வகுப்பு-7- அறிவியல்- பயிற்சித்தாள்-15- அன்றாட வாழ்வில் வேதியியல்- விடைகள்

 பயிற்சித்தாள் - 15

அன்றாட வாழ்வில் வேதியியல்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. 1971 ஆம் ஆண்டில் இந்தியாவில் மக்கள் காலராவால் பாதிக்கப்பட்டனர். அப்போது இறப்பு விகிதத்தைக் குறைக்க எந்தக் கரைசல் பயன்படுத்தப்பட்டது?

விடை: ஆ. வாய்வழி நீரேற்று கரைசல்


2. ரவி வயிற்றுப்போக்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். இந்நோய்க்கு வாய் வழியாக கொடுக்கப்படும் கரைசல் யாது?

விடை: அ. வாய்வழி நீரேற்று கரைசல், இது உடலின் நீர்ப்போக்கை குறைக்கிறது.


3. நமது குடலானது நீரையோ, சொடிஉம் உப்பையோ உறிஞ்ச _________________ தேவையாக உள்ளது.

விடை: அ. குளுக்கோஸ்


4. வீட்டில் வாய்வழி நீரேற்று கரைசல் தயாரிப்பதற்கு, __________ தேக்கரண்டி சர்க்கரையும் ____________ தேக்கரண்டி உப்பும் ஒரு லிட்டர் தூய நீரில் கரைக்கப்படுகிறது.

விடை: இ. 6: ½


5. தனம் அமில நீக்கி மாத்திரைகளை உட்கொண்டாள். வயிற்றில் என்ன வேதிவினை நடக்கும்? 

விடை: அ. நடுநிலையாக்கல், அமிலம்+காரம்---------> உப்பு + நீர்

6. அமில நீக்கிகளின் தொகுதியை அடையாளம் காணவும்.

இ. சோடியம் பை கார்பனேட், மெக்னீசியம் ஹைட்ராக்சைடு, மெக்னீசியம் கார்பனேட், அலுமினியம் ஹைட்ராக்சைடு


7. ஆக்சிஜனுடன் ஹைட்ரோகார்பனை எரிப்பதில் பொதுவாக ____________ மற்றும் _____ உற்பத்தி செய்யப்படுகின்றன.

விடை: அ. கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர்


8. ரவியின் அம்மா, சமையலுக்கு எரிவாயு அடுப்பைப் பயன்படுத்துகிறார்கள். இதில் பயன்படுத்தப்படும் எரியக்கூடிய பொருள் _____________.

விடை: இ. திரவ பெட்ரோலிய வாயு(LPG)


9. சுடரில் மஞ்சள் நிறம் ______ குறிக்கிறது. இங்கு ________  நடைபெறுகிறது.

விடை: இ. நடுப்பகுதி, குறைவான எரிதல்


10. மெழுகுவர்த்தியின் சுடரானது எப்பொழுதும் மேல்நோக்கி இருக்கின்றது. இதற்கு காரணம் _____________ ஆகும்.

விடை: ஆ. வெப்பச்சலனம்


11. பின்வரும் எந்த இரு வாயுக்களால் அமில மழை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது?

விடை: SO2 & NO2

II. சரியா? தவறா?

12. வயிற்றுப்போக்கின் போது நம் உடலானது நீரை உறிஞ்சுவதைக் காட்டிலும் அதிக நீரை வெளியேற்றுகின்றது.

விடை: சரி

III. சுருக்கமாக விடையளி

13. பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கான காரணத்தைக் கூறுக.

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு எரிதல், செரித்தல், மூச்சுவிடுதல் (சுவாசித்தல் என்று புத்தகத்தில் தவறாகக்கொடுக்கப்பட்டுள்ளது), ,துருப்பிடித்தல்

விடை: மூச்சுவிடுதல்

மூச்சுவிடுதல் ஒரு இயற்பியல் நிகழ்ச்சி. மற்றவை அனைத்தும் வேதியியல் நிகழ்ச்சிகள் ஆகும்.

14. மெழுகு சுடரின் பகுதிகளை வரைந்து, வண்ணமிட்டு பாகங்களைக் குறி


15. நான்கு கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு 1,50,000 கி.ஜூல் என அளவிடப்படுகிறது என்றால் அதன் கலோரியின் மதிப்பு என்ன?

விடை: 

வெப்பத்தின் அளவு = 1,50,000 கி.ஜூல்

எரிபொருள்=4 கி

கலோரி மதிப்பு = உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு/ எரிபொருள் அளவு

=150000/4 

=37500கி.ஜூல்/கி.கி


Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்