வகுப்பு - 8 - அறிவியல் - பயிற்சித்தாள் - 11- காற்று - வினா- விடைகள்
பயிற்சித்தாள் - 11
காற்று
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தாவரங்கள் ஒளிச் சேர்க்கைக்கு_____________ பயன்படுத்துகின்றன
விடை: இ. கார்பன் டை ஆக்சைடு- CO2
2. கடல் ஏரி மற்றும் ஆறுகளில் உயிரினங்களின் வாழ்க்கை நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனின் காரணமாக எளிதானதாக இருக்கிறது. இதற்கு காரணம்______________.
விடை: இ. நீரில் ஆக்ஸிஜனின் அதிக கரைதிறன் (ஆக்சிஜன் ஆனது நைட்ரஜனை விட இரு மடங்கு நீரில் அதிகமாக கரையும் தன்மை உடையது )
3. வளிமண்டலத்தில் ஆக்சிஜன்_____________________________ சதவீதம் ( % ) உள்ளது.
விடை: ஆ. 21
4. ஆக்சிஜன் சோடியம் உலோகத்துடன் வினை புரியும் போது ________________ கிடைக்கிறது.
விடை:ஆ. சோடியம் ஆக்சைடு
5. துருவின் வேதியியல் பெயர்_____________________________________.
விடை:ஆ. நீரேற்றிய இரும்பு(II) ஆக்சைடு.
6. கீழ்க்காண்பவற்றுள் வெடிபொருளாக பயன்படாத ஒரு நைட்ரஜன் சேர்மத்தை அடையாளம் காணவும்.
விடை.இ. அமோனியா
7. கீழ்க்கண்டவற்றில் எது பசுமை இல்ல வாயு?
விடை: இ. கார்பன் டை ஆக்சைடு
8. ஆழ்கடலில் மூழ்கி பவர்கள் ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்கின்றனர். ஏனென்றால் _____________________.
விடை: ஈ. மனிதனின் நுரையீரல் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொள்ள முடியாது.
9. நைட்டர் என்பது______________________________.
விடை:அ. பொட்டாசியம் நைட்ரேட்
10. நைட்ரஜன் உணவுப் பொருள்களை பதப்படுத்தப் பயன்படுகிறது. ஏனென்றால் ________________________________
விடை : இ. இது உணவுடன் வினை புரியாது
11. மக்கள் வாகனங்களுக்கு அழுத்தப்பட்ட காற்றைவிட நைட்ரஜனை விரும்புகிறார்கள். ஏனென்றால்________________________________
விடை:ஈ. மேற்குறிப்பிட்ட அனைத்தும்
(சக்கரத்தின் அழுத்தம் நீண்ட காலத்திற்கு மாறாமல் இருக்கிறது, சிறிது எரிபொருளை சேமிக்கிறது, சக்கர பராமரிப்பு செலவை குறைக்கிறது)
12. நிலத்தில் நைட்ரஜனை செயற்கையாக நிலைநிறுத்த வழிவகுக்கும் செயல்முறையை கண்டறியவும்.
விடை:இ. நைட்ரஜன் அதிகமாக காணப்படும் NPK உரங்கள் போன்ற உரங்களை சேர்த்தல்.
13. வெப்பநிலைமானிகளில் பாதரசத்திற்கு மேலுள்ள வெற்றிடத்தை நிரப்ப நைட்ரஜன் பயன்படுகிறது ஏனென்றால்_____________.
விடை: அ. இது பாதரசம் ஆவியாதலை குறைக்கிறது
14. காற்று ஏற்றப்பட்ட நீர் என்பது____________________.
விடை: இ. கார்பன் டை ஆக்சைடு வாயு நீரில் கரைந்துள்ள பொருளாகும்.
15. வளி மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகமாகிக் கொண்டுவருவதற்கு முக்கிய காரணம் ____________________.
விடை: ஆ. காடுகளை அழித்தல்
16. புவி வெப்பமாதல் முக்கியமான காரணங்களில் ஒன்று வளிமண்டலத்தில்___________ வாயுவின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதே ஆகும்
விடை: இ. கார்பன் டை ஆக்சைடு- CO2
II. பொருத்துக
17. பொருத்துக
18. நைட்ரஜனை பயன்படுத்தி ஹேபர் முறையில் நான் தயாரிக்கப்படுகி தயாரிக்கப்படுகிறதுறேன். உரங்கள் தயாரிப்பில் நான் பெருமளவு பயன்படுகிறது நான் யார்?
விடை: அமோனியா
19. சுண்ணாம்பு நீரை பால் போல மாற்றுவேன். தீயணைப்பான்களில் பயன்படுகிறேன். நான் யார்?
விடை: கார்பன் டை ஆக்சைடு