வகுப்பு 6 ப1அ3 அறிவியல் நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருள்கள் வினா-விடைகள்
அலகு 3
நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ______________பருப்பொருளால் ஆனதல்ல.
அ) தங்க மோதிரம் ஆ) இரும்பு ஆணி
இ) ஒளி ஈ) எண்ணெய்த் துளி
விடை: இ) ஒளி
2. 400 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மிலி நீர் ஊற்றப்படுகிறது. இப்போது நீரின் பருமன்
அ) 400 மி.லி ஆ) 600 மி.லி
இ) 200 மி.லி ஈ) 800 மி.லி
விடை: இ) 200 மி.லி
3. தர்பூசணிப் பழத்தில் உள்ள விதைகளை ______________ முறையில் நீக்கலாம்.
அ) கைகளால் தெரிந்தெடுத்தல் ஆ) வடிகட்டுதல்
இ) காந்தப் பிரிப்பு ஈ) தெளிய வைத்து இறுத்தல்
விடை: அ) கைகளால் தெரிந்தெடுத்தல்
4. அரிசி மற்றும் பருப்பில் கலந்துள்ள லேசான______________ மாசுக்களை முறையில் நீக்கலாம்.
அ) வடிகட்டுதல் ஆ) படியவைத்தல்
இ) தெளிய வைத்து இறுத்தல் ஈ) புடைத்தல்
விடை: ஈ) புடைத்தல்
5. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ______________ அவசியம் தேவைப்படுகிறது.
அ) மழை ஆ) மண்
இ) நீர் ஈ) காற்று
விடை: ஈ) காற்று
6. ______________வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.
அ) திடப்பொருள் – திடப்பொருள்
ஆ) திடப்பொருள் – நீர்மம்
இ) நீர்மம் – நீர்மம் ஈ) நீர்மம் – வாயு
விடை: ஆ) திடப்பொருள் – நீர்மம்
7. பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல?
அ) பாலுடன் கலந்த காபி ஆ) எலுமிச்சைச் சாறு
இ) நீர் ஈ) கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரீம்
விடை: இ) நீர்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. பருப்பொருள் என்பது _______ ஆனது.
விடை: அணுக்களால்
2. திண்மத்தில் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி __________ விடக் குறைவு.
விடை: திரவம் மற்றும் வாயுக்களை
3. நெற்பயிரிலிருந்து நெல்லை ___________ முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.
விடை: கதிரடித்தல்
4. ‘உப்புமா’ வில் இருந்து _____________ முறையில் மிளகாயினை நீக்கலாம்.
விடை: கையால் தெரிந்தெடுத்தல்
5. நீரில் இருந்து களிமண் துகள்களை நீக்க __________ முறை பயன்படுத்தப்படுகிறது.
விடை: வடிகட்டுதல்
6. குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர் பொதுவாக ____________ நீராக அமையும்.
விடை: தூய
7. ஊசி, பென்சில் மற்றும் இரப்பர் வளையம் இவற்றுள் ___________ காந்தத்தால் கவரப்படும்.
விடை: ஊசி
III. பொருத்துக.
அ)
ஆ)
IV. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக.
அ) காற்று அழுத்தத்திற்கு உட்படாது.
விடை: தவறு
காற்றை நன்றாக அழுத்த முடியும்.
ஆ) திரவங்களுக்கு குறிப்பிட்ட பருமன் இல்லை. ஆனால் குறிப்பிட்ட வடிவம் உண்டு.
விடை: தவறு
திரவங்களுக்கு குறிப்பிட்ட பருமன் உண்டு. ஆனால் குறிப்பிட்ட வடிவம் இல்லை.
இ) திண்மத்தில் உள்ள துகள்கள் எளிதில் நகர்கின்றன.
விடை: தவறு
திண்மத்தில் உள்ள துகள்கள் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன, எனவே, அவை எளிதில் நகர இயலாது.
ஈ) சமைக்கும் முன் பருப்பு வகைகளை நீரில் கழுவும்போது, வடிகட்டுதல் மூலம் நீரைப் பிரித்தெடுக்கலாம்.
விடை: சரி
உ) திடப் பொருள்களில் இருந்து நீர்மப் பொருள்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி என்பது ஒரு வகையான சல்லடையே.
விடை: தவறு.
சல்லடை என்பது திரவப் பொருள்களில் இருந்து திடப் பொருள்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி.
ஊ) தானியத்தையும், உமியையும் தூற்றுதல் முறை மூலம் பிரிக்கலாம்.
விடை: சரி
எ) காற்று ஒரு தூய பொருளாகும்.
விடை: தவறு
காற்று ஒரு கலவை ஆகும், காற்றில் பல வாயுக்கள் கலந்துள்ளன.
ஏ) வண்டலாக்குதல் முறை மூலம் தயிரிலிருந்து வெண்ணெயைப் பிரித்தெடுக்கலாம்.
விடை:
தவறு.
கடைதல் முறை மூலம் தயிரிலிருந்து வெண்ணெயைப் பிரித்தெடுக்கலாம்.
