வகுப்பு - 8 - அறிவியல் - பயிற்சித்தாள் - 5 - வினா-விடைகள்
பயிற்சித்தாள் - 5
மின்னியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மின்னூட்டம் பெற்ற இரு பொருட்களை அருகில் கொண்டு வரும்போது ______________________________________.
விடை: பொருட்களில் உள்ள மின்னூட்டத்தை பொறுத்து ஒன்றை ஒன்று ஈர்க்கும் அல்லது விலக்கும்.
2. மின் உருகி கம்பி__________________ உடையது
விடை: குறைந்த உருகுநிலை
3. ஒவ்வொரு______________________________________ 1.602 X 10-19C அடிப்படை மின்னூட்டத்தைப் பெற்றிருக்கும்.
விடை: புரோட்டான் மற்றும் எலக்ட்ரானும்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
4. அணுவானது ______________, _____________ மற்றும்________ ஆகிய அணுக் கூறுகளால் ஆனது.
விடை: புரோட்டான் எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான்
5. அணுக்களில் எதிர்மின்சுமை உள்ள துகள்கள் சுற்றிவரும் பாதையினை______________ என்கிறோம்
விடை சுற்றுவட்டப்பாதை
6. ஒரு அணுவில் உள்ள______________ மற்றும்__________ எண்ணிக்கை சமமாக இருக்கும்.
விடை எலக்ட்ரான் மற்றும் ப்ரோட்டான்
III. சரியா தவறா என எழுதுக. தவறு எனில் சரியான கூற்றை எழுதுக.
7. எலக்ட்ரான்கள் குறைந்த மின் அழுத்தம் உள்ள பகுதியில் இருந்து அதிக மின்னழுத்தம் உள்ள பகுதியை நோக்கி பாய்கின்றது.
விடை சரி
IV. சுருக்கமாக விடையளி.
8. மின் விளக்குகளில் கன்ஸ்டன்ட் கம்பி ஏன் பயன்படுத்தப்படுகின்றது?
விடை: டங்ஸ்டன் கம்பி அதிக உருகுநிலை கொண்டதால் மின் விளக்குகளில் பயன்படுத்தப்படுகின்றது.
9. கண்ணாடி தண்டினை பட்டுத்துணியில் தேய்க்கும் பொழுது என்ன நிகழ்கிறது?
விடை: கட்டுறா எலக்ட்ரான்கள் பட்டுத்துணிக்கு இடமாற்றம் அடைகின்றன. கண்ணாடி தண்டு நேர் மின்னூட்டமும், பட்டுத்துணி எதிர் மின்னோட்டமும் பெறுகிறது.
10. மின்னோட்டத்தை தன்னுள்ளே பாய அனுமதிக்கும் ஏதேனும் இரண்டு பொருட்களை கூறுக
விடை: உலோகங்கள், திரவங்கள் போன்றவை
11. ரவி அளவுகோலினை தலைமுடியில் தேய்த்து விட்டு அதை சிறிய காகிதத்துண்டின் அருகில் கொண்டு செல்லும் பொழுது என்ன நிகழ்கிறது?
விடை: தலைமுடியில் உள்ள எலக்ட்ரான்கள் அளவுகோலிற்கு இடமாற்றம் அடைந்து அதிலுள்ள எதிர்மின் துகள்கள் காகிதத்துண்டின் ஓரத்தில் இருக்கும் நேர்மின் துகள்களை ஈர்க்கின்றன.
12. அணு அமைப்பின் பாகங்களைக் குறி மற்றும் படம் தொடர்பான கேள்விக்கு விடை அளிக்கவும்.
i). புரோட்டான் எவ்வகையான மின்னூட்டத்தைப் பெற்றிருக்கும்.
விடை: நேர் மின்னூட்டம்
ii). எலக்ட்ரான்____________ மின்னூட்டத்தைப் பெற்றிருக்கும்.
விடை: எதிர்
iii). அணுவானது எத்தகைய மின்னூட்டத்தைப் பெற்றிருக்கும்?
அணுவானது நடுநிலை மின்னூட்டத்தை பெற்றிருக்கும்
iv) அணுவின் உட்கருவில் உள்ள இரு அணுக்கூறுகளை கூறுக.
விடை: புரோட்டான் மற்றும் நியூட்ரான்