வகுப்பு-7- அறிவியல்- பயிற்சித்தாள்-16- அன்றாட வாழ்வில் விலங்குகள்-விடைகள்
பயிற்சித்தாள் - 16
அன்றாட வாழ்வில் விலங்குகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ______________ உலகில் பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடத்தை வகிக்கும் நாடாகும்.
விடை: இந்தியா
2. செயற்கை இழைகளை தேர்ந்தெடுக்க
விடை: ஆ. நைலான்
3. பல விலங்குகள் பலவகைப்பட்ட பொருட்களை மனிதனுக்கு உணவாக வழங்குகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலிருந்து மனித உணவாக பயன்படும் பொருட்களை அடையாளம் காண்க.
விடை: பால், இறைச்சி, முட்டை, தயிர், தேன், நண்டு, மீன், கோழி
4. மூலப்பொருட்கள் மற்றும் மூலங்களைக் கண்டுபிடி.
5. சரியான படிநிலை எது?
இ. வெட்டுதல், தரம் பிரித்தல், சுத்தம் செய்தல், சிக்கெடுத்தல், நூற்றல்
6. ஆசிரியர் மாணவர்களிடம் புரதம் நிறைந்துள்ள பால் பொருட்களில் சிலவற்றை எடுத்துக்காட்டாகக் கூறுமாறு வினவினார். ஜெகன் பனீர் என்றும், சுந்தர் பாலாடைக்கட்டி என்றும் தங்கள் பதில்களைக் கூறினார். பிரியா பனீர் மற்றும் பாலாடைக்கட்டி இரண்டுமே ஒன்று எனக் கூறினாள். ஆசிரியர் மாணவர்களிடம் பனீர் மற்றும் பாலாடைக்கட்டிக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் கூறுமாறு கேட்டார். நீங்கள் இரண்டு பொருட்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை இக்குழந்தைகளுக்கு சொல்லி உதவ முடியுமா?
விடை:
7. காரணம் என்னவென்று கூறவும்.
கீழே சில விலங்குகளிடமிருந்து பெறப்படும் பொருட்கள் மற்றும் அவற்றின் பயன்கள் கூற்றுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பயன்பாட்டிற்கான காரணங்களைக் கூறுக.
அ. தேன் சில இந்திய பாரம்பரிய மருந்துகளுடன் பயன்படுத்தப்படுகிறது.
விடை: தேன் சிறந்த மருத்துவகுணம் கொண்டது , அதிக ஊட்டச்சத்து கொண்டது, எளிதில் செரிக்கும் தன்மையுடையது.
ஆ. தற்பொழுது பலர் அஹிம்சா பட்டுத்துணியை உபயோகிக்க விரும்புகிறார்கள்.
விடை:
இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசுமா ராஜய்யா என்பவர், 1992ஆம் ஆண்டு கூட்டுப்புழுக்களை அழிக்காமல், அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கலாம் என்பதைக் கண்டறிந்தார். கூட்டுப்புழுக்கள், கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறும்
போது அவற்றைக் கொல்லாமல், அவை உண்டாக்கும் பட்டு இழைகளை எடுக்கலாம் என்றார். இந்தப் பட்டு, மனித நேயத்தின் அடிப்படையில், பராம்பரிய முறைகளைத்தாண்டி உருவாக்கப்பட்டதாகும். எனவே இது, அகிம்சைபட்டு அல்லது அமைதிபட்டு என்று அழைக்கப்படுகின்றது. இவரைப் பின்பற்றி, விலங்குகளின் நலனில் அக்கறையுள்ள ஏராளமான மக்களும் இதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இ. ஆட்டிறைச்சியை விட கோழி இறைச்சியை சாப்பிடுவது மேல்.
விடை:
ஆட்டிறைச்சியை விட கோழி இறைச்சியில் குறைவான கொழுப்புச் சத்து இருப்பதால், கோழி இறைச்சி ஆட்டிறைச்சியை விட சிறந்தது எனக்கூறலாம்.
8. கீழே உள்ளவற்றில் எது ஆல்பக்கா என்பதைக் கண்டுபிடி.
விடை: இ.
9. தேனில் உள்ள முக்கியமான உட்பொருள் _____________.
விடை: ஈ. மாவுச்சத்து.
10. ராஜீவ் குதிரை சவாரி செய்யும் பொழுது மைதானத்தில் சில குதிரை ரோமங்களைப் பார்த்தான். அதை வீட்டிற்கு கொண்டு வந்தான். குதிரை ரோமம் _____________ தயார் செய்வதற்கு உதவும்.
விடை: இ. வண்ணத்தூரிகை
11. தற்பொழுது நிறைய கால்நடை வளர்ப்போர் மிகுதியான பால் கிடைப்பதற்காக கால்நடைகளுக்கு ஹார்மோன் ஊசியைப் போடுகின்றனர். இதனால் ஏற்படும் தீமைகள் இரண்டினைக் கூறுக
விடை: ஹார்மோன் ஊசியைப் பயன்படுத்துவதால் மனிதர்களில் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுகிறது.
ஹார்மோன் ஊசியைப் பயன்படுத்துவதால் மனிதர்களில் இனப்பெருக்க தொகுதிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
12. ஏன் மலைப்பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகள் பள்ளிச் சீருடையுடன் கம்பளி ஆடையை குளிர்காலத்தில் அணிகிறார்கள்?
விடை: மலைப்பகுதியில் குளிர்வெப்பநிலை காணப்படும். அந்த குளிர் வெப்பனிலியில் இருந்து அவர்களை காத்துக்கொள்ள கம்பளி ஆடையை அணிகிறார்கள். கம்பளி குறை வெப்பக் கடத்தி ஆகும்.
13. பசுவிலிருந்து பால் கறப்பதற்கு கைகளினால் பால் கறப்பதை விட இயந்திரத்தை கொண்டு பால் கறப்பது சிறந்தது என்பதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
விடை: பசுக்களை காயப்படுத்தாமல் விரைவாகவும் எளிமையாகவும் பால் கறக்கும் திறன் கொண்டவை பால் கறக்கும் இயந்திரம். மேலும், இது கைகளினால் பால் கறப்பதைக் காட்டிலும் சுகாதாரமானதுமாகும்.