வகுப்பு - 7 - அறிவியல் - பயிற்சித்தாள் - 3 - நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருள்கள்-வினா-விடைகள்
பயிற்சித்தாள் - 3
நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அணுவைப் பற்றிய பின்வரும் கருத்துக்களில் தவறானது எது?
விடை: ஈ. அணு என்பது பிரிக்க முடியாத துகள்
2. பின்வருவனவற்றுள் பூமியில் காணப்படக்கூடிய மூன்று முக்கிய அணுக்கள் பட்டியலில் இடம் பெறாதது எது?
விடை: ஆ. ஹைட்ரஜன்
3. கீழ்க்காண்பனவற்றுள் தனிமம் எது?
விடை: ஆ. கந்தகம்
4. மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய தனிமங்கள் _______________பயன்படுகின்றன.
விடை: ஆ. வெடிபொருள்கள் தயாரிப்பில்
II. பொருத்துக
5. மூலக்கூறுகளை அதன் பந்து மற்றும் குச்சி மாதிரிகளுடன் பொருத்தவும்.
அ.ஹைட்ரஜன் குளோரைடு
ஆ. கார்பன் - டை-ஆக்சைடு-இ. அம்மோனியா-
III. கோடிட்ட இடத்தை நிரப்புக.
6. இந்நாள் கரை 118 தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் ________தனிமங்கள் இயற்கையாகக் கிடைக்கின்றன. ________தனிமங்கள் ஆய்வகங்களில் செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்றன.
விடை: 94, 24
7. பேரண்டத்தின் மிகுதியாக உள்ள அணு வகை___________________.
விடை: ஹைட்ரஜன் அணு
IV. சுருக்கமாக விடையளி:
8. கொடுக்கப்பட்டுள்ள மூலக்கூறு அமைப்புப் படத்தை ஒரு வேதி வினையின் சொற்சமன்பாடாக மாற்றி எழுதவும்.
ஹைட்ரஜன் + ஆக்சிஜன் = நீர்
9. கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலக்கூறுகளை தனிமத்தின் மூலக்கூறு அல்லது சேர்மத்தின் மூலக்கூறு என வகைப்படுத்தவும்.
தனிமத்தின் மூலக்கூறு:
P4, S8,CL2
சேர்மத்தின் மூலக்கூறு:
HNO3,H3PO4,CH4
10. சோடியம் ஒரு அரிக்கும் தன்மையுள்ள உலோகம். குளோரின் ஒரு நச்சுத்தன்மையுள்ள வாயு. ஆனால், இவைகளிலிருந்து உருவாகும் சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) நமது உணவின் ஒரு அத்தியாவசிய பகுதியாக அமைகிறது. சேர்மங்களின் பண்புகளை அடிப்படையாக வைத்து சோடியம் குளோரைடு உணவாகப் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பானது என்பதை நியாயப்படுத்தவும்.
சோடியம் குளோரைடு ஒரு சேர்மம்.
சேர்மங்களின் பண்புகள் அவை உருவான தனிமங்களின் பண்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பண்புகளைக் கொண்டிருக்கும்.
எனவே, சோடியம் மற்றும் குளோரினின் தனிமப்பண்புகள் அவை இணைந்து உருவான சோடியம் குளோரைடு சேர்மத்தில் இருக்காது.அதனால் சாதாரண உப்பைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதே.