வகுப்பு - 7 - அறிவியல் - பயிற்சித்தாள் - தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்-வினா-விடைகள்

 பயிற்சித்தாள் -5 

தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கயல்விழி தெளிவான நீர் நிரம்பிய குளம் பச்சை நிறமான பாசி படர்ந்து காணப்படுவதைப் பார்க்கிறாள். குளம் முழுவதும் பாசி படர்வது கீழ்காணும் எவ்வகை இனப்பெருக்க முறையாக இருக்கலாம்?

விடை: இ. துண்டாதல்


2. கொடுக்கப்பட்டுள்ள பட வரிசையைக் கொண்டு அதன் இனப்பெருக்க முறையை கண்டறிக.

விடை: இ. ஈஸ்டின் மொட்டு விடுதல்


3. சுனில் ஒரு உருளைக் கிழங்கை படத்தில் காட்டியவாறு சில துண்டுகளாக வெட்டினான். இதில் எத்துண்டு/துண்டுகள் புதிய தாவரத்தை உருவாக்க இயலாது? ஏன்?

விடை: இ. Q மற்றும் S


4. கீழே கொடுக்கப்பட்டுள்ள  மலர்கள் அ, ஆ மற்றும் இ ஐ உற்று நோக்கி அவற்றுள் எது/எவை முழுமையற்ற மலர்/மலர்கள் எனக் கண்டறிக.

விடை:ஈ. அ மற்றும் ஆ


5. கூற்று / காரணம்

கூற்று(A): உடல் இனப்பெருக்கம் பாலிலா இனப்பெருக்கத்தின் ஒரு வகையாகும்.

காரணம் (R): உடல் இனப்பெருக்கத்தின் போது இருவகை பெற்றோர்கள் பங்கு பெறுவதில்லை.

விடை: அ. கூற்று(A) மற்றும் காரணம்(R) இரண்டும் சரி.(R), (A) விற்கான சரியான விளக்கம்.

II. பொருத்துக

6. உயிரினங்களை அவைகளின் இனப்பெருக்க முறையுடன் பொருத்துக.


உயிரினம்

இனப்பெருக்க முறை

ரோஜா

பதியம் இடல்

ரொட்டிகாளான்

ஸ்போர்கள்

மல்லிகை

தண்டுப்போத்து

ஸ்பைரோகைரா

துண்டாதல்


III. சுருக்கமாக விடையளி

7. கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு அதற்கான சரியான  பதத்தை கண்டறிந்து எழுதுக

அ. வண்ணமுடையது மகரந்த சேர்க்கைக்காக, பூச்சிகளையும் பறவைகளையும் கவரும்.

விடை: அல்லி இதழ்


ஆ. வளரும் இளம் மலர் மொட்டுகளை மூடி பாதுகாப்பது

விடை: புல்லி  இதழ்


இ.  மகரந்தத்துகள்களை உருவாக்கும் மலரின் ஆண்   பால்உறுப்பு.

விடை: மகரந்தத்தாள்


ஈ.   சூலகப்பை, சூலக  தண்டு, சூலக முடியை கொண்ட மலரின் பெண் உறுப்பு.

விடை: சூலக வட்டம்

உ. கருவுற்ற சூல்

விடை: விதை


8. ஊட்டி மற்றும் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு  வெளியில் போகும்போது குறிப்பாக மழைக்காலங்களில் அவற்றின்மீது பஞ்சுபோன்ற வளர்ச்சியைக் காணலாம்.

அ.  அந்த வளர்ச்சி எவ்வாறு அறியப்படுகிறது?

விடை: அவை ரொட்டி  காளான்கள் ஆகும்.


ஆ.  அவ்வளர்ச்சி எதன் மூலம் நடைபெறுகிறது?

விடை: வளர்ச்சி ஸ்போர்கள்  உருவாதல் மூலம் நடைபெறுகிறது.


9. ஒரு மரத்தில் மாநகர் கெவினிடம் மலரை கொடுத்து அதன் பாகங்களை பிரித்து தனிமைப்படுத்த கோரினர். அவன் இடுக்கியில் உதவியுடன்   பிரித்து W,X,Y,Z  என வரிசையாக அடுக்கினான். ஆனால் அப்பாகங்களின் பெயர் அவனுக்கு தெரியவில்லை. அப்பாகங்களைக் குறிக்க அம்மாணவனுக்கு உதவுங்கள்.

விடை: 

W - அல்லி இதழ்

X - புல்லி இதழ்

Y - மகரந்தத்தாள்

Z - சூலக வட்டம்


10. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இருபால் மலரில் விடுபட்ட பாகத்தை வரைந்து பாகம் குறிக்கவும்.

விடை: 

விடுபட்ட பாகம்

11.  கொடுக்கப்பட்டுள்ள படத்தை உற்று நோக்கவும்.

அ. படத்தில் உள்ள தாவரத்தை கண்டறிந்து பெயரை எழுதுக

விடை: ப்ரையோபில்லம்

ஆ. இந்த படம் தாவரத்தின் எந்த செயல்பாட்டினைக் குறிக்கிறது?

விடை: இலை நுனியின் மூலம் இனப்பெருக்கம் உருவாதல்

இ. புதிய தாவரங்கள் எங்கிருந்து வளர்கின்றன?

விடை: முழு இலையின் விளிம்புகளில் காணப்படும் மொட்டுகளில் இருந்து புதிய சேய் தாவரங்கள் தோன்றுகின்றன.


12. சீதா, பூக்கும் தாவரங்களின் வாழ்க்கை சுழற்சியினை வரிசைப்படுத்த முயற்சிக்கிறாள். வாழ்க்கை சுழற்சியின் செயல்முறைகள் கீழே A,B,C,D எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இச்செயல் முறைகளை சரியாக வரிசைப்படுத்த சீதாவிற்கு உங்களால் உதவ முடியுமா?

விடை: தெரிவு A

Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்