வகுப்பு - 8 - அறிவியல்- பயிற்சித்தாள் - 4 - வினா - விடைகள்
பயிற்சித்தாள் - 4
வெப்பம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கீழ்க்கண்டவற்றில் எது வெப்பச்சலன முறையை உள்ளடக்கியது?
விடை: சூடான காற்று மேல் எழும்புவதும், குளிரான காற்று கீழ் இறங்குதலும்
2. திடப்பொருள் வாயுவாக மாற்றமடைதல் _____________ ஆகும்.
விடை: பதங்கமாதல்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
3. நிலக்காற்று மற்றும் கடல் காற்று ஆகிய நிகழ்வுகள் உருவாவதற்கு __________________காரணம் ஆகும்.
விடை: வெப்பச்சலனம்
4. சூரியனிடமிருந்து வரும் வெப்ப ஆற்றல் __________________ மூலம் பூமியை வந்தடைகிறது.
விடை: வெப்பக்கதிர்வீசல்
5. ஆற்றலின் SI அலகு__________________ஆகும்.
விடை: ஜூல்
6. திடப்பொருளில் வெப்பமானது ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குக் கடத்தப்படும் நிகழ்வு __________________.
விடை: வெப்பக்கடத்தல்
III. சரியா தவறா எனக்கூறுக. தவறான கருத்தைத் திருத்தி எழுதுக.
7. ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கும் போது அப்பொருளின் வெப்பநிலை குறைவடைகிறது.
விடை: தவறு.
ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது அப்பொருளின் வெப்பநிலை அதிகரிக்கும்.
8. வாயு நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு குளிர்தல் எனப்படும்.
விடை: சரி.
9. வெப்பச்சலனம் திரவ மற்றும் திண்மப் பொருட்களில் ஏற்படும்.
விடை:தவறு.
வெப்பச்சலனம் திரவ மற்றும் வாயுப் பொருட்களில் ஏற்படும்.
10. வெப்பக் கடத்தல் மூலம் திரவத்தில் வெப்பம் பரிமாற்றம் செய்யப்படுகிறது
விடை: தவறு.
வெப்பச்சலனம் மூலம் திரவத்தில் வெப்பம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.