வகுப்பு8- சமூக அறிவியல்- பயிற்சித்தாள் 4 - மக்களின் புரட்சி - விடைகள்

 பயிற்சித்தாள் 4


மக்களின் புரட்சி


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சியை அரசியல் காரணமாக திகழ்ந்தது ______.

விடை: இ. வாரிசு இழப்புக்கொள்கை


2. 1857ஆம் ஆண்டு புரட்சி அடக்க நடவடிக்கை எடுத்த கவர்னர் ஜெனரல் ______.

விடை: இ. கானிங் பிரபு


3. 1857ஆம் ஆண்டு பாரகபூரில் ஆங்கிலேயரை எதிர்த்தவர்______.

விடை: ஆ.மங்கள் பாண்டே


4. கீழ் காணும் குறியது 1857ஆம் ஆண்டுப் புரட்சிகள் காரணம் இல்லை?


விடை: ஈ. நவீன தேசிய இயக்கத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.


5. கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை வேலூர் கலகத்தோடு தொடர்புடையவை கண்டறியவும்.

விடை: இ. சிலுவை பொறிக்கப்பட்ட தோலினாலான தலைப்பாகை


II. குறிப்புகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


6. 

அ. தீரன் சின்னமலை பாளையக்காரர் ________.

விடை: கொங்கு நாடு


ஆ. சிவகங்கை சிங்கம் என அழைக்கப்பட்டவர் __________.

விடை:சின்ன மருது


இ. வேலு நாச்சியாரின் படை தளபதி ____________.

விடை:குயிலி


ஈ.கட்டபொம்மனின் அமைச்சர் ___________.

விடை:சிவசுப்பிரமணியன்


உ. கட்டபொம்மனின் சகோதரர்கள் சிறையில் இருந்து தப்பித்து வந்தடைந்த இடம் __________.

விடை:கமுதி


III. குறிப்புகளுக்கு தொடர்புடையவரைக் கண்டுபிடித்து எழுதுக.


7. 

I.இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட முதல் அரசி_______.

ii. தென்னிந்தியாவின் ஜான்சிராணி என அறியப்படுபவர்__________.

விடை: இ. வேலு நாச்சியார்


IV. கொடுக்கப்பட்டுள்ள கிளர்ச்சிகளை வரிசைக்கிரமமாக எழுதுக.

8. 

I. மருது சகோதரர்களின் கிளர்ச்சி -

ii. வேலூர் கலகம்

iii. கட்டபொம்மனின் கிளர்ச்சி

iv. புலித்தேவன் கிளர்ச்சி


விடை: ஈ. 4,3,2,1


V. கோடிட்ட இடத்தை நிரப்புக.


9. மதுரை நாயக்கர்களின் கீழ் உள்ள பாலையங்களின் எண்ணிக்கை _____.

விடை: 72


10. ஆங்கிலேயரை தோற்கடித்த முதல் இந்திய மன்னர் ________.

விடை: பூலித்தேவன்


11. 1857ஆம் ஆண்டு புரட்சி துவங்கிய இடம் ________.

விடை: மீரட்


VI. கீழ்க்காணும் கூற்றுகளை சரியா தவறா என்பதை பகுத்து குறிப்பிடுக.


12. 

அ. ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்ட கடைசி பகுதி மீரட்.

விடை: தவறு. 


ஆ. 1857ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு முழு வெற்றி களிப்பில் ஆங்கிலேயர்கள் இருந்தனர்.

விடை: சரி


இ. புரட்சிக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி அதிகாரம் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப் பட்டது.

விடை: சரி


ஈ. ராணி லட்சுமிபாய் ஆங்கிலேயர்களால் 1857 ஏப்ரலில் கொல்லப்பட்டார்.

விடை: தவறு


VII. பொருத்துக


13. சரியாக பொருத்தி விடையை எழுதுக.


தலைவர்கள்

கோட்டைகள்

பூலித்தேவன்

நெற்கட்டும்சேவல் கோட்டை 

கட்டபொம்மன்

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

வேலு நாச்சியார் 

திருப்பத்தூர் கோட்டை

தீரன் சின்னமலை

சங்ககிரி கோட்டை

மருது சகோதரர்கள்

சிவகங்கை கோட்டை


ii. பட்டியல் உன்னை பட்டியல் இரண்டுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


பட்டியல் 1

2 பட்டியல்

டெல்லி

நிக்கல்சன் 

லக்னோ 

லாரன்ஸ் 

கான்பூர்

கேம்பல்

ஜான்சி

சக்ரோஸ்


விடை: ஆ. 3,4,1,2


VIII. படங்களை உற்று நோக்கி விடையளி.

14. i. கொடுக்கப்பட்டுள்ள படங்களோடு தொடர்புடைய புரட்சிகளின் பெயர்களை எழுதுக.



