வகுப்பு 8- சமூக அறிவியல்- பயிற்சித்தாள் 5- விடைகள்-இந்தியாவில் கல்வி வளர்ச்சி

 பயிற்சித்தாள் -5

இந்தியாவில் கல்வி வளர்ச்சி 


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. இந்திய கல்வியை மேம்படுத்தவும் அறிவியல் சார்ந்த முன்னேற்றத்திற்கும் ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கிய ஆங்கிலேய சட்டம்.

விடை: ஈ. பட்டய சட்டம் 1813


2. மதராஸ் மாகாணத்தில் பொது வழிகாட்டும் துறையை ஏற்படுத்திய கல்விக்குழு

விடை: ஆ. சார்லஸ் உட் கல்விக்குழு


3. அரசியலமைப்பு சட்டம் 45 ஆவது பிரிவு குறிப்பிடுவது

விடை: ஆ. இலவச கட்டாய கல்வி உரிமை


4. பல்கலைக்கழக மானியக் குழு அமைக்க பரிந்துரைத்த குழு

விடை: ஈ. ராதாகிருஷ்ணன் குழு


5. கீழ்காணும் கூற்றுகளில் தொடர்பில்லாதது எது?

விடை: ஈ. மெக்காலேவின் குறிப்புகள் கல்விசார்ந்த கருத்து வேறுபாடுகளை களைந்தது


6. கீழ்க்கண்டவற்றில் சார்ஜன்ட் அறிக்கை குறித்த எந்த கருத்து தவறானது?

விடை: இ. பல்கலைக்கழக கல்விக்கு வழி காட்டியது


II. கோடிட்ட இடத்தை நிரப்புக


7. தேசிய கல்வி கொள்கை 2020 திட்ட வரைவு தலைவர்________________.

விடை: கஸ்தூரி ரங்கன்


8. தமிழகத்தில் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

விடை: 1956


9. பள்ளிகளில் இடைநிலை தவிர்க்கும் பொருட்டு சத்துணவு திட்டமானது விரிவுபடுத்தப்பட்ட ஆண்டு___________

விடை: 1982


III. குறிப்புகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்க.


அ. இந்தியாவில் நவீன கல்வி முறையை தொடங்கிய முதல் ஐரோப்பியர்________.

விடை: போர்த்துக்கீசியர்



ஆ. பிரான்சிஸ் சேவியர் சார்ந்த அமைப்பு_________.

விடை: இயேசு சங்கம்


இ‌. கிறிஸ்தவரல்லாத குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்திய முதல் சமயப் பரப்பு அமைப்பு___________.

விடை: இவாஞ்ச்சிலிஸ்டிக்


ஈ. கல்கத்தா மிஷனரி கல்லூரியை தொடங்கியவர்______________.

விடை: டாக்டர் மிடில்டன்


உ. வட்டார மொழிக் கல்வியை தீவிரமாக முன்மொழிந்தவர்_____________.

விடை: மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டன்


11. சரியான விடையைத் தெரிவு செய்து எழுதுக.


அ. பாண்டியர் காலத்தில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்_________.

விடை: சாலபோகம்


ஆ. பல்லவர் கால கல்வி நிறுவனங்கள்____________.

விடை: கடிகை


இ. பண்டைய இந்தியாவில் ஆசிரியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்___________.

விடை: கணக்காயர்


ஈ. நாயக்கர் கால கல்வி நிறுவனங்கள்____________.

விடை: திண்ணைப் பள்ளிக்கூடம்


IV. பொருத்துக

12. 

i. பொருந்தாத இணையைக் கண்டு பிடித்து காரணம் கூறு.

விடை: இராதாகிருஷ்ணன் கல்விக்குழு-இடை நிலைக்கல்கி

காரணம்: இராதாகிருஷ்ணன் கல்விக்குழு பல்கலைக்கழக மானியக்குழு சார்ந்தது


ii. பொருத்தமான இணையை கண்டுபிடி.

விடை: ஆ.2,4,1,3


iii. கலைந்து கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை சரியாகப் பொருத்துக.


ஆண்டு 

நிகழ்வு

முக்கியத்துவம்

1835

பெண்டிங் தீர்மானம்

மேற்கத்திய கல்வி முறை அறிமுகம்

1857

சென்னை பல்கலைக்கழகம்

ஆங்கிலேய ஆட்சியில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம்

1882

உள்ளூர் வாரிய சட்டம்

புதிய பள்ளி திறக்கவும் மானியம் பெறவும் அதிகாரம்

1929

அண்ணாமலை பல்கலைக்கழகம்

உயர் கல்வி வளர்ச்சியின் அடுத்த கட்டம்


V. கீழ்காணும் கூற்றுகளை சரியா தவறா என்பதைக் குறிப்பிடுக.


13.அ. சமக்ரா சிக்ஷா என்பது பள்ளிக் கல்வியை முன் பருவம் முதல் 12-ஆம் வகுப்பு வரை வழங்குவது

விடை: சரி

ஆ. தொடக்கக் கல்வியில் அதிக முக்கியத்துவம் அளிப்பது RMSA.

