வகுப்பு8- சமூக அறிவியல் -பயிற்சித்தாள் 7 -ஆங்கில ஆட்சியில் நகர்புற மாற்றங்கள்-விடைகள்
பயிற்சித்தாள் 7
ஆங்கில ஆட்சியில் நகர்புற மாற்றங்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஆங்கிலேயர்களின் வணிகத்தால் பாதிக்கப்பட்ட தொழில் எது என்பதை கீழ்கண்ட வார்த்தையை கொண்டு தேர்ந்தெடுக்க.
விடை: அ. கைவினை
2. கீழ்கண்டவற்றுள் எது ஆங்கிலேயர்கள் தங்கள் குடியேற்றங்களின் பாதுகாப்பிற்கு அமைந்தது.
விடை: இ. கோட்டைகள்
3. பிரிட்டிஷ் வகையிலான ரோமானிய பாணிகளில் அமைக்கப்பட்ட கோட்டை யாது?
விடை: இ. புனித ஜார்ஜ்
4. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத வார்த்தை எது?
சிம்லா, மதராஸ், நைனிடால், உதகமண்டலம்.
விடை: மதராஸ்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
5. இடைக்கால நகரங்கள் ________ இருந்தன.
விடை: பிராந்திய மற்றும் மாகாண தலைநகராக
6. நவீனகால நகரங்கள் ________ இருந்தன.
விடை: நிர்வாக மற்றும் வணிக தலைநகராக
7. ஆங்கிலேயர்களின் கொள்கைகள்____________ பொருளாதாரமாக மாறியது.
விடை: காலனித்துவ
8. ஆங்கிலேயர்களின் இந்திய வணிகத்திற்கு பேருதவியாக அமைந்தது _____________.
விடை: சூயஸ் கால்வாய் திறப்பு
9. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் ராணுவக் குடியிருப்புகள் ___________ மையங்களாக இருந்தன.
விடை: புதிய நகர்புற
10.____________ தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கியது.
விடை: ரிப்பன் பிரபுவின்
11. மதராஸ் நகர நிர்மாணத்தில் __________ என்பவரின் பங்கு அதிகம்.
விடை: சர் பிரான்சிஸ் டே
12. ஆங்கிலேய ஆட்சி பகுதியில் தென்பகுதியில் பெரிய நிலப் பகுதிகளை உள்ளடக்கிய மாகாணம் __________.
விடை: மதராஸ்
III. பொருத்துக
IV. சரியா தவறா என குறிப்பிடுக.
14.
i. இடைக்காலத்தில் பெரும்பாலான நகரங்கள் பிராந்திய தலைநகரங்களாக வளர்ந்தன.
விடை: சரி
ii.ஆங்கிலேயர்கள் 1583 இல் இந்தியாவில் இருப்புப் பாதைகளை அமைத்தனர்.
விடை: தவறு
iii.ஆங்கிலேயர்கள் வ்ர்த்தகத்திற்காக இந்தியா வந்தனர்.
விடை: சரி
iv.ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு கிபி 1700 ல்தொடங்கியது.
விடை: தவறு
v. தமர்லா வெங்கடபதி ஆங்கிலேயர்களுக்கு மதராசப்பட்டினத்தை மானியமாக வழங்கினார்
விடை: சரி
V. வரைபடம்
19. ஆங்கிலேயர்களின் வர்த்தகத்திற்கு பதவிய கடற்கரையை வரைபடத்தில் குறித்துக் காட்டுக.
VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.
16. பண்டைய கால நகரங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
விடை: மொஹஞ்சதாரோ, ஹரப்பா, வாரணாசி, அலகாபாத், மதுரை ஆகியவை புகழ்பெற்ற பண்டையகால நகரங்கள் ஆகும்.
17. பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் மூலப் பொருள் ஏற்றுமதி மையமாக விளங்கியது எது?
விடை: பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் மூலப் பொருள் ஏற்றுமதி மையமாக விளங்கியது சென்னை, மும்பை, கல்கத்தா ஆகும்.
18. மலைவாழிடங்கள் குறிப்பு வரைக.
விடை: காலனித்துவ ஆட்சியாளர்கள், குளிர்ந்த கால நிலையிலிருந்து வந்து இந்திய வெப்ப நிலையில் வாழ்வதை கடினமாக கருதினர். அவர்கள் சுகாதாரம் மற்றும் பொழுது போக்குக்காக உருவாக்கிய இடங்கள் மலைவாழிடங்கள் ஆகும். இது அவர்களை வெப்பமான் வானிலை மற்றும் தொற்றுநோயிலிருந்து பாதுகாத்தது. எ.கா.சிம்லா, நைனிடால், டார்ஜிலிங், கொடைக்கானல், உதகமண்டலம்.
19. உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம் யாது?
விடை: உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம் ரிப்பன் பிரபுவின் தீர்மானம் எனக் கருதப்படுகிறது.
20. சென்னை மாநகராட்சி உருவாக காரணமானவர் யார்?
விடை: சென்னை மாநகராட்சி உருவாக காரணமானவர்கள் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் ஆவார்கள்
VII. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி.
21. நகர்ப்புற பகுதி என்பது யாது?
விடை:
22. உள்ளாட்சி மன்றத்தின் மூன்று வெவ்வேறு நிலைகளை காலவரிசை ஆண்டுகளுடன் ஒப்பிடுக.
விடை:
முதற்கட்டம்-1688-1882
இரண்டாம் கட்டம்-1882-1920
மூன்றாம் கட்டம் 1920-1950.