அ. வேலூர் கலகம் 


ஆ. 1857 பெரும் புரட்சி


இ. மருது சகோதரர்களின் கிளர்ச்சி


ii. படத்தைப் பார்த்து விடையளி.

அ. கொழுப்பு தடவப்பட்ட தோட்டா எப்படி புரட்சிக்கு காரணமாயிற்று?

விடை: 

  • துப்பாக்கியில் குண்டுகளை நிரப்புவதற்கு முன் அதன் மேலுறையை பற்களால் கடித்து நீக்க வேண்டும். அதன் மேலுறையில் பசுவின் கொழுப்பு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது. 

  • இதனை இந்திய சிப்பாய்கள் (இந்து, முஸ்லீம்) தங்கள் மத உணர்வை புண்படுத்துவதாக கருதினர். ஏனெனில் இந்துக்கள் பசுவை புனிதமாகக் கருதுபவர்களாகவும். முஸ்லீம்கள் பன்றியை வெறுப்பவர்களாகவும் இருந்தனர்.

  • இந்து முஸ்லீம் வீரர்கள் என்பீல்டு துப்பாக்கியைப் பயன்படுத்த மறுத்து புரட்சியில் ஈடுபட்டனர். இவ்வாறு கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் புரட்சிக்கு காரணமாயிற்று.



ஆ. இந்தியர்களுக்கு இந்த புரட்சியை எப்படி வெற்றிகரமாக அமைந்தது என ஆராய்ந்து கூறு.

விடை: 1857ஆம் ஆண்டு புரட்சி இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்தியா ஒரே நாடு என்ற உணர்வை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தது. பெரும் புரட்சி நவீன தேசிய இயக்கம் தோன்ற வழிவகுத்தது. 



iii. படத்தைப் பார்த்து விடையளி.

அ. படத்தில் உள்ள அரசியின் பெயர்______.

விடை: ஜான்சி ராணி லட்சுமி பாய்


ஆ. புரட்சிக்கு தலைமை வகித்த பகுதி______

விடை: ஜான்சி 


IX. கூற்றுகளுக்கு விடையளி.

16. கூற்றுகளை வாசித்து கீழ்க்கண்ட விடைகளில் சரியானவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக.


i. கூற்று 1.  அக்னியூ தலைப்பாகை வேலூர் கழகத்தின் உடனடி காரணமாகும்.

கூற்று 2. புரட்சியின் முடிவில் சிப்பாய்களின் கோரிக்கையை ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொண்டனர்.

விடை: இ. கூற்று 1, கூற்று 2  சரி


ii. 1857ஆம் ஆண்டு புரட்சி தோல்விக்கான காரணமாகத் திகழ்வது.

i. ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் குறை

ii. ராணுவ பலம் குறைவு

விடை: இ. இரண்டும் சரி


iii. கூற்று: கிறித்தவ சமயப் பரப்பு குழுவினரின் நடவடிக்கைகள் 1857ஆம் ஆண்டு புரட்சிக்கு காரணமாக இருந்தது.

காரணம்: இஸ்லாமிய சமய அறிஞர்கள் இதனை பெரிதுபடுத்தவில்லை.

விடை: ஆ. கூற்று சரி. காரணம் தவறு


X. தலைப்பின் கீழ் உள்ள வினாக்களுக்கு விடையளி.


16. 1857ஆம் ஆண்டு புரட்சி


1.இந்திய சிப்பாய்களின் மத உணர்வை புண்படுத்திய செயல் எது?


விடை:

  • தோட்டாவின் மேலுறையில்,பசுவின் கொழுப்பு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது. 

  • இதனை இந்திய சிப்பாய்கள் (இந்து, முஸ்லீம்) தங்கள் மத உணர்வை புண்படுத்துவதாக கருதினர்.

  • இந்துக்கள் பசுவை புனிதமாகக் கருதுபவர்களாகவும். முஸ்லீம்கள் பன்றியை வெறுப்பவர்களாக வும் இருந்தனர். 


2. மீரட் சிப்பாய்களின் இந்தியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டவர்?

விடை:

மீரட் சிப்பாய்களின் இந்தியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டவர் இரண்டாம் பகதுர்ஷா.


3. ஜான்சி ராணி லட்சுமிபாய் புரட்சியில் ஈடுபட முதன்மை காரணமாக திகழ்ந்தது எது?

