வகுப்பு - 7 - அறிவியல் - பயிற்சித்தாள் - 9 -நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்-விடைகள்
பயிற்சித்தாள் - 9
நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. கீழே உள்ள விளக்கப்படத்தை ஆராயவும். எந்த மாற்றமானது தவறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
விடை: ஆ. ரொட்டி தயாரித்தல்
2. பூஜா ஒரு பாத்திரத்தில் ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து பாத்திரத்தை வெப்பப்படுத்தினார். மெழுகுவர்த்தி எரியவில்லை என்றாலும் அது தன் வடிவத்திலும் நிலையிலும் மாற்றம் அடைந்தது. இது என்ன மாதிரியான மாற்றம்?
விடை: ஆ. இயற்பியல் மாற்றம்
3. இரும்பு உருகுதல் என்பது ஒரு இயற்பியல் மாற்றம் . ஏனெனில் ___________.
விடை: ஈ. இவை அனைத்தும்
(உருகிய இரும்பானது மற்றொரு இயற்பியல் நிலையில் இரும்பாகவே இருக்கிறது
புதிய பொருள் உருவாகவில்லை
உருகிய இரும்பைக் குளிர்விக்கும்போது அது மீண்டும் பழைய நிலையை அடைகிறது)
4. கீழே காண்பிக்கப்பட்டுள்ள இரண்டு பாத்திரங்களும் ஒரே கன அளவுள்ள நீரைக் கொண்டுள்ளன. அவை இரண்டும் ஒரு அறை வெப்ப நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டில் எந்த ஒன்று அதிகமாய் ஆவியாகும்?
விடை: ஆ. பாத்திரம் ஆ -வில் உள்ள நீர் அதிக அளவு ஆவியாகும்.
5. இரஹீம் ஒரு நாள் மிகுந்த காய்ச்சலில் இருந்தான். அவனது தாய் அவனது நெற்றியில் ஈரத்துணியை ஒற்றி எடுப்பதன் மூலம் அவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். இவ்வாறு செய்வதன் உண்மையான நோக்கம் என்ன?
விடை: அ. இரஹீமின் உடல் வெப்பநிலையை குறைப்பதற்கு
6. கீழ்க்கண்ட எந்த கலவையை பதங்கமாதல் முறையில் பிரிக்க இயலாது?
விடை: ஈ. சோடியம் குளோரைடு + சுண்ணாம்புத்தூள்
7. தோல் உரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு நிறம் மாறுவதற்கான காரணம் ______________.
விடை: ஈ. மேற்கண்ட அனைத்தும்
( தோல் நீக்கியதால்
ஆக்சிஜனுடன் வினைபுரிந்ததால்
கிழங்கில் உள்ள என்சைமானது காற்றுடன் தொடர்பு கொள்வதால்)
8. தீபாவளி தினத்தன்று நாம் மத்தாப்புகளைப் பற்றவைக்கிறோம். எரிதல் என்பது ________ மாற்றத்திற்கான எடுத்துக்காட்டாகும்.
விடை: இ. மீளா மற்றும் வேதியியல்
9. வேதிவினையின் போது உருவாகின்றன் புதிய பொருளுக்கு _____________ என்று பெயர்.
விடை: இ. வினைவிளை பொருள்
II. பத்தியை படித்து விடையளித்தல்
10. கொடுக்கப்பட்ட படத்தை உற்று நோக்கியும், பத்தியை வாசித்தும் கீழே உள்ள வினாக்களுக்கு பதிலளிக்கவும்.
உருகுதல் என்பது ஒரு திடப்பொருளை அதன் திரவ நிலைக்கு மாற்றுவது மற்றும் அதை வெப்பமாக்குவதன் மூலம் நிகழ்கிறது. அதே சமயம் உறைதல் என்பது ஒரு திரவத்தை அதன் திட நிலைக்கு மாற்றுவது இச்செயல் முறை திரவத்தைக் குளிர்விப்பதன் மூலம் நிகழ்கிறது. கொதித்தல் என்பது ஒரு திரவத்தை வெப்பப்படுத்துதலின் மூலம் நீராவியாக மாற்றும் செயல்முறையாகும். ஆவி சுருங்குதல் என்பது ஒரு வாயுவை குளிர்வித்தல் மூலமாக அதன் திரவ நிலைக்கு மாற்றும் செயல்முறையாகும். ஒரு திடப்பொருளை நேரடியாக வாயுவாக மாறும் செயல்முறை பதங்கமாதல் என்று அழைக்கப்படுகிறது.
அ. _____________ நிகழ்வில் திடப்பொருளானது நேரடியாக வாயு நிலைக்கு மாறுகிறது.
விடை: பதங்கமாதல்
ஆ. பொருளானது திட நிலையில் இருந்து திரவமாக மாறும் நிகழ்வு__________ஆகும்.
விடை: உருகுதல்
இ. உருகுதலின் எதிர்நிலை என்பது ___________ ஆகும். அதாவது திரவப் பொருள் திட நிலையை அடைவது ஆகும்.
விடை: உறைதல்
ஈ. ஆவியாதலின் எதிர் நிலைச்செயலானது________ ஆகும்.
விடை: ஆவி சுருங்குதல்
III. சுருக்கமாக விடையளி:
11. பழம் பழுத்தல் ஒரு வேதியியல் மாற்றம் என்று எவ்வாறு கூறுகிறாய்? விளக்கு.
பழங்கள் பழுப்பது ஒரு வேதியியல் மாற்றம். பழத்தை பழுக்க வைக்கும் போது, பழத்தின் தோலில் இருக்கும் நிறமி மாற்றமடைகிறது. இதை மீண்டும் பச்சையாக மாற்ற முடியாது. மேலும் காயின் பண்புகளிலிருந்து பழுத்த பழத்தின் பண்புகள் வேறுபடுகின்றன என்பதால் இது ஒரு வேதியியல் மாற்றமாகும்.