வகுப்பு - 7 - அறிவியல் - பயிற்சித்தாள்-6- உடல் நலமும் சுகாதாரமும்- விடைகள்

 பயிற்சித்தாள் -6 

உடல் நலமும் சுகாதாரமும்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் சுகாதாரப் பணியாளர்கள் பள்ளி மாணவர்களின் உடல் நலனை பரிசோதனை செய்து இரும்புச்சத்து மாத்திரைகள் கொடுக்கின்றனர். இது எதனைக் கட்டுப்படுத்த உதவும்____________.

விடை: இ. இரத்த சோகை


2. ஒரு தீ விபத்தில் ராஜூ தீக்காயமடைந்தான். மருத்துவர் அவனது காயத்திற்கு தோல்-ஒட்டுதல் சிகிச்சையே சிறந்த தீர்வு எனக் கூறினார். காரணம் தீக்காயங்கள்_______________.

விடை: அ. தோலின் முழு ஆழத்திற்குத் தோலினை அழித்து அடிப்படைத் திசுக்களையும் சிதைக்கின்றன.


3. கூற்று மற்றும் அதற்கான காரணத்தை ஆராய்ந்து சரியானதைத் தேர்வு செய்க.

கூற்று: ஒரு நபர் நன்கு வளரவும் , கடினமாக உழைக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் சத்துள்ள உணவு தேவை

காரணம்: பல பொதுவான நோய்கள் ஊட்டச்சத்தின்மை காரணமாக ஏற்படுகின்றன.

விடை: அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி


4. பின்வருவனவற்றில் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பரவக்கூடிய நோய் எது?

விடை: ஆ. நிறக்குருடு


5. பின் வருவனவற்றில் தனி மனித சுகாதாரத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டு எது?

விடை: அ. விளையாடிய பின்பு சுத்தமான ஆடைகளை அணிதல்


6. ஒருவருக்கு முன்கழுத்துக் கழலை நோய் ___________________ குறைபாட்டால் ஏற்படுகிறது.

விடை: ஆ. அயோடின்


7. _________________ என்னும் நோயானது தீங்கு பயக்கும் ஒவ்வாமை தூண்டிகள் உடலுக்குள் உட்புகுந்து சுவாசித்தலை தடை செய்வதால் ஏற்படுகிறது.

விடை: இ. ஆஸ்துமா


II. கோடிட்ட இடத்தை நிரப்புக: 

8.  கட்டத்தில் விடுபட்ட இடத்தை நிரப்புக


நோய்களின் 

பெயர்

உருவாக்கும்

காரணிகள்

தீர்வுகள்

ஈறுகளில் இரத்தக்கசிவு

வைட்டமின் குறைபாடு

சிட்ரஸ் பழங்கள் சாப்பிடலாம்

பற்சிதைவு

பற்களில் காணப்படும் பாக்டீரியாக்கள்

பல் துலக்குதல் (அ) ஃப்ளோசிங்

புறத்திசு நோய்

புகையிலை மெல்லுதல்

புகையிலை மெல்லுதலை தவிர்த்தல், சரிவிகித உணவை உண்ணுதல்

9. சரியா தவறா என எழுதுக.

அ. அனைத்து கிருமிகளும் தீமை பயக்கும்.

விடை: தவறு.


ஆ. திசுத்தாள்களை விட கைக்குட்டைகள் சுத்தமானவை.

விடை: சரி


இ. குணா எப்போதும் தனது நகங்களை கடித்துக் கொண்டிருப்பான். இது சரியான செயலா?

விடை: தவறு


ஈ. நாம் தும்மும் பொழுதும் இருமும் பொழுதும் நமது வாயையும் மூக்கையும் நமது கைகளால் மூடிக் கொள்ள வேண்டும்.

விடை: சரி


உ. திறந்த வெளியில் மலம் கழித்தல் சுற்றுச் சூழலுக்கு உகந்ததல்ல.

