வகுப்பு6 ப1 இ2 கவிதைப்பேழை- சிலப்பதிகாரம் வினா-விடைகள்







இயல் இரண்டு - இயற்கை இன்பம் 

கவிதைப்பேழை- சிலப்பதிகாரம்



சொல்லும் பொருளும்


திங்கள் - நிலவு

கொங்கு - மகரந்தம்

அலர் - மலர்தல்

திகிரி - ஆணைச்சக்கரம்

பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில்

மேரு - இமயமலை

நாமநீர் - அச்சம் தரும் கடல்

அளி - கருணை


சிலப்பதிகாரம்

  • சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்

  • இளங்கோவடிகள் வாழ்ந்த காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்

  • இதுவே தமிழின் முதல் காப்பியம்.

  • இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் எனப்படுகிறது. 

  • சிலப்பதிகாரமும் மணிேமகைலயும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கழுத்தில் சூடுவது ------

அ) தார் 

ஆ) கணையாழி 

இ) தண்டை 

ஈ) மேகலை

விடை: அ) தார் 

2. கதிரவனின் மற்றொரு பெயர் ------

அ) புதன் 

ஆ) ஞாயிறு 

இ) சந்திரன் 

ஈ) செவ்வாய்

விடை: ஆ) ஞாயிறு


3. 'வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

அ) வெண் + குடை 

ஆ)வெண்மை + குடை

இ) வெம் + குடை 

ஈ) வெம்மை + குடை

விடை: ஆ)வெண்மை + குடை


4. ’பொற்கோட்டு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

அ) பொன் + கோட்டு 

ஆ) பொற் + கோட்டு

இ) பொண் + கோட்டு

ஈ) பொற்கோ + இட்டு

விடை: அ) பொன் + கோட்டு 


5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

அ) கொங்குஅலர் 

ஆ) கொங்அலர் 

இ) கொங்கலர் 

ஈ) கொங்குலர்

விடை: இ) கொங்கலர்


6. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

அ)அவன்அளிபோல் 

ஆ) அவனளிபோல்

இ) அவன்வளிபோல் 

ஈ) அவனாளிபோல்

விடை: ஆ) அவனளிபோல்


நயம் அறிக.

1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக


திங்களைப் போற்றுதும் -திங்களைப் போற்றுதும்

கொங்கு - குளிர்

திகிரிபொள் - திரிதலான்

மாமழை - மாமழை

வன் - ளிபோல்

 

2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக


திங்களை - கொங்கு

ர் - கு

ஞாயிறு - ஞாயிறு

மாழை - நா நீர்

போற்றுதும் - பொற்கோட்டு



குறுவினா

1. சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?

சிலப்பதிகாரக் காப்பியம் சந்திரனையும், சூரியனையும், மழையையும் வாழ்த்தித் தொடங்குகிறது.


2. இயற்கை போற்றத்தக்கது ஏன்?

இயற்கையை இறைவனாகக் காண்பது நம் மரபு. நம்மைச் சுற்றிலும் உள்ள இயற்கை அழகின் பிறப்பிடமாய் இருக்கிறது. கடலும், மலையும், நிலவும், சூரியனும், நிலமும் நமக்கு எல்லையில்லா பயன்களைக் கொடுத்து நம்மை பாதுகாக்கிறது. எனவே இயற்கை போற்றத்தக்கது.


சிந்தனைவினா

1.இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றை தெய்வங்களாக வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. அச்சத்தினால் இயற்கையைப் போற்றத்துவங்கிய மனிதன் இன்று சிந்தனை தெளிவு பெற்ற பின் பக்தியினால் இயற்கையைப் போற்றுகிறான்.



 

Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்