வகுப்பு - 7 - அறிவியல் - பயிற்சித்தாள் - 2 - விசையும் இயக்கமும்-வினா-விடைகள்

பயிற்சித்தாள் - 2

விசையும் இயக்கமும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சீரான திசைவேகத்தின் அலகு என்ன?

விடை. ஈ. மீ/வி


2. பல்லவன் விரைவு தொடர் வண்டி சென்னை எக்மோரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு காரைக்குடியை அடைகிறது. இந்த இரயில் கடந்த தொலைவு 560 கி.மீ. அதன் திசைவேகத்தை மணிக்கு எவ்வளவு கிலோமீட்டர் என கணக்கிடுக.

விடை: 80 கி.மீ


3. ஒரு பந்து வீச்சாளர் 40மீ/வி வேகத்தில் பந்து வீசினார். ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் அப்பந்தைத் தாக்கினார். அது எதிர் திசையில் 60மீ/வி வேகத்தில் பறந்தது. பந்து எடுத்துக்கொண்ட நேரம் 10 வினாடிகள் என்றால் பந்தின் முடுக்கம் என்ன?

விடை: 2மீ/வி2


4. கொடுக்கப்பட்ட தரவுக்கு 20 வினாடிகள் மற்றும் 40 வினாடிகளுக்கு இடையில் பொருளின் திசைவேகத்தின் மாற்றத்தைக் கண்டறியவும்.


இடப்பெயர்ச்சி(மீ)

0

10

25

45

60

80

100

120

150

நேரம்(வினாடி)

0

5

10

15

20

25

30

35

40


விடை: ஆ. 4.5 மீ/வி

5. சிறுவன் இருசக்கர வாகனத்தில் 300 மீ தொலைவினை 15 வினாடிகளில் கடக்கிறான். எனில் அவனுடைய வேகம் யாது?

விடை: வேகம் = தொலைவு / காலம்

= 300மீ/15 வி = 20மீ/வி

இ. 20மீ/வி


6. மேல் நோக்கி வீசப்படும் பொருளானது __________________பெறுகின்றது.

விடை: ஈ. சீரற்ற இயக்கம்


7. இயக்கத்தில் உள்ள ஒரு பொருள் சம கால இடைவெளியில் சம தொலைவினைக் கடந்திருந்தால் அப்பொருள் சீரான _______________உள்ளது எனக் கூறலாம்.

விடை: ஆ. வேகம்


8. ஒரு போட்டியில் ஒரு தடகள வீரர் ஓய்வில் இருந்து தொடங்கி 6 வினாடி நேரத்தில் 30மீ/வி வேகத்தை அடைகிறார் எனில், அவரது சராசரி முடுக்கம் என்ன?

விடை: 5 மீ/வி2


9. வேகத்தின் அடிப்படை அலகு___________.

விடை: ஈ. மீ/வி


10. சில மாணவர்கள் திருச்சியில் இருந்து சுமார் 350கி.மீ தூரத்தில் உள்ள சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்திற்கு செல்ல ஆர்வமாக உள்ளனர். அவர்கள், அவர்களுடைய சராசரி வேகத்தை மணிக்கு 50 கி.மீ என்று கணக்கிடுகிறார்கள். எனில் பயணம் எத்தனை மணி நேரம் எடுத்தது?

விடை: ஆ. 7 மணி நேரம்


11. ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்தை அடைவதற்கு பொருள் கடந்து வந்த பாதையின் மொத்த நீளம்__________________எனப்படும்.

விடை: ஈ, தொலைவு


II.கோடிட்ட இடத்தை நிரப்புக.

12. ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து குறைந்து கொண்டே வந்தால் அப்பொருள்________________-ல் இருப்பதாக கூறப்படுகிறது.


விடை: எதிர்முடுக்கம்


III. சுருக்கமாக விடையளி.

13. அட்டவணையை நிரப்புக.

அட்டவணையில் சில உயிரினங்களின் வேகம் கொடுக்கப்பட்டுள்ளது. 100 வினாடிகளில் அவைகள் கடந்த தொலைவு என்ன?

கடந்த தொலைவு = வேகம்  X காலம்

காலம் = 100 வினாடி

உயிரினத்தின் பெயர்

வேகம் மீ/வி

கடந்த தொலைவு

நத்தை

0.01

1மீ

சிறுத்தை

30.00

3000மீ

ஆண்

10.00

1000மீ

முயல்

15.00

1500மீ

ஆமை

0.08

8மீ


14. தூரத்திற்கும் நேரத்திற்கும் இடையிலான ஒரு வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. A மற்றும் B என்ற இரண்டு மகிழுந்துகள் வெவ்வேறு முடுக்கத்தில் செல்கின்றன. இரண்டில் எது வேகமாக செல்கிறது? உங்கள் பதிலை விளக்கவும்.

விடை: A என்ற மகிழுந்து வேகமாகச் செல்கிறது ஏனென்றால் அது  B என்ற மகிழுந்தை விட அதிக தூரத்தை குறைவான நேரத்தில் கடந்துள்ளது. A ன் சாய்வு  B-ன் சாய்வை விட அதிகமாக உள்ளது.

15. ஒரு மகிழுந்து ஓய்விலிருந்து தொடங்கி சீரான முடுக்கத்துடன் நேர்க்கோட்டில் இயங்குகிறது. அது 12 வினாடிகளில் மணிக்கு 120 கி.மீ வேகத்தை அடைகிறது எனில் அதன் முடுக்கத்தை மீ/வி2 களில் கூறுக

விடை: 

a =v - u / t

v = 120 கி.மீ/மணி

மீ/ வி - க்கு மாற்றினால்

v = 120 X 1000 / 3600

v = 33.33 மீ/வி

u = 0 கி.மீ/மணி

T = 12 வினாடி

a = v - u / t

= 33.33 - 0 / 12

= 2.77 மீ/வி2.


Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்