வகுப்பு - 8 - அறிவியல் - பயிற்சித்தாள் - 6 - வினா- விடைகள்


 



பயிற்சித்தாள் - 6

ஒலியியல்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.ஒலி அதிர்வுகளின் பெரிய வீச்சு___________ உருவாக்கும்

விடை:அ. அதிக சத்தம்

2. ஒலி என்பது ஒருவகை _____________.

விடை:ஆ. ஆற்றல்

3. ஒரு பொருளின் முன்பின் இயக்கம்______________ என அழைக்கப்படுகிறது.

விடை: இ. அதிர்வு

4. மனிதர்களின் குரல் ஒலிப்பெட்டியில் ஒலி உருவாகிறது. வினோத் ஒரு கனமான குரலையும், வினோதினி ஒரு கீச்சு குரலையும் பெற்றுள்ளனர். இந்த சுருதி வேறுபாட்டிற்கு எந்த பகுதி பொறுப்பு?

விடை: ஆ. குரல்நாண்கள்

5. கருவிகளின் குடும்பத்தை அடையாளம் காணவும்.

விடை: அ. காற்று, சரம்(கம்பி), தாளம்


II. பொருத்துக

6. பொருத்துக.


புல்லாங்குழல்

காற்று கருவி

மீயொலி

ட்ரம்ஸ்

ஹெர்ட்ஸ்

அதிர்வெண்

தாளக்கருவி

கம்பிசரம் கொண்ட கருவிகள்

வயலின்

20000 ஹெர்ட்ஸ்க்கு மேல்


III. கோடிட்ட இடத்தை நிரப்புக

7. ஒலி ____________________ஊடகத்தில் வேகமாகப் பயணிக்கிறது.

விடை: திட

8. ஒலி அலை ______________ எனப்படும் உயர் அழுத்தத்தின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது.

விடை: இறுக்கங்கள்

9. ______________ஹெர்ட்ஸ்க்கு கீழே உள்ள ஒலிகளை நம்மால் கேட்க முடியாது.

விடை: 20

10. ஒலி ஆற்றல் ____________ வழியாக மாற்றப்படுகிறது.

விடை: ஊடகம்

11. வீணை மற்றும் சித்தார் __________________கருவிகளுக்கு எடுத்துக்காட்டாகும்.

விடை: கம்பி


IV. ஓரிரு  வார்த்தைகளில் விடையளி

12. கம்பிசரங்களில் உருவாகும் அலைகள் ஒரு உதாரணம் கூறுக.

விடை: குறுக்கலைகள்

13. நெட்டலைகளில் நீங்கள் எதை கவனிக்கின்றீர்கள்?

விடை: துகள்கள் அலைபரவும் திசைக்கு இனையாக அதிர்வுறுகின்றன.

14. ஒரு தோலக்கில்(Dholak)  ஒலி உற்பத்தியாக காரணம் என்ன?

சவ்வு அதிர்வதால் ஒலி உற்பத்தியாகிறது.


V. பின்வருவனவற்றிற்கான காரணத்தை கூறுக.

15. வானியலாளர்கள் சந்திரனின் பேற்பரப்பில் பேசுவதை மற்றவர்களால் கேட்க முடிவதில்லை.

விடை: ஒலி பரவ ஊடகம் இல்லாததால் ஒருவர் பேசுவதை மற்றவர் கேட்க முடியாது.

16. திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் தொடர்பு கொள்ள முடியும்.

விடை: குற்றொலிகள் மூலம் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் தொடர்பு கொள்ள முடியும்.

17. படத்தில் காட்டப்பட்டுள்ள கருவி இசை ஒலியை உருவாக்குகிறது.

விடை: கம்பிகள் அதிர்வடைவதால் இந்தக் கருவி இசை ஒலியை உருவாக்குகிறது.



Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்