வகுப்பு - 7 - அறிவியல் - பயிற்சித்தாள் - 1- அளவீட்டியல் - வினா-விடைகள்

பயிற்சித்தாள் - 1


அளவீட்டியல்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உலக அளவில் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அளவீட்டு முறை எது?

விடை: இ. System of International Units


2. வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட இயலாத இயற்பியல் அளவுகள்______________ எனப்படும்.

விடை: ஈ. அடிப்படை அளவுகள்


3. இராமு ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு நடந்து செல்கிறான்;. அவனது பள்ளிக்கும் அவனது வீட்டிற்கும் இடையே உள்ள தூரம் 1850மீ ஆகும். அவன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் நடந்து செல்கிறான்?

விடை: 3700மீ


4. இராணி தனது வகுப்புத் தோழியான சீதாவிடம் அவர் முதுகு சுவருக்கு எதிராக இருக்கும்படி நிற்கச் சொன்னாள். சீதாவின் தலைக்கு மேலே சுவரில் இராணி ஒரு அடையாளத்தை வைக்கிறார். தரையில் இருந்து சுவரிலுள்ள அடையாளத்திற்கான தூரத்தை அளந்தார். இந்த அளவு 150 செ.மீ ஐக் காட்டுகிறது. சீதாவின் உயரம் என்ன?

விடை: இ. 1.5 மீ


5. ராஜூ படத்தில் காட்டியபடி ஒரு வளைகோட்டை வரைகிறார். 

அவர் வளைகோட்டின் நீளத்தை அளவிட விரும்புகிறார். ஆகவே அவர் பின்வரும் _______________ உபகரணத்தை பயன்படுத்துகிறார்.

விடை: ஆ. கவை அல்லது நூல்


6. ஒரு மீட்டர் அளவுகோல் இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது. உடைந்த மீட்டர் அளவுகோலின் முதல் துண்டின் அளவு 0 செ.மீ இல் தொடங்கி 54.5 செ.மீ இல் முடிகிறது. இரண்டாவது உடைந்த துண்டின் அளவு 54.5 செ.மீ இல் தொடங்கி 100 செ.மீ - இல் முடிகிறது. உடைந்த இரண்டாவது அளவுகோலின் நீளம் என்ன?

விடை: விடை தரப்படவில்லை : 45.5 செ.மீ


7. கமலா கரும்பலகையின் அளவை அளந்தார். கரும்பலகையின் நீளம் 11 மீ மற்றும் உயரம் 8 மீ. கரும்பலகையின் பரப்பளவு _______________ ஆகும்.

விடை: ஆ.88மீ 2


8. கவிதா வட்டமான தோட்டத்தின் பரப்பளவு 154மீ 2 என அளந்தார். வட்டத்தின் விட்டத்தைக் கண்டுபிடி.

விடை: ஆ.14 மீ


9. நிறை, அடர்த்தி மற்றும் கன அளவிற்கான தொடர்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எது தவறான ஒன்றாகும்.

விடை: ஈ. கன அளவு  = நிறை / அடர்த்தி


10.  பின்வரும் வாக்கியத்தில் எது தவறானது ?

ஈ.  SIஅலகு முறையில் 17 அடிப்படை அளவுகள் உள்ளன.


11. எது சரியானது?

 வாக்கியம்-1 ஒரு பொருளால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தின் அளவு அதன் கன அளவு அல்லது பருமன் எனப்படும் 

வாக்கியம்- 2 :கன அளவு = நீளம் X உயரம் 

வாக்கியம்-3: கன அளவின் SI அலகு கன மீட்டர் அல்லது மீ 3

விடை: அ. வாக்கியம் 1 & 3


12. எது சரியானது?

I. கன சதுரத்தின் கன அளவு = பக்கம் X பக்கம் X பக்கம் 

II. கன செவ்வகத்தின் கன அளவு = நீளம் X அகலம் X உயரம்

III. கோளத்தின் கன அளவு 43X π X ஆரம்3

IV. உருளையின் கன அளவு = π X ஆரம்2X உயரம்

விடை: இ. I, II., III. & IV


13. பின்வருவனவற்றுள் தவறான வாக்கியத்தை தேர்வு செய்க

விடை: அ. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் ஒவ்வொரு நாளும் மாறாமல் நிலையானதாக இருக்கும்.


14. வேறுபட்ட ஒன்றை கண்டுபிடி.

விடை: இ. பரப்பு


15. வேறுபட்ட ஒன்றை கண்டுபிடி.

விடை: ஈ. பொருளின் அளவு


16. பின்வரும் வாக்கியத்தில் எது சரியானது?

விடை: அ. ஒரு கவை அல்லது நூல் அல்லது மெல்லிய கம்பி ஆகியவற்றை பயன்படுத்தி வளைகோட்டின் நீளத்தை அளவிடுதல்.


II. பொருத்துக


17. 

அடிப்படை அளவுகள்

அடிப்படை அலகுகள்

பொருளின் அளவு

  மோல்

மின்னோட்டம்

ஆம்பியர்

ஒளிச்செறிவு

கேண்டிலா

நீளம்

மீட்டர்

வெப்பநிலை

கெல்வின்

நேரம்

வினாடி

நிறை

கிலோ கிராம்


18. 

ஒழுங்கான வடிவங்களுக்கான பரப்பை பொருத்துக.

ஒழுங்கான வடிவங்கள்

பரப்பு

செவ்வகம்

π X r2

வட்டம்

a2

சதுரம்

l X b

முக்கோணம்

12b X h


III. கோடிட்ட இடத்தை நிரப்புக.


19. 

அ. ஒரு கொள்கலனில் ஊற்றக்கூடிய அதிகபட்ச திரவத்தின் பருமனே ______________ எனப்படும்.

விடை:  கொள்ளளவு


ஆ.  திரவங்கள் ஒரு குறிப்பிட்ட பருமன் அல்லது கன அளவைக் கொண்டு இருக்கும். ஆனால் அவைகளுக்கு நிலையான__________ கிடையாது.

 விடை: வடிவம்


இ.  எடை மிகுந்த பொருள்கள் நீரில் மூழ்கும். எடை குறைந்த பொருட்கள்  நீரில்__________.

விடை:  மிதக்கும்


ஈ.  ஒரு  _______________  அதன்   ஓரலகு  பருமனில் அப்பொருள் நிறைக்கு சமம் 

ஆகும்.

விடை: அடர்த்தி


IV.சரியா தவறா என எழுதுக.


20. 

அ. ஒரே அளவிலான இரும்புத்துண்டின்  நிறை, மரத்துண்டின் நிறைய விட அதிகமாகும்

விடை: சரி


ஆ. அதிக அடர்த்தி கொண்ட பொருள்கள் அடர்வுமிகு  பொருள்கள் எனப்படும்.  குறைந்த அடர்த்தி கொண்ட பொருள்கள் அடர்வு குறை பொருள்கள் எனப்படும்.

விடை:  சரி


இ.  வெவ்வேறு பொருட்கள் ஒரே  அடர்த்தியை கொண்டுள்ளன.

விடை:  தவறு


ஈ. பொருள் இலேசானதா அல்லது கனமானதா என்பதனை தீர்மானிப்பது அப்பொருளின் அடர்த்தி ஆகும். 

விடை: சரி.


Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்