வகுப்பு - 8 - அறிவியல் - பயிற்சித்தாள் - 9, நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் - வினா-விடைகள்

 



பயிற்சித்தாள் - 9

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. கொடுக்கப்பட்ட தனிமங்களில் ஒரு எழுத்து குறியீடு கொண்டது எது?

விடை: இ.  நைட்ரஜன்

2.  பின்வரும் விதியின்படி குறியீடு எழுதுவதற்கு  பொருத்தமற்ற இணையை அடையாளம் காணவும்.

“குறியீட்டில் முதல் இரண்டு எழுத்துக்களும் ஒன்றாகவே உள்ள தனிமங்களுள் ஒரு தனிமத்திற்கு முதல் இரண்டு எழுத்துக்களும் மற்றொரு தனிமத்திற்கு முதல் மற்றும் மூன்றாவது எழுத்தும் குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றன.”

விடை: ஆ. கோபால்ட்( Cobalt )-Co; தாமிரம் ( Copper)-Cu

3. கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் கிரேக்க மொழியில் அல்லாதது எது?

விடை: இ.  கால்சியம் -Ca

4.  உலோகங்களின் சில பயன்கள் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளன. இத்தகைய பயன்களுக்கு காரணமாக உள்ள உலோகங்களின் பண்புகள் X,Y மற்றும் Z யாவை?

விடை: அ.  X-தகடாக மாற்றும் தன்மை, Y -கம்பியாக மாற்றும் தன்மை,Z- ஒலியை எழுப்பும் பண்பு

5. X-ன் பண்புகளில் பயன்களையும் கொண்டு பின்வரும் புதிருக்கு தீர்வு காணவும்.

- நான் அழுத்தமானிகளில் பயன்படுத்தப்படுகிறேன்

-  நான் வெப்பநிலைமானி களில் பயன்படுத்தப்படுகிறேன்

-  நான் ஒரு திரவநிலை

விடை: ஆ. பாதரசம்.

6. இரும்பானது ரயில் தண்டவாளங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது இந்த பயன்பாட்டிற்கு வழிவகுக்கும் இரும்பின் உலோகப்பண்பைக் குறிப்பிடு.

விடை: இ.  கம்பியாக மாறும் தன்மை

7. NPK உரங்களில் காணப்படும் அலோகங்களின் இணையை கண்டறி.

விடை: இ.  நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ்

8. கீழ்க்காண்பவற்றில் குறைகடத்தியில் பயன்படும் தனிமத்தைக் கண்டறி.

விடை: இ.  சிலிக்கான்

9. அசெட்டிக் அமிலத்தில் உள்ள தனிமங்கள் யாவை?

விடை: ஆ. கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன்

10.  சலவைத்தூளானது பின்வரும் ஒரு பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல.

விடை: இ.  சமையல் சோடா அல்லது ரொட்டி சோடா

II. பொருத்துக 

11.  பொருத்துக

ஹைட்ரஜன்

ராக்கெட் எரிபொருள்

குளோரின்

நீர் சுத்திகரிப்பான்

பாஸ்பரஸ்

தீப்பெட்டி

கந்தகம்

ரப்பர் பற்றவைத்தல

வைரம்

வெட்டும்/ அரைக்கும் சாதனங்கள்

III.அடையாளம் காண்க

12.  நான் ஒரு அலோகம். ஆனால் இயற்கையில் காணப்படும் பொருள் நிலையிலேயே நான் மிகவும் கடினமானவன் எனில் நான் யார்?

விடை: கார்பன்- வைரம்

13.  பொதுவாக அலோகங்கள் கம்பியாக மாற்றப்படும் தன்மையை பெற்றிருப்பதில்லை. ஆனால் நான் ஒரு   அலோகத்தால் செய்யப்பட்டிருந்தும் மிக அதிகமான கம்பியாகும் தன்மையை பெற்றிருக்கிறேன். நான் யார்?

விடை: கார்பன்

IV.சுருக்கமாக விடையளி

14.  உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பொதுவான பண்புகளை அடையாளம் கண்டு அவைகளுக்கு எதிரேயான கலத்தில் பட்டியலிடவும்.

விடை: 

உலோகங்கள்

அலோகங்கள்

கடினமானவை

மென்மையானவை

பளபளப்பானவை

பளபளப்புத்தன்மை அற்றவை

தகடாக அடிக்கக்கூடியவை

மின்சாரத்தைக் கடத்தாதவை

கம்பியாக  நீட்டக்கூடியவை

ஒலி எழுப்பாதவை

மின்சாரத்தை நன்கு கடத்த கூடியவை


ஒலி எழுப்பக் கூடியவை



15. பின்வரும் தனிமங்களை உலோகங்கள் அலோகங்கள் என்று வகைப்படுத்தி அவற்றின் குறியீட்டையும் தரவும்.

விடை: 

உலோகங்கள்

அலோகங்கள்

தாமிரம்- Cu

ஹைட்ரஜன் - H

அலுமினியம்- Al

ஆக்சிஜன் - O

இரும்பு - Fe

கார்பன் - C

வெள்ளி - Ag

சல்பர் - S

தங்கம் - Au

பாஸ்பரஸ் - P



Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்