வகுப்பு - 8 - அறிவியல் - பயிற்சித்தாள்-2 - விசையும் அழுத்தமும் - வினா - விடைகள்






 பயிற்சித்தாள் - 2 

விசையும் அழுத்தமும்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. வளிமண்டல அழுத்தத்தின் SI அலகு யாது? 


விடை: ஆ.பாஸ்கல்


2. பாதரசமானியைக் கண்டறிந்தவர் யார்? 


விடை: இ.டாரிசெல்லி


3. SI அலகு முறையில் ஒரு வளிமண்டல  அழுத்தம் என்பது யாது?


விடை: ஆ.100000 பாஸ்கல்


II. கோடிட்ட இடத்தை நிரப்புக


4. ஒரு பொருள் மிதப்பதை தீர்மானிப்பது மேல் நோக்கு விசை.

 

5.விசையால் செலுத்தப்படும் அழுத்தம் விசையின் எண்மதிப்பையும் அது செயல்படுத்தப்படும் பரப்பையும் சார்ந்து இருக்கும்.


III.  சுருக்கமாக விடையளி


6.  கீழ்க்காணும் படம் எந்த விதியை விளக்குகிறது?

 

விடை: பாஸ்கல் விதி


7. உனது தந்தை எப்பொழுது ஊருக்கு சென்றாலும் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள பெட்டியை எடுத்துச் செல்வதற்கு காரணம் யாது என நீ அறிந்ததுண்டா? 

 

விடை. உராய்வை குறைக்க,சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள பெட்டியை எடுத்துச் செல்கிறார்.

உருளும் உராய்வு, நழுவு குழாயை விட குறைவாக இருக்கும்.


8. கோடாரி, சுத்தியல், துளையிடும் கருவி ஆகியவை உள்ளன. இவற்றில் மரம் வெட்டுவதற்கு நீ எதை தேர்ந்தெடுப்பாய்?காரணம் கூறு.


விடை: கோடாரியை தேர்ந்தெடுப்பேன்.

ஏனென்றால் அது கூர்மையான முனை, மிகச்சிறிய பரப்பு மற்றும் அதிக அழுத்தம் கொண்டது.


9. மாதவன் தனது ஊரில் உள்ள குளத்தின் ஒரு கரையில் இருந்து மறு கரையை சென்றடைய காற்று நிரம்பிய ரப்பர் டியூப் பயன்படுத்துகிறான். இங்கு செயல்படும் தத்துவம் யாது?


விடை: ஆர்க்கிமிடிஸ் தத்துவம் -மிதப்பு விசை.


10. மதுரையில் உள்ள மாலினியின் வீட்டில் 2 நிமிடத்தில் நூடுல்ஸ் சமைக்கப்படுகிறது. அதே நூடுல்ஸ் கொடைக்கானலில் உள்ள அவரது தோழி நளினியின் வீட்டில் சமைப்பதற்கு 5 நிமிடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஏன்?


விடை: கொடைக்கானல் ஒரு உயரமான மலைப்பகுதி ஆகும். உயரமான இடங்களில் வளிமண்டல அழுத்தம் குறைவாக இருப்பதால் கொதிநிலை குறைவாக இருக்கும். அதனால் கொடைக்கானலில் சமைப்பதற்கு, மதுரையை விட அதிக நிமிடம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.


11.  ராமு தரையில் குறுக்கே கனமான கல்லை நகர்த்த முயற்சிக்கிறான். அதை நகர்த்த அவரது தந்தை அவருக்கு உருளை கம்பிகளை கொடுத்தார். காரணம் சொல்லுங்கள்.


விடை: உருளை கம்பிகள் உராய்வை குறைக்கின்றன.

  கனமான கல்லிற்கும் பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசையை விலக்குவதற்கு உருளை கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.


Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்