வகுப்பு - 7-அறிவியல்- பயிற்சித்தாள் 12- ஒளியியல்- விடைகள்
பயிற்சித்தாள் - 12
ஒளியியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. மெழுகுவர்த்தி நெருப்பிலிருந்து ______________ ஒளிக்கதிர்கள் வெளிவருகின்றன.
விடை: ஆ. விரிந்த
2. ____________________ ஐ விட வேகமாக எதுவும் பயணிக்க முடியாது.
விடை: அ. ஒளி
3. படுகதிர், எதிரொளிப்புக் கதிர் மற்றும் ______________ அனைத்தும் ஒரே தளத்தில் இருக்கின்றன.
விடை: இ. குத்துக்கோடு
4. _____________ ஒரு ஒளிபுகா பொருளின் எடுத்துக்காட்டு.
விடை: ஆ. மரக்கதவு
5. ஓரளவு ஒளியை தன்னுள்ளே அனுமதிக்கும் பொருட்கள் ________________ என்று அழைக்கப்படுகின்றன.
விடை: இ. கசியும்
6. ஊசித்துளை கேமராவில் _____________ பிம்பம் பெறப்படுகிறது.
விடை: அ. தலைகீழ்
II. பொருத்துக
III. கோடிட்ட இடத்தை நிரப்புக:
11. ஒரு திரையில் உருவாகக் கூடிய பிம்பம் _______ என்று அழைக்கப்படுகிறது.
விடை: மெய் பிம்பம்
12. புகை என்பது ஒரு ________________ பொருளுக்கு எடுத்துக்காட்டாகும்.
விடை: ஒளி கசியும்
13. ஒளியின் வேகம் _________________.
விடை: 3 X 10 ^8ms^-1
IV. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் சரியானதா? சரியில்லை என்றால் காரணம் கொடுக்கவும்.
14. முழுமையான இருண்ட அறையில் கண்ணாடியில் நம் பிம்பத்தைக் காணலாம்.
விடை: தவறு.
இருண்ட அறையில் ஒளி எதிரொளிப்புக்கு சாத்தியமில்லாததால், கண்ணாடியில் நம் பிம்பத்தைக் காணமுடியாது.
15. ஒளியின் பாதையில் ஒரு பொருள் வைக்கப்படும்போது பொருளுள்ள அதே பக்கத்தில் நிழல் எனப்படும் இருண்ட பகுதி உருவாகிறது.
விடை: தவறு.
ஒளியின் பாதையில் ஒரு பொருள் வைக்கப்படும்போது பொருளுக்கு எதிர் பக்கத்தில் நிழல் எனப்படும் இருண்ட பகுதி உருவாகிறது.
16. ஒளிக்கதிர் 45° கோணத்தில் ஒரு கண்ணாடியில் விழுந்தால் எதிரொளிப்பு கதிருக்கும் குத்துக்கோட்டிற்கும் இடையிலான கோணம் 45° ஆகும்.
விடை: சரி
17. படுகோணம் எப்போதும் எதிரொளிப்புக் கோணத்தை விட அதிகமாக இருக்கும்.
விடை: தவறு.
படுகோணம் எதிரொளிப்புக்கோணம் இரண்டும் எப்போதும் சமமாக இருக்கும்.
18. ஒரு சமதள ஆடியின் மேற்பரப்பில் விழும் இணையான கதிர்களின் தொகுப்பு எதிரொளிப்புக்கு பிறகும் ஒன்றுக்கொன்று இணையாக பயணிக்கிறது.
விடை: சரி
V. ஓரிரு வாக்கியங்களில் பதிலளிக்கவும்.
19. ஒளிபுகா பொருள் ஒளியின் பாதையில் வரும்போது ஏன் நிழல் உருவாகிறது?
ஒளியானது நேர்க்கோட்டில் மட்டுமே பயணிக்கும்.
அது தன் பாதையில் உள்ள பொருளைச் சுற்றி வளைந்து செல்லாது.
எனவே, ஒளிபுகா பொருள் ஒளியின் பாதையில் வரும்போது,நிழல்கள் உருவாகின்றன.
20. நிழலுக்கும் எதிரொளிப்புக்கும் என்ன வித்தியாசம்?
நிழல் மற்றும் எதிரொளிப்பு இரண்டுமே ஒளியினால் ஏற்படுகின்றன.
பொருட்கள் ஒளியின் பாதையைத் தடுக்கும்போது நிழல்கள் உருவாகின்றன.
ஒளி வீசும் பொருட்கள், மற்ற பொருட்கள் மீது பட்டு திரும்புவதால் எதிரொளிப்பு ஏற்படுகின்றன.
VI.சுருக்கமாக விடையளி
21. உங்கள் உற்றுநோக்கலை வெளிப்படுத்த படத்தை கவனித்து ஒரு கதிர் வரைபடத்தை உருவாக்கவும்.
ஒளி எதிரொளிப்புக்கதிர் - பெரிஸ்கோப்