வகுப்பு 6 ப1 இயல் ஒன்று தமிழ்க்கும்மி வினா-விடைகள்
இயல் ஒன்று - தமிழ்க்கும்மி
சொல்லும் பொருளும்:
ஆழிப் பெருக்கு - கடல் கோள்
மேதினி - உலகம்
ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
உள்ளப்பூட்டு - உள்ளத்தின் அறியாமை
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தாய் மொழியில் படித்தால் ------ அடையலாம்
அ) பன்மை ஆ) மேன்மை இ) பொறுமை ஈ) சிறுமை
விடை: ஆ) மேன்மை
2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது
அ) மேதினி ஆ) நிலா இ) வானம் ஈ) காற்று
விடை: அ) மேதினி
3. ’செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______
அ) செந் + தமிழ் ஆ) செம் + தமிழ் இ) சென்மை + தமிழ் ஈ) செம்மை + தமிழ்
விடை: ஈ) செம்மை + தமிழ்
4. பொய்யகற்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
அ) பொய் + அகற்றும் ஆ) பொய் + கற்றும்
இ) பொய்ய + கற்றும் ஈ) பொய் + யகற்றும்
விடை: அ) பொய் + அகற்றும்
5. பாட்டு+ இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ) பாட்டிருக்கும் ஆ) பாட்டுருக்கும் இ) பாடிருக்கும் ஈ) பாடியிருக்கும்
விடை: அ) பாட்டிருக்கும்
6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ) எட்டுத்திசை ஆ) எட்டிதிசை இ) எட்டுதிசை ஈ) எட்டிஇசை
விடை: அ) எட்டுத்திசை
நயம் உணர்ந்து எழுதுக.
1. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து எழுதுக.
கொட்டுங்கடி - கோதையரே
எட்டு - எட்டிடவே
ஊழி - ஊற்றெனும்
ஆழி - அழியாமலே
பொய் - பூண்டவர்
மெய் - மேதினி
2. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.
கொட்டுங்கடி - எட்டு
எட்டுத்திசை - எட்டிடவே
ஊழி - ஆழி
பொய் - மெய்
பூட்டறுக்கும் - பாட்டிருக்கும்
3. பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
கண்டதுவாம் - கொண்டதுவாம்
பெருக்கிற்கும் - காலத்திற்கும்
பாட்டிருக்கும் - காட்டிருக்கும்
குறுவினா
1. தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
தமிழ் மொழி
பொய்யை அகற்றும்
மனதின் அறியாமையை நீக்கும்
அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்திருக்கும்
உயிர் போன்ற உண்மையை ஊட்டும்
உயர்ந்த அறத்தைத் தரும்
என்று கவிஞர் கூறுகிறார்.
2. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
செந்தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவவேண்டும் என்று கவிஞர் கூறுகின்றார்.
சிறுவினா
1. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன?
பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ் மொழி. பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழிக்க முடியாது. ஏனெனில், அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்டது, அதனால் தமிழ் மொழி என்றும் நிலைத்திருக்கும் என்று கவிஞர் கூறுகின்றார்.
2. தமிழ்க் கும்மி பாடலின்வழி நீங்கள் அறிந்துகொண்டவற்றை உம் சொந்த நடையில் எழுதுக.
தமிழ் மொழியின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவி உள்ளது
பல நூறு ஆண்டுகால சரித்திரம் கொண்டது
அறிவை வளர்க்கும் நூல்கள் பலவற்றைக் கொண்டது
இது பொய்யை அகற்றி, அறியாமையை நீக்கி,உயிர் போன்ற உண்மையை ஊட்டுகிறது
உயர்ந்த அறத்தையும், உலகம் சிறந்து வாழ வழிகள் பலவற்றை காட்டுவதால் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் என்று நாங்கள் அறிந்து கொண்டோம்.
சிந்தனை வினா
தமிழ் மொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்?
அறிவைப் புகட்டி, அறியாமையை அகற்றுவது நூல்கள் மட்டுமே. அத்தகைய சிறப்பைக் கொண்ட பல நூறு நூல்கள் தமிழில் இருப்பதால் அதைக்கற்பவர்களின் அறியாமையை தமிழ் அகற்றும் என்று அறியலாம்.