விடை: தவறு

இ. SSA இந்திய அரசின் முதன்மை திட்டமாகும்.

விடை: சரி.

VI. கூற்றுகளுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

14.

i. கூற்று 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாண கல்வி அமைச்சர்களின் நிலையை வலுப்படுத்தியது.

காரணம் முழுமையான மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தியது.

விடை: அ. கூற்று சரி காரணம் கூற்றை சரியாக விளக்கவில்லை.

iI. கூற்று. 1952 -53 ஆம் ஆண்டு இடைநிலை கல்வி குழு அமைக்கப்பட்டது இது முதலியார் குழு எனவும் அறியப்படுகிறது.

கூற்று 2. பாடப்புத்தகங்களின் தரம் பாடத்திட்டம் மற்றும் தொழில் நிறுவனங்கள் அருகிலேயே தொழிற்கல்வி சார்ந்த பள்ளிகளை திறப்பது குறித்தும் பரிந்துரைத்தது.

விடை: இ. கூற்று 1 தவறு கூற்று 2 சரி


iii. கூற்று 1: ஆங்கிலக் கல்வியின் மகா சாசனம் என அறியப்படுகிறது.

கூற்று 2: மேற்கத்திய கல்வி முறையை புகுத்துவதே நோக்கம்.

மேற்கண்ட கூற்றுகளில் வுட்ஸ் கல்வி அறிக்கையுடன் தொடர்புடையது எது?

விடை: அ. கூற்று 1 மட்டும்


VII. கீழ்காணும் இரண்டு கூற்றுகளையும் வாசித்து இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன எனக் குறிப்பிடுக.


கூற்று 1

கூற்று 2

பிரான்சிஸ் சேவியர், ஜான் கிர்னாண்டர், c.s. ஜான் சீகன் பால்கு, புளுட்சோ ,மிடில்டன், எல்பின்ஸ்டன் ஆகியோர் முயற்சியால் இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன.

ராஜாராம் மோகன்ராய், பச்சையப்பர், பிரேசர் போன்றவர்களும் கல்விக்காக தங்களின் பங்களிப்பை செய்தனர்.

அயல் நாட்டில் இருந்து வந்தவர்கள், இந்தியக் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள்.

இந்தியக் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட இந்தியர்கள்


VIII. வர்தா கல்வித் திட்டத்தின் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது இவற்றில் பொருந்தாததை வட்டமிடுக.

விடை: ஆங்கில மொழிக் கொள்கை.


IX. கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் கல்வி வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக.

i. உட்ஸ் கல்வி அறிக்கை

Ii.ஹண்டர் கல்விக்குழு

Iii. ராதாகிருஷ்ணன் கல்வி குழு

iv.கோத்தாரி கல்வி குழு 

v. தேசிய கல்வி கொள்கை.


X. தலைப்பின் கீழ் உள்ள வினாக்களுக்கு விடையளி.

18.1986 தேசிய கல்வி கொள்கை.


1. 1986 தேசிய கல்விக் கொள்கையை  அறிமுகப்படுத்தியபோது பிரதமராக இருந்தவர் யார்?

விடை: திரு. ராஜீவ் காந்தி


2. தொடக்கக் கல்வியில் எந்தவிதமான அணுகு முறைக்கு வித்திட்டது?

விடை: குழந்தை (மாணவர்) மையக் கல்வி


3. தொடக்கப் பள்ளிகளை தேசிய அளவில் மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்.

விடை: கரும்பலகைத்திட்டம்


4. 1986 ஆம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்பட்ட ஆண்டு________.

விடை: 1992


5. தேசிய கலைத் திட்டம் எந்த ஆண்டு வடிவமைக்கப்பட்டது?

விடை: 1975


XI. வழங்கப்பட்டுள்ள குறிப்புகளுக்கு ஒத்த தலைப்பினை தேர்ந்தெடுத்து எழுதுக.

19.

i. இந்தியாவில் ஆங்கிலேய கல்வியின் மகா சாசனம்

ii. ஆங்கிலக் கல்வி கொள்கையின் முதல் அறிக்கை.

iii. மாநில கல்வியின் மீது முழுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது.

iv. தொழில் கல்வி மற்றும் பெண்கள் கல்வி பற்றியும் வலியுறுத்தப்பட்டன.

விடை: வுட்ஸ் அறிக்கை.


Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்