வகுப்பு 6 ப1இ2 கவிதைப்பேழை-காணி நிலம் வினா-விடைகள்
கவிதைப்பேழை- காணி நிலம்
சொல்லும் பொருளும்
காணி - நில அளவைக் குறிக்கும் சொல்
மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்
சித்தம் - உள்ளம்
பாரதியார்:
இயற்பெயர் சுப்பிரமணியன்.
எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.
இளைமயிேலேய சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
தம் கவிைதயின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற நூல்களை இயற்றி உள்ளார்.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ’கிணறு’ என்பதைக் குறிக்கும் சொல்
அ) ஏரி
ஆ) கேணி
இ) குளம்
ஈ) ஆறு
விடை: ஆ) கேணி
2. ’சித்தம்’ என்பதன் பொருள் ------
அ) உள்ளம்
ஆ) மணம்
இ) குணம்
ஈ) வனம்
விடை: அ) உள்ளம்
3. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ------
அ) அடுக்குகள்
ஆ) கூரை
இ) சாளரம்
ஈ) வாயில்
விடை: அ) அடுக்குகள்
4. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
அ) நன்+மாடங்கள்
ஆ) நற் +மாடங்கள்
இ) நன்மை + மாடங்கள்
ஈ) நல் + மாடங்கள்
விடை: இ) நன்மை + மாடங்கள்
5. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
அ) நிலம் + இடையே
ஆ ) நிலத்தின் + இடையே
இ) நிலத்து + இடையே
ஈ) நிலத் + திடையே
விடை: ஆ ) நிலத்தின் + இடையே
6. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்______
அ) முத்துசுடர்
ஆ) முச்சுடர்
இ) முத்துடர்
ஈ) முத்துச்சுடர்
விடை: ஈ) முத்துச்சுடர்
7. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______
அ) நிலாஒளி
ஆ) நிலஒளி
இ) நிலாவொளி
ஈ) நிலவுஒளி
விடை: இ) நிலாவொளி
பொருத்துக.
1. முத்துச்சுடர்போல - நிலாஒளி
2. தூய நிறத்தில் - மாடங்கள்
3. சித்தம் மகிழ்ந்திட - தென்றல்
நயம் அறிக.
1. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
காணி - காணி
முத்துச்சுடர் - முன்பு
கத்துங்குயில் - காதில்
தென்னைமரம் - தென்றல்
பத்துப்பன்னிரண்டு - பக்கத்திலே
2. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
காணி - தூணில்
காணி - கேணி
தென்றல் - தென்னை
கத்துங்குயில் - சித்தம்
குறுவினா
1. காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?
காணி நிலம் வேண்டும், அந்த நிலத்தில் அழகிய மாளிகை கட்டவேண்டும். அழகான தூண்களையும், தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும் என்றும் பாரதியார் வேண்டுகிறார்.
2. பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.
காணி நிலத்தில் அழகிய வீடு வேண்டும் என்று மட்டும் விருப்பம் கொள்ளாமல் அங்கு சுவையான நீரைக்கொண்ட கிணறும், காலியான இடங்களில் தென்னை மரங்களும், அது தரும் இளநீரும் வேண்டும் என்றும், தூய வெண்மையான நிலவொளி வேண்டும் என்றும், மரங்களில் அமர்ந்துள்ள குயில்களின் குரல்களைக் கேட்டுக்கொண்டு இளந்தென்றலை இரசிக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவிக்கின்றார்.
சிந்தனைவினா
1. பாரதியார் வீட்டின் அருகில் தென்னை மரங்கள் வேண்டும் என்கிறார். நீங்கள் எந்தெந்த மரங்களை வளர்ப்பீர்கள் என எழுதுக.
எங்கள் வீட்டின் அருகில் தென்னை, வேம்பு, கொய்யா, நெல்லி, வாழை போன்ற மரங்களை வளர்ப்பேன்.