விடை: சரி


III. விடைகளை அட்டவணைப்படுத்தவும்.

10. வெட்டுக்காயம் மற்றும் கீறல்கள் ஆகியவை இரண்டு வகையான பாதிப்புகளாகும். வெட்டுக்காயம் எது, கீறல் எது எனக் கண்டுபிடி.

அ. ராகேஸின் தோல் மேற்பரப்பு மட்டுமே சேதமடைந்துள்ளது. அது உள்ளே திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

ஆ. ரத்னாவின் தோல் நீளவாக்கில் கிழிந்து தசைத்திசுக்கள் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விடை:

அ. கீறல்கள்

ஆ. வெட்டுக்காயம்

IV. சுருக்கமாக விடையளி.

11. நான் ஒரு தொற்றா நோயாகும். தோலின் சில பகுதி அல்லது மொத்தப் பகுதியிலும் நிறமி இழப்புகளை ஏற்படுத்துவேன். நான் அனைத்து வயது,பாலினம் மற்றும் இனத்தைச் சார்ந்தவர்களையும் பாதிப்படையச் செய்வேன். என்னை குணப்படுத்த எவ்விதச் சிகிச்சையும் இல்லை. தொடுதல், உணவைப் பகிர்தல் மற்றும் ஒன்றாக உட்கார்வதன் மூலம் நான் பரவுவதில்லை. நான் யார்?

விடை: லுகோடெர்மா

  • லுகோடெர்மா தோலில் சில பகுதி அல்லது மொத்தப் பகுதியில் நிறமி (மெலனின் நிறமி) இழப்புகளால் ஏற்படும் ஒரு தொற்றா நோயாகும். 

  • இது தொடுதல், உணவு பகிர்தல் மற்றும் ஒன்றாக உட்கார்வதால் பரவாது. 


12. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பல்லின் பாகங்களைக் குறி.


13. மனிதன், நாய், பசு மற்றும் ஆடு இவற்றின் பற்சூத்திரங்களை உற்று நோக்குக. உண்ணும் பண்புடன் பற்சூத்திரத்தை தொடர்பு படுத்து.

விடை:

இந்த சூத்திரத்தில், மேல் வரிசையானது மேல் வரிசையில் அமைந்துள்ள பற்களையும், கீழ் வரிசையானது கீழ் வரிசையில் அமைந்துள்ள பற்களையும் குறிக்கிறது.

வெட்டுப்பற்கள்:

வாயின் முன் பகுதியில் உளி போன்று காணப்படும் பற்கள் வெட்டுப் பற்களாகும், இவை உணவை கடிப்பதற்கு உதவுகின்றன.

கோரைப்பற்கள்:

கூரிய முனையுடைய பற்கள், இவை உணவை வெட்டவும், கிழிக்கவும் பயன்படுகின்றன.

முன் கடைவாய் பற்கள்:

இவை அகன்ற பரப்புடையவை, உணவை மெல்லவும் அரைக்கவும் பயன்படுகின்றன.

பின் கடைவாய் பற்கள்:

இவை முன் கடைவாய் பற்களை விட அகன்ற பரப்புடையவை. இவையும் முன் கடைவாய் பற்கள் போன்றே உணவை மெல்லவும் அரைக்கவும் பயன்படுகின்றன.

ஒவ்வொரு விலங்குகளின் உண்ணும் பண்புக்கு ஏற்றவாறு பற்களின் எண்ணிக்கை அமைந்துள்ளது.


14.  கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் பற்களுக்கும், பல் ஈறுகளுக்கும் பலத்தைக் கொடுக்கும் உணவுப் பொருட்களைப் பட்டியலிடு.


பற்களுக்கும், பல் ஈறுகளுக்கும் பலத்தைக் கொடுக்கும் உணவுப் பொருட்கள்:

  • பால்

  • காய்கறி மற்றும் பழங்கள்

  • வெண்ணெய்


15. புளூரைடால் பற்களில் ஏற்படும் பாதிப்புகள் யாவை?


புளோரைடு மனிதர்களின் பற்களில் படிந்து, பாதித்து அவர்களின் பற்களை நிறமாற்றமும், சிதைவும் அடையச் செய்கின்றது.


Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்