வகுப்பு 6-அறிவியல்-பயிற்சித்தாள் 5- விலங்குகள் வாழும் உலகம்
பயிற்சித்தாள் -5
விலங்குகள் வாழும் உலகம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. பொருந்தாத இணையைக் கண்டறியவும்.
ஆ. யூக்ளினா-ii பிளிப்பார்கள்
2. பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
ஈ. பறவைகள் செவுள்கள் மூலம் சுவாசிக்கின்றன
3. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை பார்த்து நான் யார் எனக் கண்டுபிடிக்கவும்.
அ. நான் சிறியவனாக இருக்கும் போது செவுள்கள் மூலமாக சுவாசிக்கின்றேன். நான் பெரியவனானவுடன் தோல் மற்றும் நுரையீரல் வழியாக சுவாசிக்கின்றேன். நான் யார்?
விடை: தவளை
ஆ. நான் ஊர்வன இனத்தைச் சார்ந்தவன். நான் குளிர்காலம் முழுவதும் தூங்குகிறேன். இதை குளிர்கால உறக்கம் என்கிறார்கள். நான் யார்?
விடை: ஆமை
இ. நான் என் உடலினை பாதுகாப்பாக ஓட்டினுள் மறைத்து வைத்துள்ளேன். நான் கோடை மற்றும் வறண்ட காலத்தை ஆழ்ந்த தூக்கத்தில் கழிக்கிறேன். இந்நிகழ்வை கோடைகால உறக்கம் என்கிறார்கள். நான் யார்?
விடை: நத்தை
4. அனைத்து விலங்குகளும் தண்ணீர் குடிக்கின்றன. ஆனால் கங்காரு எலி மட்டும் தண்ணீர் குடிப்பதில்லை. அவ்வாறு தண்ணீர் குடிக்காமல் கங்காரு எலியால் எவ்வாறு உயிர்வாழ முடிகிறது. சிந்தித்து உங்கள்பதிலை எழுதவும்.
விடை: கங்காரு எலி உண்ணும் உணவிலிருந்து உடலுக்குத் தேவையான நீரை உருவாக்கிக் கொள்கிறது.
5. கொடுக்கப்பட்ட விலங்குகளிலிருந்து குளிர் இரத்த பிராணிகளை மட்டும் தனியே பிரித்து எழுதவும்.
விடை: தவளை. மீன், பல்லி
II. பின்வருவனற்றைக் கனிக்கவும்.
6. பறவைகள் பறக்கும்போது எவ்வாறு திசையை மாற்றுகின்றன?
விடை: பறவையின் வால் அது பறக்கும் திசையை மாற்றவும் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
7. ஒரு மீனுக்கு வழுவழுப்புத்தன்மையும் அல்லது செதில்கள் மூடிய தோலும் இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்று உன்னால் கூரமுடியுமா?
விடை: மீன்களின் உடல் முழுவதும் உள்ள வழுவழுப்பான செதில்கள் மீனின் உடலை பாதுகாக்கின்றன.
மீனின் இந்த வழுவழுப்புத்தன்மையானது, மீனை அதன் எதிரிகளிடம் பிடியில் சிக்காமல் தப்பித்து செல்லவும் உதவுகிறது.
8. உன்னால் மிருதுவான மற்றும் சூடான மணலில் எளிதாக நடக்க முடியுமா?ஆனால் ஒட்டகம் எவ்வாறு மிருதுவான மற்றும் சூடான மணலில் நடக்கிறது? சிந்தித்து பதில் அளிக்கவும்.
விடை: என்னால் மிருதுவான மற்றும் சூடான மணலில் எளிதாக நடக்க முடியாது, ஏனென்றால் ஒட்டகம் போன்ற நீண்ட கால்களும், பாதங்களின் தகவமைப்பும் மனிதர்களுக்கு இல்லை.
ஒட்டகங்கள் நீண்ட கால்களை உடையது. அதன் காலடி தட்டையாகவும் அகலமாகவும் இருக்கும். இந்த அமைப்பு ஒட்டகம் அதன் எடையை மணலில் பரப்ப எளிதாக இருப்பதால், அவை மணலில் எளிதாக நடக்க முடியும்.
மேலும் அவற்றின் தட்டையான, அகன்ற பாதங்கள் அது மணலில் மூழ்காமல் நடக்க உதவுகின்றன.
9. இடப்பெயர்ச்சியின் அடிப்படையில் பாரமீசியம் மற்றும் யூக்ளினாவை எவ்வாறு வேறுபடுத்துவாய்?
விடை:
அ. பாரமீசியம் - பாரமீசியம் குறு இழைகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.
ஆ. யூக்ளினா - யூக்ளினா கசைஇழைகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.
10. இடப்பெயர்ச்சி உடலமைப்பு மற்றும் உணவு பழக்கம் ஆகியவற்றில் பறவைகள் மற்றும் மீன்கள் போன்றவை மேற்கொள்ளும் தகவமைப்புகளை அட்டவணையில் குறிப்பிடுக.
11. கொடுக்கப்பட்டுள்ள யூக்ளினா படத்தின் பாகங்களை குறிக்கவும்.
12. படத்தைப் பார்த்து எந்த விலங்கு ஒருமை பார்வை அல்லது இருமை பார்வை கொண்டது எனக் கண்டுபிடிக்கவும்.
அ. கழுகு : பறவைகளால் ஒரே சமயத்தில் இரு கண்கள் மூலம் இரு வெவ்வேறு பொருட்களை பார்க்க முடியும். இதற்கு இருமை பார்வை என்று பெயர். கழுகு இருமை பார்வை கொண்டது.
ஆ. குரங்கு: ஒருமை பார்வை கொண்டது. ஒரு சமயத்தில், இரு கண்களையும் கொண்டு ஒரு பொருளை மட்டுமே பார்க்கும் திறன் கொண்டது.