வகுப்பு6- அறிவியல் - பயிற்சித்தாள் -3, நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்-வினா-விடைகள்
பயிற்சித்தாள் -3
நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
கூற்று 1: பருப்பொருள் துகள்கள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன.
கூற்று 2: இந்தக் கவர்ச்சி விசையானது பருப்பொருளின் வெவ்வேறு நிலைகளுக்கு வெவ்வேறானதாக இருக்கும்
விடை: இ. கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டுமே சரியானவை.
2. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
கூற்று 1: விலங்குகளால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு தாவரங்களால் வெளியிடப்படும் ஆக்சிஜன் நாம் பருகும் பழச்சாறு படிக்கும் புத்தகம் இவை எல்லாமே பருப்பொருள்கள்தான்.
கூற்று 2: அனைத்து பருப்பொருள்களும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளன.
விடை:ஆ. கூற்று 1 மட்டும் சரி
3. பின்வருவனவற்றுள் பெட்ரோலைப் பொறுத்தவரை மிகப் பொருத்தமான கூற்று எது?
விடை: இ. கொள்கலனின் வடிவத்தைப் பெறுகிறது. குறிப்பிட்ட கன அளவு மற்றும் நிறை கொண்டது.
4. பின்வருவனவற்றுள் குறிப்பிட்ட கன அளவினைக் கொண்டதும் குறிப்பிட்ட வடிவத்தைக் கொண்டிருக்காதுமான ஒன்று எது?
விடை: இ. எண்ணெய்
5. பருப்பொருளின் மூன்று நிலைகளில் துகள்-துகள் இடைத்தொலைவின் சரியான வரிசை
விடை: இ. திண்மம் < திரவம் < வாயு
6. பருப்பொருளின் எப்பண்பானது பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ள செயல்பாட்டின் மூலம் விளக்கப்பட்டுள்ளது?
விடை: ஈ. அமுக்கப்படும் தன்மை
7. பின்வருவனவற்றுள் தூய பொருளைத் தேர்ந்தெடு.
விடை: இ. தாமிரக்கம்பி
8. நாம் அணியும் தங்கச்சங்கிலியானது ___________ எடுத்துக்காட்டாகும்.
இ. கலவைக்கான
9. கீழே தரப்பட்டுள்ல இணைகளில் எது தவறாக பொருத்தப்பட்ட இணை?
விடை:
ஆ. பித்தளை – கலவை
10. இராமுவின் தந்தையார் மோர் குடிக்க விரும்புகிறார். இராமு வீட்டில் தயிர்வ்தான் உள்ளது. மோர் இல்லை என்று கூறுகிறான். இராமுவின் தந்தை சமையலறையில் ஒரு சிறப்பு வகையான கருவியை எடுக்கிறார். அவரால் தயிரிலிருந்து வெண்ணெய் மற்றும் மோரைப் பிரித்தெடுக்க இயலுகிறது. இதற்காக அவர் பயன்படுத்திய செயல்முறையின் பெயர் என்ன?
விடை: ஆ. கடைதல்
11. கீழே காட்டப்பட்டுள்ள வடிகட்டுதல் செயல்முறை தொடர்பான படத்தில் X,Y மற்றும் Z குறிப்பவை யாவை?
விடை: இ. X – கலவை Y-வண்டல் Z-வடி நீர்
12. கீழே தரப்பட்டுள்ள படம் கலவைகளைப் பிரித்தல் முறைகளில் எந்த முறையைக் குறிக்கிறது?
விடை: ஆ. தெளியவைத்து இறுத்தல்
13. கலங்கலான நீரிலிருந்து சேற்றை வடிகட்டுதல் முறையின் படி நிலைகளை சரியாக வரிசைபடுத்தவும்.
விடை: இ. 3,1,2,4
கலங்கிய நீர் இருக்கும் கண்ணாடி குடுவையை சிறிது நேரத்திற்கு அசைக்காமல் வைத்தல்
வண்டல் மற்றும் தெளிந்த நீர் படலம் உருவாதல்
மேலடுக்கில் உள்ள நீரைத் தெளிய வைத்து இறுத்தல்
வண்டலைப்பிரித்தெடுத்தல் (சேறு)
14. உனக்கு சிறிது சர்க்கரை கிடக்கிறது. ஆனால், அந்தச் சர்க்கரையுடன் சிறிது இரும்புத்தூளும் மணலும் கலந்து விட்டன. இரும்புத்தூள், மணல், சர்க்கரை இவற்றைத் தனித்தனியாகப் பிரித்தெடுக்க கீழ்க்கண்டவற்றுள் சரியான வரிசை எது?
விடை: இ. காந்தப் பிரிப்பு, வடிகட்டுதல், ஆவியாக்குதல்
II கோடிட்ட இடத்தை நிரப்புக.
15. கொடுக்கப்பட்டுள்ள கருத்து வரைபடத்தில் காலியாக உள்ள இடத்தை நிரப்புக.
III. சுருக்கமாக விடையளி:
16. கீழே தரப்பட்டுள்ள பொருள்களைத் தூய பொருள்கள் மற்றும் கலவைகள் என்று வகைப்படுத்தவும்.
தூயபொருள்
வாலைவடி நீர்
தாமிரக்கம்பி
ஹீலியம் வாயு
தூய தங்கம்
பித்தளை
கால்சியம் கார்பனேட்
எலுமிச்சை சாறு
கலவை
காற்று
சோடா
காய்கறிக் கலவை
17. இரும்பு ஆணிகளும், இரும்பு கிளிப்புகளும் கலந்து விட்டால் அவற்றைப் பிரித்தெடுக்க காந்தப்பிரிப்பு முறையைப் பயன்படுத்தாலாமா? முடியாதெனில் வேறு எந்த முறையைப் பரிந்துரைப்பாய்? ஏன்?
விடை: இரு பொருட்களுமே காந்தத்தால் கவரப்படும் பொருட்களாக இருப்பதால் இவற்றைப் பிரிக்க காந்தப் பிரிப்பு முறையைப் பயன்படுத்த முடியாது.
இரண்டு பொருட்களும் இருவேறு வடிவங்களைக் கொண்டிருப்பதால் கையால் தெரிந்தெடுக்கும் முறையைப் பயன்படுத்தலாம்.