வகுப்பு -7- அறிவியல்- பயிற்சித்தாள் - 11 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்- விடைகள்
பயிற்சித்தாள் - 11
வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்
விடை: இ. உலகம்-தொகுதி-வகுப்பு-வரிசை-குடும்பம்-பேரினம்-சிற்றினம்
2. கீழ்க்காண்பவற்றுள் வகைப்பாட்டின் அடிப்படை அலகு எது?
விடை: அ. சிற்றினம்
3. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது இருவாழ்விகள் கிடையாது?
விடை: ஈ. நட்சத்திரமீன்
4. உயிரினங்களைக் கண்டறிந்து குழுக்களாக ஒழுங்குபடுத்துதல் என்பது______________.
விடை: இ. வகைப்படுத்துதல்.
II. பொருத்துக.
5. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுதிகளை அதன் உதாரணங்களுடன் பொருத்துக.
III. கோடிட்ட இடத்தை நிரப்புக:
6. ராணி மற்றும் ராஜூ இருவரும் 12 வயது சிறுவர்கள். கன்னியாகுமரி கடற்கரைக்கு பள்ளி சுற்றுலா சென்றபோது அந்த கடற்கரையில் உடல் முழுவதும் உடற்சுவர் முட்கள் கொண்ட உயிரினத்தைப் பார்த்தனர். அந்த உயிரினம் குழாய் கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்தது. விலங்கு வகைப்பாட்டில் அந்த உயிரினம் எந்த உலகம் மற்றும் தொகுதியைச் சார்ந்தது?
விடை:
உலகம்: விலங்கு
தொகுதி: முட்தோலிகள்
IV. சரியா தவறா என எழுதுக:
7. சரியா தவறா எனக்கூறுக.
அ. உயிரிங்கங்களை இனங்கண்டறிவதற்கு வகைப்படுத்துதல் உதவுகிறது.
விடை: சரி
ஆ. உயிரினங்களின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றி அறிய வகைப்படுத்துதல் உதவுகிறது.
விடை: சரி.
இ. உயிரிங்கங்களை ஒற்றுமையின் அடிப்படையில் மட்டும் வேறுபடுத்த இருபகுதி திறவுகோல் ஒரு கருவியாக பயன்படுகிறது.
விடை: தவறு
ஈ. ஆல்காக்கள் உடலானது வேர், தண்டு, இலை என வேறுபாடடைந்து காணப்படுகிறது.
விடை: தவறு
V. சுருக்கமாக விடையளி:
8. கீழே கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளில் முதுகெலும்பு உள்ளவை மற்றும் எவையெவை என வகைப்படுத்து.
9. விலங்குகளின் பண்புகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பண்பிற்குமான சரியான தொகுதி மற்றும் எடுத்துக்காட்டுகளைத் தருக.
10. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள உயிரினங்களை அடையாளம் கண்டறிந்து அவைகளை குளிர் இரத்தப் பிராணிகள் அல்லது வெப்ப இரத்தப் பிராணிகள் என வகைப்படுத்தவும்.
குளிர் இரத்தப் பிராணிகள்:
முதலை, பாம்பு
வெப்ப இரத்தப் பிராணிகள்:
புலி,நெருப்புக்கோழி,வரிக்குதிரை,மான்,யானை, சிறுத்தை, ஒட்டகச்சிவிங்கி, நீர்யானை.
11. விலங்குகளின் தொகுதிகள் சரியான வரிசையில் கொடுக்கப்படவில்லை. அவற்றை கீழ்நிலை தொகுதியிலிருந்து முன்னேறிய தொகுதி வரை வரிசைப்படுத்தி எழுதுக.
பொரிபெரா
சீலெண்டிரேட்டா
பிளாட்டிஹெல்மின்தஸ்
அஸ்க்ஹெல்மின்தஸ்
அனலிடா
ஆர்த்ரோபோடா
மொலஸ்கா
எக்கினோடெர்மேட்டா
கார்டேட்டா
12. கீழ்க்காணும் படங்களை உற்று நோக்கி கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பூர்த்தி செய்க.
13. காரணம் கூறுக.