வகுப்பு 6- அறிவியல்-பயிற்சித்தாள் 6- விடைகள்

 பயிற்சித்தாள் 6

உடல் நலமும் சுகாதாரமும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. முட்டையில் கீழ்க்கண்ட ஊட்டச்சத்துக்களில் ஒன்றை தவிர அனைத்து சத்துக்களும் உள்ளது.

விடை: ஈ. வைட்டமின் C

2. கீழ்க்கண்டவற்றுள் எதை தேவைக்கு அதிகமாக உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு உண்டாகும்

விடை: இ. வைட்டமின் B3

3. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தி கோடிட்ட இடத்தை நிரப்புக.

அ. குழந்தைகளுக்கு வைட்டமின் D குறைபாட்டினால்__________உண்டாகிறது.

விடை: ரிக்கட்ஸ்

ஆ.நீரிழிவு நோய் __________ குறைவாக சுரப்பதால் ஏற்படுகிறது

விடை: இன்சுலின்

இ. ______________ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குவாஷியோர்கர் நோய் ஏற்படுகிறது

விடை: புரத

ஈ. இரத்த சோகை ____________ பற்றாக்குறையினால் ஏற்படுகிறது.

விடை: இரும்புச்சத்து

4. பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக மாத்திரையை உட்கொள்ள வேண்டும் ஏனெனில்

விடை: இ. இரத்த சோகையைத் தவிர்க்க

5. நீரில் கரையக்கூடிய வைட்டமின்களைத் தேர்ந்தெடுக்கவும்.

விடை: ஆ. B, C

6. ஒரு ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழையும் போது வகுப்பறை மற்றும் சுற்றுப்புறங்கள் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உள்ளதா என உற்று நோக்குகிறார் இது __________குறிக்கிறது.

விடை: இ. சுகாதாரம்

7. வளர்ச்சி மற்றும் பொதுவான உடல் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த உதவும் ஒரு ஊட்டச்சத்தை குறிப்பிடுக.

விடை: ஆ. தாது உப்புக்கள்

8. ஒரு குழந்தையின் உயரமானது பெற்றோரின் மரபணுக்களை பொறுத்தது. ஆனால் சில நேரங்களில் உயரமான பெற்றோருக்கு உயரம் குறைந்த குழந்தையும், உயரம் குறைந்த பெற்றோருக்கு உயரம் அதிகமான குழந்தையும் பிறக்கிறது. இத்தகைய மாறுபாடுகளுக்கு மரபணுக்களை தவிர வேறு காரணிகள் ஏதேனும் உள்ளதா?.

விடை: அ. ஆம். ஊட்டச்சத்து ஒரு காரணியாக இருக்கலாம்.

9. படத்தை உற்று நோக்கி பதிலளிக்கவும். புரதத்தின் செயல்பாடு ______________.

விடை: உடல் வளர்ச்சி மற்றும் செல்களை பழுதுபார்த்தல்

10. ஆறாம் வகுப்பு படிக்கும் ராஜா மிகவும் குட்டையாகவும் மெலிந்தும் காணப்படுகிறான். மருத்துவர் ராஜாவின் பெற்றோரிடன் புரதச்சத்து அதிகமுள்ள உணவை கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். அவனுக்கு சராசரி உடல் வளர்ச்சி அடைய தேவையான புரதச்சத்து அடங்கியுள்ள உணவுப் பொருளைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.

விடை: வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கரு, முளை கட்டிய பயறு வகைகள், சோயா பீன்ஸ், பால்

11. அக்ஷயா பதினோரு வயது இளம் விஞ்ஞானி. ஒரு குறிப்பிட்ட உணவில் எந்த ஊட்டச் சத்து நிறைந்துள்ளது என்பதை அறிய விரும்பினாள். கொடுக்கப்பட்டுள்ள உணவு மாதிரியில் சில துளிகள் நீர்த்த அயோடின் கரைசலை சேர்த்தாள், உடனே அந்த உணவுமாதிரி கருநீல நிறமாக மாறியது. கீழே உள்ளவற்றில் அம்மாதிரி எது?

