வகுப்பு 7 அறிவியல் அ2 விசையும் இயக்கமும்
அலகு 2
விசையும் இயக்கமும்
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி
அ. சுழி
ஆ. r
இ. 2 r
ஈ. r / 2
விடை: ஈ. r / 2
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள திசைவேகம்- காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது
அ. சீரான இயக்கத்தில் உள்ளது.
ஆ. ஓய்வு நிலையில் உள்ளது .
இ. சீரற்ற இயக்கத்தில் உள்ளது.
ஈ. சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது
விடை: ஈ. சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது
3. கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினைக் குறிக்கிறது?
விடை:
3.
4. ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது
அ. சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்.
ஆ. சிறுவனின் இயக்கம் முடுக்கப்படாத இயக்கமாகும்.
இ. சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்.
ஈ. சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்.
விடை: ஈ. சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்
5. ஒரு பொருளின் சமநிலையை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம்?
அ. ஈர்ப்பு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்.
ஆ. ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்.
இ. பொருளின் உயரத்தினை அதிகரித்தல்
ஈ. பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்.
விடை: அ. ஈர்ப்பு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்.
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த தூரம் ______________ எனப்படும்.
விடை: இடப்பெயர்ச்சி
2. திசைவேகம் மாறுபடும் வீதம் ______________ ஆகும்.
விடை: முடுக்கம்
3. ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள்______________ முடுக்கத்தினைப் பெற்றிருக்கிறது என்கிறோம்
விடை: நேர்
4. வேகம்–காலம் வரைபடத்தின் சாய்வு ______________ மதிப்பினைத் தருகிறது.
விடை: சுழி,நேர்குறி மாறிலி, எதிர்குறி மாறிலி
5. ஒரு பொருள் நகர்த்தப்படும்போது, ______________ சமநிலையில் அதன் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.
விடை: நடுநிலை
III. பொருத்துக
IV. ஒப்புமை தருக.
1. திசைவேகம் : மீட்டர் / விநாடி : : முடுக்கம் : ______________ .
விடை: மீ/வி2
2. அளவுகோலின் நீளம் : மீட்டர் : : வானூர்தியின் வேகம் : ______________ .
விடை: நாட்டிகல் மைல்
3. இடப்பெயர்ச்சி / காலம் : திசைவேகம் : : தொலைவு / காலம் : ______________
விடை: முடுக்கம்
V. மிகக் சுருக்கமாக விடையளி.
1. சீரான இயக்கத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் சீரான திசைவேகத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று ஆசேர் கூறுகிறான். காரணம் தருக.
வட்ட இயக்கத்தை நாம் உதாரணமாகக் கருதலாம்.
வட்ட இயக்கத்தில், வேகம் மாறாமல் இருக்கும், ஆனால் திசை தொடர்ந்து மாறும்போது, அதன் திசைவேகம் சீராக இருக்க முடியாது.
உதாரணம்:
செயற்கைக்கோள் நிலையான வேகத்தில் நகரும் ஆனால் அதன் திசை எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதால் அதன் திசைவேகம் மாறிக்கொண்டே இருக்கும்.
2. சஃபைரா மாறாத திசையில் மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள். அவளது இயக்கத்தை தொடர்புபடுத்தி எழுதவும்.
சஃபைரா சீரான திசைவேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறாள்.
3. முடுக்கமானது ஒரு பொருளின் நிலை எவ்வளவு வேகத்தில் மாறுகிறது என்பதனைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது என்று உன் நண்பன் கூறுகின்றான். இவ்வாக்கியத்தில் உள்ள பிழையினைக் கண்டறிந்து மாற்றுக.
முடுக்கம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பொருளின் வேகம் அல்லது திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் பற்றிய தகவலை அளிக்கிறது.
VI. சுருக்கமாக விடையளி.
1. பின்வரும் நிகழ்வுகளுக்கு தொலைவு – காலம் வரைபடத்தினை வரையவும்.
அ. மாறாத திசைவேகத்தில் இயங்கும் பேருந்து.
விடை:
ஆ. சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் மகிழுந்து.
2. வேகம் மற்றும் திசைவேகம் இவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டினைக் கூறுக.
3. சீரான முடுக்கம் என்பது பற்றி நீவிர் கருதுவது யாது ?
ஒரு பொருளின் திசை வேகத்தில் சீரான கால இடைவெளியில் காலத்தினைப் பொருத்து ஏற்படும் மாற்றம் (அதிகரித்தல் அல்லது குறைதல்) சீரானதாக இருப்பின் அம்முடுக்கம் சீரான முடுக்கம் எனப்படும்.
4. ஈர்ப்பு மையம் என்றால் என்ன ?
எந்தப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவதுபோல் தோன்றுகிறதோ அந்தப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும்.
VII. விரிவாக விடையளி.
1. சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
சமநிலை மூன்று வகைப்படும். அவை: 1. உறுதிச்சமநிலை 2. உறுதியற்ற சமநிலை 3. நடுநிலை சமநிலை
உறுதிச் சமநிலை:
உறுதிச் சமநிலையில் கூம்பானது மிக அதிகமான கோணத்திற்குச் சாய்க்கப்பட்டு பின்னர் விடப்பட்டாலும், கவிழ்ந்துவிடாமல் மீண்டும் பழைய நிலையை அடைகிறது.
கூம்பு சாய்க்கப்படும்போது அதன் ஈர்ப்பு மையம் உயர்கிறது. ஈர்ப்பு மையத்தின் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது சாய்க்கப்பட்ட நிலையிலும் அதன் அடிப்பரப்பிற்கு உள்ளேயே உள்ளது. எனவே, அதனால் மீண்டும் தனது பழைய நிலையை அடைய முடிகிறது.
