வகுப்பு - 8 - அறிவியல் - பயிற்சித்தாள் - 13 - நீர் - வினா-விடைகள்
பயிற்சித்தாள் - 13
நீர்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு.
கூற்று: நீர் வளம் குறைந்து கொண்டே வருகிறது.
காரனம். பெருகிவரும் மக்கள் தொகையினாலும், வாழ்க்கை முறை மாற்றங்களினாலும் தேவைகள் அதிகரித்து வருகிறது.
விடை: இ. கூற்று சரி. காரணம் தவறு.
2. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு.
கூற்று: பனிக்கட்டியின் மேல் சறுக்கு விளையாட்டில் ஈடுபடுபவர்கள்
காரணம்: பனிச்சறுக்கில் ஈடுபடுபவர்களால் பனிக்கட்டியின் மீது செலுத்தப்படும் அழுத்தம் காரணமாக பனிக்கட்டியின் உறைநிலை உயர்கிறது.
விடை: ஆ. கூற்று மட்டும் சரி.
3. தூய நீரில் நீல லிட்மஸ் தாளை நனைக்கும் போது நீல லிட்மஸ் தாளானது
விடை: ஆ. எவ்வித மாற்றமுமின்றி இருக்கிறது.
4. உனது சுற்றுப்புறத்தில் சில தண்ணீர்க் குழாய்கள் மீது துரு படிந்திருப்பதைப் பார்த்திருக்கலாம். துருவின் வேதியியல் பெயரை உன்னால் கூற இயலுமா?
விடை: அ. இரும்பு ஆக்சைடு
5. உனது வீட்டிலோ அல்லது பள்ளியிலோ அல்லது வேறு இடங்களிலோ நீரில் கரைந்துள்ல மாசுக்களையும், கிருமிகளையும் நீக்குவதற்கு R.O சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பாய்? இதில் R.O என்பது எதைக் குறிக்கிறது?
விடை: இ. Reverse Osmosis (எதிர்சவ்வூடு பரவல்)
6. கீழ்க்காண்பனவற்றில் எதை நீரில் உள்ள கிருமிகளை அழிக்க பொதுவாக பயன்படுவதில்லை?
விடை: இ. சூரிய ஒளி
7. நீரின் கடினத்தன்மைக்கு காரணமாக இருப்பவை நீரில் கரைந்துள்ள ______________ஆகும்.
விடை: ஆ. கால்சியம் மற்றும் மக்னீசியம் உப்புக்களே
8. நீரின் கடினத்தன்மையானது ___________மூலமாக நீக்கப்படலாம்.
விடை: ஈ. இவை அனைத்துமே
(கொதிக்க வைத்தல், அயனி பரிமாற்றம்,சலவை சோடாவை சேர்த்தல்)
9. கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடைத்தேர்ந்தெடு.
கூற்று1: நெகிழி நுண்மணிகள் என்பவை மனித குளியலறைப் பயன்பாட்டுப் பொருள்களில் சேர்க்கப்படும் நுண்ணிய நெகிழிக் கோளங்களாகும்.
கூற்று 2: ஆகவே, இவை நீர் ஆதாரங்களுக்கோ, அவற்றில் வாழும் உயிர்களுக்கோ தீங்கு விளைவிப்பவை அல்ல.
விடை: இ. கூற்று 1 மட்டுமே சரியானது.
10. உன் வீட்டில் உருவாகும் கழிவுகளை எவ்வாறு வகைப்படுத்துவாய்?
விடை: ஆ. மறு சுழற்சி செய்யக் கூடியவை. மறு சுழற்சி செய்ய முடியாதவை
II. சுருக்கமாக விடையளி
11. தூய நீரின் இயற்பண்புகள் குறித்த கீழ்க்காணும் தகவல்களை நிரப்பவும்.
அ. கொதிநிலை- 100oC
ஆ. உறைநிலை- 0оC
இ. அடர்த்தி- 1g/cm3
12. பருக உகந்த நீரின் தன்மைகள் சிலவற்றைப் பட்டியலிடு.
விடை: நிறமற்றதாகவும், மணமற்றதாகவும், தெளிந்த நிலையுடையதாகவும், மாசு, திடப்பொருள் அற்றதாகவும் இருக்க வேண்டும்.
13. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை நீர் மாசுபடுத்திகள், நீரை மாசுபடுத்தாதவை என வகைப்படுத்தவும்.
விடை:
14. காலியாக உள்ள இடங்களை நிரப்பவும்
15. முருகன் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது நீர்வாழ் உயிர்ச் சூழலைப் பாதுகாக்க உதவுவதாக விவாதிக்கிறான். அவனது வாதத்தை உன்னால் சரியென்று ஆதரிக்க முடியுமா?
விடை: இயற்கை உரங்களால் இயற்கையைப் பாதுகாக்க முடியும்.
ஆனால், பூச்சிக் கொல்லிகளைப் பயன் படுத்துவதால் இயற்கையைப் பாதுகாக்க முடியாது அதற்குப் பதிலாக உயிரி பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
16. நீர் மாசுபாடானது மனித வாழ்வு மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் ஆகியவற்றைப் பெரிதாகப் பாதிக்கிறது. நீர் மாசுபாட்டைக் குறைப்பதற்கான உனது ஆலோசனைகளைத் தருக. (ஏதேனும் ஐந்து)
விடை:
இயற்கை உரமிடுதல்
இயற்கை இழை ஆடைகளைப் பயன் படுத்துதல்
கழிவு நீரை சுத்திகரித்தல்
நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல்
உயிரி பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துதல்
17. வெப்ப மாசுபாடு எவ்வாறு நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வைப் பாதிக்கிறது?
விடை: வெப்பம் அதிகரிப்பதால் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவு குறைந்து, நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வைப் பாதிக்கிறது.