வகுப்பு - 8 - அறிவியல் - பயிற்சித்தாள் -3, வினா-விடைகள்
பயிற்சித்தாள் - 3
ஒளியியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பொருளானது எந்த இடத்தில் வைக்கப்படும் போது குழிஆடியில் மாயபிம்பம் உருவாகிறது?
விடை: குவியத்தின் உள்ளே வைக்கப்படும் போது
2. பொருளானது எந்த இடத்தில் வைக்கப்படும் போது குவிஆடியில் மாயபிம்பம் உருவாகிறது?
விடை: கண்ணாடி முன் எந்த இடத்திலும் வைக்கப்படும் போதும்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
3. ஒளியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது தன் பாதையில் இருந்து விலகிச் செல்லும் பண்பு ____________எனப்படும்.
விடை: ஒளி விலகல்
III. சரியா தவறா என எழுதுக
4. கண்ணாடி இழை பெரிஸ்கோப் போக்குவரத்து செயல்பாட்டிற்கு பயன்படுகிறது.
விடை. பொதுவான போக்குவரத்திற்கு பயன்படுவதில்லிய. ஆனால், நீர்மூழ்கி கப்பலை நீருக்கடியில் வழி நடத்திச் செல்வதற்கு பெரிஸ்கோப் பயன்படுகின்றது.
5. ஒரு மெழுகுவர்த்தி 30 சென்டி மீட்டர் உயரத்தில் உள்ளது சமதள ஆடி மெழுகுவர்த்தியின் பிம்பமும் 30 சென்டி மீட்டர் உயரத்தில் தான் உள்ளது.
விடை. சரி