வகுப்பு 6 ப1அ2 விசையும் இயக்கமும் வினா-விடைகள்

 



அலகு 2


விசையும் இயக்கமும்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வேகத்தின் அலகு ______________

அ) மீ ஆ) விநாடி

இ) கிலோகிராம் ஈ) மீ/வி

விடை: ஈ) மீ/வி


2. கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம் ?

அ) பூமி தன் அச்சைப் பற்றிச் சுழல்தல்

ஆ) நிலவு பூமியைச் சுற்றி வருதல்

இ) அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்

ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை: இ) அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்


3. கீழ்க்கண்டவற்றுள் சரியான  தொடர்பினைத் தேர்ந்தெடு.

அ) வேகம் = தொலைவு x காலம்

ஆ) வேகம் = தொலைவு / காலம்

இ) வேகம் = காலம் / தொலைவு

ஈ) வேகம் = 1 / (தொலைவு x காலம்)

விடை: ஆ) வேகம் = தொலைவு / காலம்


4. கீதா தன் தந்தையுடன் ஒரு வண்டியில் அவளுடைய வீட்டிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள அவளது மாமா வீட்டிற்குச்செல்கிறாள். அங்கு செல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.

கூற்று 1: கீதாவின் வேகம் 1 கி.மீ / நிமிடம்

கூற்று 2: கீதாவின் வேகம் 1 கி.மீ / மணி

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) இரண்டு கூற்றுகளும் சரி

ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு

விடை: அ) கூற்று 1 மட்டும் சரி


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. சாலையில் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம் ____________ இயக்கத்திற்கு ஒரு உதாரணமாகும்.

விடை: நேர்கோட்டு இயக்கம்


2. புவிஈர்ப்பு விசை __________ விசையாகும்.

விடை: தொடா


3. மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் ______________ இயக்கமாகும்.

விடை: சுழற்சி 


4. ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால்,

அப்பொருளின் இயக்கம் ______________

விடை: சீரான இயக்கம்.


III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக.

1. மையப் புள்ளியைப் பொருத்து முன்னும் பின்னும் இயங்கும் இயக்கம் அலைவு

இயக்கம் ஆகும்.

விடை: சரி


2. அதிர்வு இயக்கமும், சுழற்சி இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும்.

விடை: சரி


3. மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனங்கள் சீரான இயக்கத்தில் உள்ளன.

விடை: தவறு

மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனங்கள் சீரற்ற இயக்கத்தில் உள்ளன.


4. வருங்காலத்தில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபாட்டுகள் செயல்படும்.

விடை: சரி


IV. ஒப்புமையின் அடிப்படையில் நிரப்புக.


1. பந்தை உதைத்தல் : தொடு விசை :: இலை கீழே விழுதல் : __________ ?

விடை: தொடா விசை


2. தொலைவு : மீட்டர் :: வேகம் : __________ ?

விடை: மீ/வி


3. சுழற்சி இயக்கம் : பம்பரம் சுற்றுதல் :: அலைவு இயக்கம் : __________ ?

விடை: கடிகார பெண்டுலத்தின் இயக்கம்


V. பொருத்துக



நேர்கோட்டு இயக்கம்




சுழற்சி இயக்கம்


அலைவு இயக்கம்



வட்ட இயக்கம்


நேர்கோட்டு இயக்கம் (ம) சுழற்சி இயக்கம்


VI.  சீரான வேகத்தில் காட்டினுள் செல்லும் ஒரு யானை கடக்கும் தொலைவு, காலத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. சீரான வேகத்தின் அடிப்படையில் கீழ்கண்ட அட்டவணையைப் பூர்த்தி செய்க.



தொலைவு (மீ)

0

4

8

12

16

20

காலம் (வி)

0

2

4

6

8

10


VII. அட்டவணையைப் பூர்த்தி செய்க.



VIII. ஓரிரு வார்த்தையில் விடை எழுதுக.


1. தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசை ______________.

தொடா விசை


2. காலத்தைப் பொருத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது ______________.

இயக்கம்


3. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழும் இயக்கம்______________.

கால ஒழுங்கு இயக்கம்


4. சமகால இடைவெளியில், சமதொலைவைக் கடக்கும் பொருளின் இயக்கம் __________.

சீரான இயக்கம்


5. நுணுக்கமான அல்லது கடினமான வேலைகளைச் செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் ___________.

ரோபோட்


IX. சுருக்கமாக விடையளி.


1. விசை – வரையறு.

பொருள்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தல் செயல்களே விசை என அழைக்கப்படுகிறது.


2. பொருள் நகரும் பாதையின் அடிப்படையிலான இயக்கங்களைக் கூறுக.

  • நேர்கோட்டு இயக்கம்

  • வளைவுப்பாதை இயக்கம்

  • வட்டப்பாதை இயக்கம்

  • தற்சுழற்சி இயக்கம்

  • அலைவு இயக்கம்

  • ஒழுங்கற்ற இயக்கம்


3. இயங்கும் மகிழுந்தினுள் நீ அமர்ந்திருக்கும் போது உன் நண்பனைப் பொருத்து ஓய்வு நிலையில் இருக்கிறாயா அல்லது இயக்க நிலையில இருக்கிறாயா?

அருகில் அமர்ந்திருக்கும் நண்பனைப்பொருத்து நான் ஓய்வு நிலையில் இருக்கிறேன்.


4. பூமியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும் – காரணம் கூறு.


பூமி தனது அச்சில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுற்றி வருவதால், இது கால ஒழுங்கு இயக்கமாகும்.


5. சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் வேறுபடுத்துக.


சுழற்சி இயக்கம்

வளைவுப்பாதை இயக்கம் 

ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல்

பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும்

உ-ம். பம்பரத்தின் இயக்கம்

உ.ம்- கிரிக்கெட் பந்து வீசப்படுதல்


X. கணக்கீடு.


1. ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400 கி.மீ தூரத்தைக் கடந்தால் வண்டியின்

வேகம் என்ன?


வேகம் = கடந்த தொலைவு/ எடுத்துக் கொண்டகாலம்

கடந்த தொலைவு = 400கி.மீ

எடுத்துக்கொண்ட நேரம் = 5 மணி


வேகம் = 400கி.மீ/5மணி

= 80 கி.மீ/மணி

வண்டியின் வேகம் = = 80 கி.மீ/மணி



XI. விரிவாக விடையளி.

1. இயக்கம் என்றால் என்ன? பல்வேறு இயக்கங்களை உதாரணத்துடன் வகைப்படுத்துக.


காலத்தைப் பொருத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது இயக்கம் எனப்படும்.

இயக்கம் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை;





XII. எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.


நேர்கோட்டு இயக்கம்

தென்னை மரத்திலிருந்து விழும் தேங்காயின் இயக்கம்

வளைவுப்பாதை இயக்கம்

காகிதவிமானத்தின் இயக்கம்

தற்சுழற்சி இயக்கம்

வண்டிச்சக்கரத்தின் இயக்கம்

வட்ட இயக்கம்

சூரியனைச்சுற்றி வரும் நிலவின் இயக்கம்

அலைவு இயக்கம்

ஆடிக்கொண்டிருக்கும் நாய் வாலின் இயக்கம்

ஒழுங்கற்ற இயக்கம்

கேரம்போர்டு காயின்களின் இயக்கம்


Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்