V. பின்வரும் ஒப்புமையைப் பூர்த்தி செய்க
1. திண்மம் : கடினத்தன்மை :: வாயு : ______
விடை: அழுத்தப்படும் தன்மை
2. துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உடையது : வாயு :: ______ : திண்மம்
விடை: துகள்களுக்கு இடையே குறைந்த இடைவெளி உடையது
3. திண்மம் : குறிப்பிட்ட வடிவம் :: ______: கொள்கலனின் வடிவம்
விடை: திரவம்
4. உமி -தானியங்கள் : தூற்றுதல் :: மரத்தூள்-சுண்ணக்கட்டி : ______.
விடை: சலித்தல்
5. சூடான எண்ணெயிலிருந்து முறுக்கினை எடுத்தல் : ______:: காபியை வடிகட்டியபின் அடியில் தங்கும் காபித்தூள் : ______.
விடை: வடிகட்டுதல், வீழ்படிவு
6. இரும்பு – கந்தகம் கலவை : ______ :: உளுத்தம் பருப்பு - கடுகு கலவை : உருட்டுதல்.
விடை: காந்தப் பிரிப்பு முறை
VI. மிகச்சுருக்கமாக விடையளி.
1. பருப்பொருள் – வரையறு.
நிறையை உடையதும் இடத்தை அடைத்துக் கொள்வதுமாகிய பொருள்கள் பருப்பொருள்களாகும்.
2. சமைக்கும் முன் அரிசியில் உள்ள உமி, தூசு போன்ற நுண்ணிய மாசுப் பொருள்கள் எவ்வாறு நீக்கப்படுகின்றன?
சமைக்கும் முன் அரிசியில் உள்ள உமி, தூசு போன்ற நுண்ணிய மாசுப் பொருள்களை நீரில் கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும்போது லேசான மாசுக்கள் நீரில் மிதக்கும்; எடை அதிகமுள்ள அரிசி போன்ற தானியங்கள் நீரில் மூழ்கி அடியில் தங்கும். இம்முறைக்கு படிய வைத்தல் (அ) வண்டல் படிவாக்கல் என்று பெயர். தூய்மையான அரிசி நீருக்கடியில் தங்கியபின், நீரில் உள்ளமாசுக்கள் அனைத்தையும் கவனமாக வெளியேற்ற வேண்டும். இம்முறைக்கு தெளிய வைத்து இறுத்தல் என்று பெயர்.
3. கலவைகளை நாம் ஏன் பிரித்தெடுக்க வேண்டும்?
கலவைகளில் உள்ள மாசுக்களையும், தீங்கு விளைவிக்கும் பகுதிப் பொருள்களையும் நீக்குவதற்கு. எ.கா: அரிசியில் உள்ள கற்களை நீக்குதல்.
பயனளிக்கும் ஒரு பகுதிப் பொருளினை மற்ற பகுதிப்பொருள்களில் இருந்து தனியே பிரிப்பதற்கு. எ.கா: பெட்ரோலியத்தில் இருந்து பெட்ரோல் பெறுதல்.
ஒரு பொருளை மிகுந்த தூய நிலையில் பெறுவதற்கு. எ.கா: தங்கச் சுரங்கத்தில் இருந்து தங்கம் பெறுதல்.
4. கலவைக்கு ஒரு எடுத்துக்காட்டினைக்கூறி அது கலவையே, என்பதை நியாயப்படுத்தவும்.
கலவை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிப் பொருள்களைக் கொண்டதாகும்.
கடல் நீர் கலவைக்கு ஒரு உதாரணமாகும்.
கடல் நீரில் பல்வேறுவகையான உப்புகள் கரைந்துள்ளன, எனவே இது ஒரு கலவையாகும்.
5. படிய வைத்தல் - வரையறு.
எடை அதிகமான பொருளுடன் எடை குறைவான பொருள்கள் கலந்திருந்தால் அவற்றைப் பிரிப்பதற்கு படியவைத்தல் முறை பயன்படுகிறது.
பொருள்களை ஒரு பாத்திரத்தில் வைத்து நீர் ஊற்றும் பொழுது எடை அதிகமான பொருள்கள் அடியில் தங்கும். எடை குறைவான பொருள்கள் நீரின் மேல் மிதக்கும். இம்முறை படியவைத்தல் எனப்படும்.
6. தூய பொருளுக்கும் தூய்மையற்ற பொருளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளைக் கூறுக.
VII. சுருக்கமாக விடையளி.
1. இரப்பர் பந்தை அழுத்தும்போது வடிவம் மாறுகிறது. அதை திண்மம் என அழைக்கலாமா?
ஆம். திண்மம் என அழைக்கலாம். இரப்பர் பந்திற்கு குறிப்பிட்ட வடிவம் மற்றும் பருமன் உள்ளதால் இதை திண்மம் என அழைக்கலாம்.
2. வாயுக்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை. ஏன்?
வாயுக்களில் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி மிக அதிகம். துகள்கள் மிகவும் தளர்வாக அமைந்திருக்கும், எனவே வாயுக்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை.
3. பாலில் இருந்து பாலாடைக் கட்டியை எம்முறையில் பெறுவாய்? விளக்கவும்.
