வகுப்பு -6-அறிவியல்-பயிற்சித்தாள்4, தாவர உலகம் -விடைகள்
பயிற்சித்தாள் -4
தாவர உலகம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. இஞ்சி நறுமணப் பொருளாகவும் செரிமான பிரச்சினைகளுக்கான சிறந்த தீர்வாகவும் பயன்படுத்தப்படுகின்றது. நாம் சாப்பிடும் இஞ்சி என்பது ஒரு __________.
விடை: ஈ. தண்டு
2. ரகு ஒரு தாவரத்தின் வேர் அமைப்பை மண்ணிலிருந்து வெளியே எடுக்காமல் அடையாளம் காண விரும்புகிறார். அதற்கான சரியான முறையை பரிந்துரைக்கவும்.
விடை: அ. இலையின் நரம்பமைவின் மூலம்
3. உங்களைச் சுற்றி வளரும் பல்வேறு தாவரங்களின் தண்டுத் தொகுப்புகளை உற்று நோக்கவும். அதன் அடிப்படையில் பின்வரும் அட்டவணையை நிரப்பவும்.
விடை: அ. 1. பட்டாணி, 3-சப்பாத்திக்கள்ளி
4. சரியாக வரிசைப்படுத்தி எழுதவும்.
விடை: ஆ. மலர், கனி, விதை
5. கமலி தனது வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் இருந்து தாமரை செடியைப் பிடுங்கினாள். அதில் நீண்ட உள்ளீடற்ற தண்டு இருப்பதைக் கவனித்தாள். அது அவ்வாறு இருக்க காரணம் என்ன?
விடை: அ. இலைகள் நீரில் மிதப்பதற்கு
6. மலைப்பகுதிகளில் உள்ள தாவரங்கள் அதிவேக காற்று மற்றும் குளிரைத் தாங்க வேண்டும். மேற்கண்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ள பின்வரும் எந்த தகவமைப்பு அதற்கு சிறந்த முறையில் உதவுகிறது?
விடை: ஆ. உயரமான, நேரான தண்டுடன், ஊசி போன்ற இலைகளையுடையது
7. பின்வரும் எத்தாவரம் வளர மண் தேவையில்லை?
விடை: இ. ஆகாயத்தாமரை
8. கொடுக்கப்பட்டுள்ள தாவரங்களில் சல்லி வேர்த்தொகுப்புடைய தாவரத்தைத் தெரிவு செய்க.
விடை: அ. புல்
II.சுருக்கமாக விடையளி
9. தாவரத்தின் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அ. தாவரத்தை மண்ணில் நிலைநிறுத்துவது - வேர்
ஆ. உணவு தயாரிப்பது - இலை
இ. இனப்பெருக்கத்தில் பங்கேற்பது - மலர்
ஈ. கிளைகளையும் பூக்களையும் தாங்குவது - தண்டு
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளைச் செய்யும் தாவரப் பகுதிகளை/பாகங்களை இனங்கண்டறிந்து கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறிக்கவும்.
10. பின்வரும் கூற்றுகளைச் சரிசெய்து மீண்டும் எழுதவும்.
அ. வேர்- மண்ணிலிருந்து நீர் மற்றும் தாதுக்களை உறிஞ்சுகிறது
ஆ.வேர் - தாவரத்தை நேராக நிலை நிறுத்துகின்றன
இ. தண்டு - இலைகளுக்கு நீரைக் கடத்துகின்றன.
11. பின்வரும் தாவரங்களை அவற்றின் வேர்த்தொகுப்பின் அடிப்படையில் வகைப்படுத்தவும்.
12. கொடுக்கப்பட்டுள்ள பாகங்களை ஆணி வேர்த்தொகுப்பு படத்தில் குறிக்கவும்.
13. கொடுக்கப்பட்டுள்ள செயல் வரைபடத்தை கவனமாகப் படித்து, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
இலைகள்→ தண்டு→ வேர்கள்
அ. செயல் வரைபடத்திலுள்ள குறி முள் தாவரத்தில் ________ கடத்துதல் செயலை குறிப்பிடுகிறது.
விடை: உணவு
ஆ. பின்வரும் எந்த மனித உறுப்பு மண்டலம் மேற்கண்ட தாவர கடத்து மண்டலத்தை ஒத்ததாகக் காணப்படுகிறது.
விடை: இரத்த ஓட்ட மண்டலம்