விடை:

வாரிசு இழப்புக் கொள்கை


4. பிரிட்டிஷ் அதிகாரம் மீண்டும் இந்தியாவில் நிறுவப்பட்ட ஆண்டு எது?

விடை:

1859 ஆம் ஆண்டு


5. புரட்சியின் முக்கியமான விளைவாக நீ கருதுவது எது?

விடை:

இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்தியா ஒரே நாடு என்ற உணர்வை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்ததை முக்கியமான விளைவாக நான் கருதுகிறேன்.


Xi. பத்தியை படித்து விடையளி


17. 1857 ஆம் ஆண்டு கழகம் இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது அது நிர்வாக முறை மற்றும் அரசின் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட வழிகோலியது.


அ. புரட்சிக்குப் பிறகு கவர்னர் ஜெனரல் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

விடை: வைசிராய்


ஆ. ஆங்கில ராணுவ கொள்கை______.

விடை: ’பிரித்தல் மற்றும் எதிர் தாக்குதல்’


இ. 1858 ஆம் ஆண்டு இந்தியாவின் மேக்னா கார்ட்டா என அழைக்கப்பட்டது_________.

விடை: விக்டோரியா மகாராணி பேரறிக்கை


XII. காரணம் கூறு.


18. 

i. 1857ஆம் ஆண்டு புரட்சியில் இந்தியாவின் அனைத்து பகுதிகளும் பங்கேற்காதது புரட்சி தோல்விக்கான ஒரு காரணம் விவரித்து கூறு.


விடை: 

  • வங்காளம், பம்பாய், சென்னை, மேற்குபஞ்சாப் மற்றும் இராஜபுதனம் ஆகிய பகுதிகள் புரட்சியில் கலந்து கொள்ளவில்லை .

  • சீக்கியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் கூர்க்கா படைப்பிரிவினர் ஆகியோர்களின் விசுவாசத்தை ஆங்கிலேயர் பெற்றனர். புரட்சியை அடக்குவதில் கூர்க்காப் படையினர் ஆங்கிலேயருக்கு உதவினர்.

  • சரியான ஒருங்கிணைப்பு மற்றும்ஒற்றுமை இல்லாததால் அனைத்து பகுதிகளும் பங்கேற்கவில்லை, இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


ii. 1806 ல் நடந்த வேலூர் கலகத்திற்கும் 1857இல் நடைபெற்ற மாபெரும் புரட்சிக்குமான உடனடி காரணத்தின் ஒற்றுமை என்ன என்பதை எழுதுக.


1806 வேலூர் கலகம்

1857 மாபெரும் புரட்சி

ஜூன் 1806இல் இராணுவத் தளபதி அக்னியூ, ஐரோப்பிய தொப்பியை ஒத்திருந்த சிலுவை சின்னத்துடன் கூடிய ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார்.


அது பிரபலமாக 'அக்னியூ தலைப்பாகை' என அழைக்கப்பட்டது. 

இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டுரக துப்பாக்கியே உடனடிக்காரணமாக இருந்தது.


அதன் மேலுறையில் பசுவின் கொழுப்பு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது. இதனை இந்திய சிப்பாய்கள் (இந்து, முஸ்லீம்) தங்கள் மத உணர்வை புண்படுத்துவதாக கருதினர்.

இந்து மற்றும் முஸ்லீம் வீரர்கள் ஒன்றாக இதனை எதிர்த்தனர்.  

இந்து முஸ்லீம் வீரர்கள் என்பீல்டு துப்பாக்கியைப் பயன்படுத்த மறுத்து புரட்சியில் ஈடுபட்டனர்.



XIII. வரைபட வினாக்களுக்கு விடையளி.


19. குறிப்புகளைப் பயன்படுத்தி வினாக்களுக்கு விடையளித்து சரியான விடையினை கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.


A. 1857 ஆம் ஆண்டு பெரும்புரட்சி துவங்கிய இடம் ________________.

விடை: மீரட்


B. இரண்டாம் பகதூர் ஷா தலைமையேற்று நடத்திய இடம் ____________.

விடை: டெல்லி


C. ராணி லட்சுமி பாய் ஆட்சி பகுதி _________.

விடை: ஜான்சி


D. நானசாஹிப் தலைமை ஏற்று நடத்திய இடம் __________.

விடை: கான்பூர்


E. ஆங்கிலேயருக்கு எதிராக இளம் சிப்பாய் புரட்சி செய்த இடம் _______________.

விடை: பாரக்பூர்


Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்