர் என்பது தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் கருவி ஆகும்.
விடை: சரி
11. ஒரு ஊசியின் நீளத்தை அளவிடும் போது ஊசியின் ஒரு முனை அளவு கோலில் 2.5சென்டி மீட்டர் என்ற அளவிலும் மற்றொரு முனை 22.5 சென்டிமீட்டர் என்ற அளவிலும் பொருந்தினால், ஊசியின் நீளம் 25 சென்டி மீட்டர் ஆகும்.
விடை: தவறு. 20 செ.மீ ஆகும்
12. டெசி:1/10 மற்றும் செண்டி:1/1000: இவை இரண்டும் ஒரே விதமான தொடர்பை குறிக்கின்றது.
விடை:
தவறு.
சென்டி= 1/100
V. சுருக்கமாக விடையளி.
13. நீயும் உனது நண்பர்களும் அவரவர் காலடியை பயன்படுத்தி வகுப்பறையின் நீளத்தை அளவிட திட்டமிட்டுள்ளீர்கள். பின்னர் அனைவரின் அளவுகளையும் ஒப்பிட்டு பார்த்து ஏன் அனைவருக்கும் ஒரே மாதிரியான விடை வரவில்லை என வகுப்பறையில் கலந்துரையாடி காரணம் கண்டுபிடி.
விடை:
ஒவ்வொருவரின் காலடி நீளமும் வெவ்வாறாக இருப்பதால், அவரவர் காலடிகளின் நீளங்களுக்கேற்ப எண்ணிக்கை மாறுவதால் அனைவரின் விடைகளும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை என கண்டறிந்தோம்.
14. உனது தாய் வாங்கிய இரண்டு பவுன் தங்க நகையை கிராமில் கூறுக.
விடை:
ஓரு பவுன்= 8 கிராம்
ஃ இரண்டு பவுன் = 2 X 8 = 16 கிராம்