வகுப்பு 8- சமூக அறிவியல்-பயிற்சித்தாள்6-விடைகள்- இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
பயிற்சித்தாள் 6
இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கொடுக்கப்பட்ட படங்களில் டாக்கா மஸ்லின் ஆடையோடு தொடர்புடையது எது?
விடை: ஈ.
2. கொடுக்கப்பட்ட படங்களில் இந்தியாவிற்கு சிறந்த வரலாற்றைக் கொண்டது எது?
விடை :ஈ
3._________ மற்றும் _________ சிறந்த தரத்திற்கு இந்தியா பிரபலமானது.
விடை: இ.பருத்தி - பட்டு
4. இந்தியாவில்_________ மற்றும் ________ வளர்ச்சி துரிதப் படுத்தப்பட்டவுடன் தொழில்மயமாக்கல் தொடங்கியது.
விடை :ஈ.ரயில்வே -சாலைகள்
5. இந்தியாவில் அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் ஆண்டு ___________ நிறுவப்பட்டது.
விடை: ஈ.1839
6. தென்னிந்தியாவின் முக்கிய நடவடிக்கைகளின் மையமாக மாறியது_______.
விடை :இ.காபி
7. முதன் முதலில் எஃகு தயாரிக்கப்பட்ட இடம் _____________.
விடை: குல்டி
8. சூயஸ் கால்வாய்த் திட்டம் ஐரோப்பா மற்றும் இந்தியாவிற்கான தூரத்தை ___________ கிலோமீட்டர் குறைத்தது.
விடை: இ.4830
9. இந்தியா ____________ உற்பத்தியில் ஆசிய நாடுகளில் மிகப்பெரிய நாடாக உருவாகி உள்ளது.
விடை: ஈ.சணல்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
10. முகலாய பேரரசர் ஷாஜகான் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வந்தவர் _________.
விடை: பெர்னியர்
11. இந்தியாவை தங்கள் தொழில்களுக்கான ________________ நாடாக வைத்திருந்தது.
விடை: மூலப் பொருள்களை உற்பத்தி செய்யும்
12. ஆங்கிலேயர்களின் செல்வச் சுரண்டலே இந்தியர்களின் வறுமைக்கு காரணம் எனக் கூறியவர் _________.
விடை: தாதாபாய் நௌரோஜி
13. இந்திய தொழில் மயமாதலுக்கு உதவிய கால்வாய் ____________.
விடை: சூயஸ்
14. ___________களின் காலகட்டத்தை தொழில்துறையின் மீட்பு காலமாக கருதலாம்.
விடை: 1980
III. பொருத்துக
15.
IV. சரியா தவறா எனக் குறிப்பிடுக
16. 80 மீட்டர் அளவு கொண்ட மஸ்லின் துணியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்.
விடை தவறு.
50 மீட்டர் அளவு கொண்ட மஸ்லின் துணியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்.
17. இந்தியாவின் பழமையான தொழில் நெசவுத் தொழில் ஆகும்.
விடை: தவறு
இந்தியாவின் பழமையான தொழில் கைவினை தொழிலாகும்.
18. கான்பூரில் கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் முக்கியத்துவம் பெற்றன.
விடை: சரி
V. மாணவர் செயல்பாடு
19. புதிய வார்த்தைகளை பயன்படுத்தி வாக்கியங்களை உருவாக்குதல்.
மாணவர்களே நீங்களே வாக்கியங்களை உருவாக்கிப் பழகுங்கள்.
VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.
20. பிரஞ்ச் நாட்டுப் பயணிகள் இந்தியாவில் பார்த்து வியந்தது எது?
பிரெஞ்சு நாட்டு பயணி தவர்னியர் இந்தியாவில் உள்ள மயிலாசனம், பட்டு மற்றும் தங்கத்தினாலான தரைவிரிப்புகள், சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு வியப்படைந்தார்.
21. தொழில்புரட்சி இந்தியாவை எவ்வாறு மாற்றியது?
தொழில் புரட்சி இந்தியாவை மூலப்பொருள் உற்பத்தி செய்யும் நாடாகவும், மூலப்பொருள் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாற்றியது.
22. டாக்காவின் மஸ்லின் ஆடைகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
கி.மு. 2000ஆம் ஆண்டுகள் பழமையான எகிப்திய கல்லறைகளில் உள்ள மம்மிகள் மிகச் சிறந்த தரம் வாய்ந்த இந்திய மஸ்லின் ஆடைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
50 மீட்டர் அளவு கொண்ட மெல்லிய இந்த மஸ்லின் துணியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்.
23. ஐரோப்பியர்களை கவர்ந்த முதல் இந்திய தொழிற்சாலை எது?
ஐரோப்பியர்களை கவர்ந்த முதல் இந்திய தொழிற்சாலை தேயிலைத் தோட்ட தொழிற்சாலை ஆகும்.
VII.செயல் திட்டம் மற்றும் செயல்பாடுகள்.
மாணவர்களே நீங்களே செயல் திட்டங்களை செய்து பாருங்கள்.