வகுப்பு - 8- அறிவியல் - பயிற்சித்தாள் - 12 - அணு அமைப்பு - வினா-விடைகள்

 பயிற்சித்தாள் - 12

அணு அமைப்பு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. உலக அளவில் இதுவரை எத்தனை தனிமங்கள்  கண்டறியப்பட்டுள்ளன? அவற்றில் இயற்கையில் கிடைக்கக்கூடிய தனிமங்கள் எத்தனை?

விடை: ஆ.118, 92

2. கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில்  டால்டனின் அணுக்கொள்கை இன் சிறப்புகளில் ஒன்றாகும்?

விடை: ஈ.  டால்டனின் அணுக்கொள்கை பெரும்பாலான திரவங்கள் மற்றும் வாயுக்களின் பண்புகளை விவரிக்கின்றது.

3.  கீழ்க்கண்ட படத்தில் 1, 2, 3, மற்றும் 4 குறிப்பது என்ன?

விடை: இ. 1-கேதோடு, 2- குறைந்த அழுத்தத்திலுள்ல வாய், 3- ஆனோடு, 4- கேதோடு கதிர்கள்

4. முந்தைய தலைமுறை தொலைக்காட்சி பெட்டிகளில் பயன்படுத்தப்பட்ட  மின் குழாயின் பெயர் என்ன?

விடை: ஆ. கேத்தோடு கதிர் குழாய்

5.  ஆனோடு  கதிர்களைப் பற்றிய பின்வரும் கருத்துக்களில் தவறானது எது?

விடை: ஆ.  நேர்மின்வாய் கதிர்களின் பண்புகள் மின்னிறக்க குழாயினுள் இருக்கும் வாயுவின் தன்மையை சார்ந்தது அல்ல.

6.  கதிர்கள் பின்புலத்தில் எதிர்மின் தகட்டை நோக்கி விலகல் அடைகின்றன. இது ஆனோடு  கதிர்கள்_______ மின்சுமையை பெற்றுள்ளன என்பது புலனாகிறது.

விடை: ஆ. நேர்

7.  கீழே தரப்பட்டுள்ள அட்டவணையைப் பயன்படுத்தி வினா எண் 8 மற்றும் 9 ஆகியவற்றிற்கு பதில் அளிக்கவும்.


துகள்

நிறை

மின்சுமை

எலக்ட்ரான்

9.1 X 10 -28 கிராம்

-1

  புரோட்டான்

1.6 X 10 -24 கிராம்

+1

நியூட்ரான்

1.6 X 10 -24 கிராம்

0

8. எந்த இரு அடிப்படை துகள்கள் ஒரே நிறையைக் கொண்டுள்ளன?

விடை: அ. புரோட்டான், நியூட்ரான்

9. எந்த ஒரு அடிப்படை துகள் மிகக் குறைந்த அல்லது புறக்கணிக்க தக்க மின்சுமையை கொண்டுள்ளது?

விடை: இ. எலக்ட்ரான்

10.  பின்வரும் வேதிச் சமன்பாட்டில் ஆங்கில எழுத்துக்கள் எவை எவற்றை குறிக்கின்றன?

CH4 +XCl2 → CCL4 + YCl

விடை: அ. 4, 4

II. குறுகிய விடையளி

11. கால்சியம் கார்பனேட், ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபட்டு கால்சியம் குளோரைடு, கார்பன்டை ஆக்சைடு மற்றும் நீரைத் தருகின்றது. இதற்கான சொற் சமன்பாட்டை எழுதுக.

விடை: 

கால்சியம் கார்பனேட் + ஹைட்ரோகுளோரிக் அமிலம் → 

கால்சியம் குளோரைடு +கார்பன்டை ஆக்சைடு + நீர்

CaCO3 + 2HCl    →   CaCl2  + CO2  + H2O

12. பின் வரும் வேதிச் சமன்பாட்டை சமன் செய்யவும்.

விடை: 

3Mg + N2  → Mg3N2


Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்