உறுதியற்ற சமநிலை:
இந்த நிலையில், கூம்பானது சிறிது சாய்க்கப்பட்டாலும் கவிழ்ந்துவிடும். கூம்பினைச் சாய்க்கும்போது ஈர்ப்புமையம் அதன் நிலையிலிருந்து உயர்கிறது.
இங்கு, ஈர்ப்புமையம் வழியாக வரையப்படும் செங்குத்துக்கோடானது அதன் அடிப்பரப்பிற்கு வெளியே உள்ளது. எனவே, கூம்பானது தனது பழைய நிலைக்கே வருகிறது.
நடுநிலைச் சமநிலை:
இந்த நிலையில், கூம்பானது உருள்கிறது. ஆனால், அது கீழே கவிழ்க்கப்படுவதில்லை.
கூம்பினை நகர்த்தும்போது அதன் ஈர்ப்புமையம் அதே உயரத்தில் உள்ளது.கூம்பினை எங்கு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே அது நிலையாக இருக்கிறது.
2. ஒழுங்கற்ற ஒரு தகட்டின் ஈர்ப்பு மையத்தினைக் காணும் சோதனையை விவரி.
நோக்கம்: ஒழுங்கற்ற ஒரு தகட்டின் ஈர்ப்பு மையத்தினைக் காணுதல்
தேவையான உபகரணங்கள்: ஆணி, ஒழுங்கற்ற வடிவம் கொண்ட கடின அட்டை, ஊசல் குண்டு, கம்பி, பென்சில், நூல்
செய்முறை:
கடின அட்டையில் ஆணியைக் கொண்டு மூன்று சிறிய துளைகள் இடவேண்டும்.
துளைகள், கம்பியை உள் செலுத்த இலகுவாக இருக்கும் படி இருத்தலை உறுதி செய்ய வேண்டும்.
கம்பியை படுக்கை வசத்தில் வைக்கும் பொழுது அது நிலையாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
கம்பியில், அட்டையையும், பின்னர் நூலால் கட்டப்பட்ட ஊசல் குண்டையும் கம்பியில் தொங்கவிட வேண்டும்.
ஊசல் குண்டு நிலையாக நின்ற பிறகு, அட்டையின் மீது நூலின் நிலையினை பென்சிலால் குறிக்கவேண்டும்.
இதே முறையில், மற்ற இரு துளைகளிலும் அட்டையைத் தொங்க விட்டு, நூலின் நிலையினைக் குறிக்க வேண்டும்.
மூன்று கோடுகளும் வரைந்த பிறகு,எந்த புள்ளியில் மூன்று கோடுகளும் வெட்டிக் கொள்கிறதோ அந்தப் புள்ளியைக் குறித்துக் கொள்ளவேண்டும்.
அந்தப்புள்ளியே ஒழுங்கற்ற வடிவம் கொண்ட தொங்கவிடப்பட்ட அட்டையின் ஈர்ப்பு மையம் என்று கண்டறியலாம்.
VIII. கணக்கீடு.
1. கீதா தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு மிதிவண்டியில் 15 நிமிடங்களில் சென்றடைகிறாள். மிதிவண்டியின் வேகம் 2 மீ/வி எனில் அவளது வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே உள்ள தொலைவினைக் காண்க.
வீட்டிற்கு சென்றடைய எடுத்துக்கொண்ட நேரம்= 15 நிமிடங்கள்
வேகம் நிமிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளதால் அதை வினாடியாக மாற்றக் கிடைப்பது
1 நிமிடம் = 60 வினாடிகள்
15 நிடங்கள் X 60 வி = 900 வினாடிகள்
தொலைவு=?
தொலைவு = வேகம் X காலம்
= 2 மீ/வி X 900 வி
= 1800 மீ
கீதாவின் வீட்டிற்கும், பள்ளிக்கும் உள்ள தூரம் = 1800 மீ
2. ஒரு மகிழுந்து ஓய்வு நிலையிலிருந்து 10 விநாடிகளில் 20 மீட்டர்/விநாடி என்ற வேகத்தில் பயணம் செய்யத் தொடங்குகிறது. மகிழுந்தின் முடுக்கம் யாது?
ஆரம்பத் திசைவேகம் = 0 மீ/வி
இறுதித் திசைவேகம் = 20 மீ/வி
காலம் =10 வி
முடுக்கம் = திசைவேக மாற்றம் / காலம்
முடுக்கம் = 20 - 0 / 10
= 2 மி வி2
மகிழுந்தின் முடுக்கம் = = 2 மி வி2
3. ஒரு பேருந்தின் முடுக்கம் 1 மீ/வி2 எனில் அப்பேருந்தானது 50 கிமீ/வி என்ற வேகத்தில் இருந்து 100 கிமீ/வி என்ற வேகத்தினை அடைய எடுத்துக் கொள்ளும் காலத்தினைக் கணக்கிடுக.
பேருந்தின் முடுக்கம் 1 மீ/வி2
ஆரம்பத் திசைவேகம் = 50 கிமீ/வி
கி.மீ ஐ, மீட்டராக மாற்றக் கிடைப்பது =50 X 103 மீ/வி
இறுதித் திசைவேகம் = 100 கிமீ/வி
கி.மீ ஐ, மீட்டராக மாற்றக் கிடைப்பது =100 X 103 மீ/வி
காலம் = திசைவேகமாற்றம் / முடுக்கம்
100 x 103 – 50 x 103
= --------------------------
1
(100 -50) x 103
= ---------------
1
100 கி. மீ வேகத்தை அடைய எடுத்துக் கொள்ளும் காலம் = 50 X 103 வி