வகுப்பு -7- அறிவியல் - பயிற்சித்தாள் - 4 அணு அமைப்பு - வினா-விடைகள்
பயிற்சித்தாள் - 4
அணு அமைப்பு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அணுவின் சராசரி விட்டம் என்ன?
விடை: அ. 1 X 10-9 மீ
2. _________________ மற்றும் ___________ ஆகியவை நியூக்ளியான்கள் என அழைக்கப்படுகின்றன.
விடை: இ. புரோட்டான் மற்றும் நியூட்ரான்
3. ஒரு நடுநிலையான அணுவில் புரோட்டான்களின் எண்ணிக்கையானது __________________ எண்ணிக்கைக்குச் சமம்.
விடை: ஆ. எலக்ட்ரான்களின்
4. ஒரு குளோரின் அணுவானது _________________ புரோட்டான்கள் ____________ எலக்ட்ரான்கள் மற்றும் _______________ நியூட்ரான்களைக் கொண்டுள்ளது.
விடை: இ. 17,17,18
5. சோடியம் அயனி (Na+) என்பது _________ எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது.
விடை: இ. 10
6. கீழ்க்காணும் அணுக்களில் எது சம எண்ணிக்கையிலான நியூட்ரான்கள் மற்றும் புரோட்டான் களைக் கொண்டுள்ளது?
விடை: ஆ. டியூட்ரியம் மற்றும் ஈ. கால்சியம்
7. ஒரு சல்பர் ( கந்தகம்) அணுவானது 16 புரோட்டான்கள் மற்றும் 16 நியூட்ரான்களைக் கொண்டுள்ளது. அதன் அணு எண் மற்றும் நிறை எண் ஆகியவற்றைக் கணக்கிடுக.
விடை: அ. 16,32
8. 5B11 அணுவில் உள்ள புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக் கணக்கிடு.
விடை: ஆ.5,6,6
9. X மற்றும் Yஆகியவை இரண்டு அணுத்துகள்கள்
X மற்றும் Yஆகியவை தொடர்பான சரியான கூற்று எது?
விடை: இ. X மற்றும் Yஆகியவை வேறுபட்ட இயற்பண்புகளைக் கொண்டுள்ளன.
10. ஐசோபார் இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
விடை: 18Ar40, 20Ca40
11. சோடியம் அணுவின் அணு எண் மற்றும் நிறை எண் முறையே 11 மற்றும் 23 ஆகும். சோடியம் அணுவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை யாது?
விடை: இ. 12
12. Mg → Mg2+ + _______
விடை: 2 எலக்ட்ரான்கள்
13. மீத்தேன் மூலக்கூறானது பின்வரும் அணுக்களைக் கொண்டுள்ளது.
விடை: அ. 1 கார்பன், 4 ஹைட்ரஜன்
II. சுருக்கமாக விடையளி
14. கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்ட அணுவின் அடிப்படை அமைப்பை வரைக.
அ. எலக்ட்ரான்
ஆ. உட்கரு
15. நான் யார்?
அ. மனிதர்களின் ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு நான் அவசியமானவன் _______________.
விடை: கால்சியம் Ca
ஆ. நான் காற்றில் 78% நிறைந்திருக்கிறேன். நான் தாவரங்களின் வளர்ச்சிக்குப் பொறுப்பாகிறேன் _______________.
விடை: நைட்ரஜன் N2
இ. நான் குடிநீரில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறேன் _______________.
விடை: குளோரின் Cl2
16. கீழேஉள்ள அட்ட்வனையில் அ, ஆ, இ, ஈ ஆகியவற்றைக் கண்டுபிடி.