கடைதல் முறையில் பாலாடைக்கட்டியை பாலில் இருந்து பிரித்தெடுக்கலாம்.
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து அதில் பின்பற்றப்படும் பிரித்தல் முறையினை விவரிக்கவும்.
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிரித்தல் முறை சலித்தல் ஆகும்.
வெவ்வேறு அளவுடைய திடப் பொருள்களைப் பிரித்தெடுக்கும் முறைக்கு சலித்தல் என்று பெயர்.
5. பருப்புடன் அதிக அளவில் சிறு காகிதத்துண்டுகள் கலந்திருப்பின் அவற்றை எவ்வாறு நீக்குவாய்?
பருப்புடன் கலந்துள்ள சிறு காகிதத்துண்டுகளைப் பிரிக்க தூற்றுதல் முறையைப் பின்பற்றலாம்.
காகிதம் எடை குறைவான பொருளாகும். எனவே பருப்புடன் கலந்துள்ள காகிதங்கள் தூற்றும் பொழுது காற்றால் தள்ளிச்சென்று விழும், எடை அதிகமான பருப்பு அருகில் குவியலாகச் சேரும்.
6. உணவுக் கலப்படம் என்றால் என்ன?
உணவுப்பொருள்களில் தேவையற்ற பொருள்களோ அல்லது தீங்கு விளைவிக்கும் பொருள்களோ கலந்து காணப்பட்டால் அது உணவுக் கலப்படம் எனப்படும்.
7. ஒரு வெப்பமான கோடை நாளில் வீட்டிற்கு திரும்பிய திரு.ரகு மோர் பருக விரும்பினார். திருமதி. ரகுவிடம் தயிர் மட்டுமே இருந்தது. அவர் எவ்வாறு
தயிரிலிருந்து மோரைப் பெறுவார்? விளக்கவும்.
கடைதல் முறையில் தயிரிலிந்து மோரைப் பிரித்தெடுக்க இயலும்.
வேகமாகக் கடையும் பொழுது தயிரிலிருந்து, மோர் மற்றும் வெண்ணெய் ஆகிய இரு பொருள்களும் கிடைக்கும்.
VIII. உயர் சிந்தனைத்திறன் வினாக்கள்.
1. திட, திரவ மற்றும் வாயுப்பொருள்களின் பண்புகளை வேறுபடுத்துக.
2. சுண்ணாம்புத் தூள், கடுகு எண்ணெய், நீர் மற்றும் நாணயங்கள் கொண்ட கலவையை உனது ஆய்வகத்தில் உள்ள தகுந்த உபகரணங்களைப் பயன்படுத்தி
எவ்வாறு பிரிப்பாய்? பிரித்தல் முறையினைப்படிநிலைகளில் விளக்கும் படத்தினை
வரையவும்.
3. மூன்று நிலைகளில் உள்ள துகள்களின் அமைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
அ) படம் 1 பருப்பொருளின் எந்த நிலையைக் குறிக்கிறது?
படம் 1 பருப்பொருளின் வாயு நிலையைக் குறிக்கிறது
ஆ) எப்படத்தில் துகள்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை அதிகம்?
படம் 3-ல் உள்ள திடப்பொருளில் துகள்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை அதிகம்.
இ) திறந்த கலனில் வைக்க முடியாதது எது?
படம்-1, திறந்த கலனில் வைக்க முடியாதது, ஏனெனில் இது வாயு நிலையில் உள்ளது.
ஈ) கொள்கலனின் வடிவத்தைக் கொண்டது எது?
படம்-2, கொள்கலனின் வடிவத்தைக் கொண்டது, இது திரவ நிலை.
4. மலரின் அம்மா இரவு உணவை சமைக்கத் தயாராகிறார்கள். தவறுதலாக வேர்க்கடலையுடன் உளுத்தம் பருப்பினை கலந்துவிட்டார். இவ்விரண்டையும் பிரித்தெடுக்க உரிய முறையைப் பரிந்துரைத்து, மலர் உண்பதற்கு வேர்க்கடலை கிடைக்க வழி செய்க.
திடப்பொருளின் நிலைகளான வேர்க்கடலையும், உளுந்தப்பருப்பையும் பிரிக்க கையால் தெர்ந்தெடுத்தல் முறையையும், அளவுகள் அதிகமாக உள்ள போது சலித்தல் முறையையும் பின்பற்றலாம்.
5. ஒரு குவளை நீரில் புளிச் சாறையும், சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்கவும். இது ஒரு கலவையா? ஏன் என்று உங்களால் கூற முடியுமா? இந்த கரைசல் இனிப்பானதா, புளிப்பானதா அல்லது புளிப்பும், இனிப்பும் சேர்ந்ததா?
நீர், புளிச் சாறு, சர்க்கரை மூன்றும் சேர்ந்தது ஒரு கலவையாகும்.
சர்க்கரை மற்றும் புளிச்சாறு இரண்டும் கலந்திருப்பதால், இந்த கரைசல் இனிப்பும், புளிப்பும் சேர்ந்ததாக இருக்கும்.