விடை: ஈ. வேகவைத்த அரிசி

12. கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு நிறைந்த பொருட்களை கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் வகைப்படுத்தவும்.

விடை: 


கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப்பொருள்கள்

புரதம் நிறைந்த உணவுப்பொருள்கள்

கொழுப்பு நிறைந்த உணவுப்பொருள்கள்


சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அரிசி, மக்காச்சோளம், வெள்ளை ரொட்டி

பருப்பு, முட்டை, பால், மீன், பட்டாணி, பீன்ஸ்

வெண்ணெய், கடுகு எண்ணெய், பன்னீர், பால், மீன்


13. கொடுக்கப்பட்டுள்ள உணவுக்கூம்பில் சரிவிகித உணவிற்கு அவசியமான உணவு பொருட்களின் பெயர்களை குறிப்பிடவும்.

விடை: 

14. கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை பயன்படுத்தி அட்டவணையை முழுமைப்படுத்தவும்.

விடை: 


தாது உப்புக்கள்

உணவு மூலம்

குறைபாட்டு நோய்கள்


கால்சியம்

பால், முட்டை

ரிக்கட்ஸ்

பாஸ்பரஸ்

கொட்டைகள், தானியங்கள்

ஆஸ்டியோமலேசியா

அயோடின்

கடற்பாசி, பால் பொருட்கள்

கிரிட்டினிசம், காய்ட்டர்

இரும்புச்சத்து

கீரை, காய்கறிகள்

இரத்த சோகை


15. ஒரு பெண்மணி ஆப்பிள் கடிக்கும் போது, கடித்த பகுதியில் ரத்தக் கரை இருப்பதைப் பார்த்தார். பின்பு ஈறிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படுவதை கவனிக்கிறார். ரத்தக்கசிவு எந்த வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படுகிறது?

விடை:  இ. வைட்டமின் சி

16. உணவு முறையாளர்கள் புரத உணவு குறைபாடு உள்ளவர்களுக்கு வயது வித்தியாசமின்றி அதிக புரத சத்துள்ள உணவை உட்கொள்ள அறிவுறுத்துகிறார்கள். கீழே புரதச்சத்து மிகுந்த உணவுகள் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் அதிக புரதச்சத்து மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதச்சத்து கொண்ட உணவை கண்டுபிடிக்கவும்.

விடை: ஈ. முளை கட்டிய பச்சை பயறு

17. கீரை நம் வட்டாரத்தில் அதிக அளவில் எளிதில் கிடைக்கக்கூடியது இந்த கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து ,புரதச்சத்து மேலும் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது கொடுக்கப்பட்டுள்ள கீரைகளில் எந்தக் கீரையில் அதிகமான சத்துப் பொருள் உள்ளது என்று கண்டுபிடிக்கவும்.

விடை: முருங்கைக்கீரை

18. கொடுக்கப்பட்ட வரைபடத்தில் சளித்தொல்லையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் என பெற்றோர்கள் நம்பப்படும் சில உத்திகள் கொடுக்கப்பட்டுள்ளது. வரைபடத்தை உற்று நோக்கிக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாவிற்கான விடைகளை எழுதுக.


அ. 3% ___________________குறிக்கிறது.

விடை:  மல்டி விட்டமின்களை எடுத்துக்கொள்ளுதல்

ஆ. குழந்தைகளுக்கு சளி பிடிப்பதில் இருந்து பாதுகாக்க பெற்றோர்கள் எந்த உத்தியைப் பின்பற்ற வேண்டும்?

விடை: சளிப் பிடித்தவர்களிடமிருந்து விலகி 

இ. கரு நீல வண்ணப்பகுதி ________________ குறிக்கிறது.

விடை: உணவு /பானம் பகிர்வதை தவிர்க்கவும் 

ஈ. கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எத்தனை சதவீதம் எனக் காட்டப்பட்டுள்ளது.

விடை: 8%

Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்