வகுப்பு 6 ப1 இயல் ஒன்று கற்கண்டு வினா-விடைகள்
கற்கண்டு
இயல் ஒன்று - தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்
மதிப்பீடு
கொகுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்ப சொற்களை எழுதுக
1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல் இது.
2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச்சொல் ஈ.
3. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல் அஃது
குறுவினா
1. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை
எழுத்து இலக்கணம்,
சொல் இலக்கணம்
பொருள் இலக்கணம்
யாப்பு இலக்கணம்
அணி இலக்கணம்
போன்றவை ஆகும்.
2. மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.
க், ச், ட், த், ப், ற் - ஆகியவை வல்லினம்
ங், ஞ், ண், ந், ம், ன் - ஆகியவை மெல்லினம்
ய், ர், ல், வ், ழ், ள் - ஆகியவை இடையினம்
3. தமிழ் எழுத்துகளுக்குரிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக.
மாத்திரை என்பது இங்கு கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கை நொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1 மாத்திரை
நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 2 மாத்திரை
மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு - அரை மாத்திரை
ஆய்த எழுத்து ஒலிக்கும் கால அளவு - அரை மாத்திரை