வகுப்பு6 ப1இ3 தமிழ் கவிதைப்பேழை அறிவியலால் ஆள்வோம்
இயல் மூன்று
கவிதைப்பேழை -அறிவியலால் ஆள்வோம்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மனிதன் எப்போதும் உண்மையையே ______________.
அ) உரைக்கின்றான்
ஆ) உழைக்கின்றான்
இ) உறைகின்றான்
ஈ) உரைகின்றான்
விடை:
2.ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________.
அ) ஆழமான + கடல்
ஆ) ஆழ் + கடல்
இ) ஆழ + கடல்
ஈ) ஆழம் + கடல்
விடை: ஈ) ஆழம் + கடல்
3.விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________.
அ) விண் + வளி
ஆ) விண் + வெளி
இ) விண் + ஒளி
ஈ) விண் + வொளி
விடை: ஆ) விண் + வெளி
4.நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________.
அ) நீலம்வான்
ஆ) நீளம்வான்
இ) நீலவான்
ஈ) நீலவ்வான்
விடை: இ) நீலவான்
5.இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________.
அ) இல்லாதுஇயங்கும்
ஆ) இல்லாஇயங்கும்
இ) இல்லாதியங்கும்
ஈ) இல்லதியங்கும்
விடை: இ) இல்லாதியங்கும்
நயம் அறிக.
1.பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.
ஆழக்கடலின் - அடியில் மூழ்கி
செயற்கை - செய்தித்தொடர்பு
இயற்கை - இணையம்
நீலவான் - நிலவில்
2.பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எழுதுக.
இயற்கை - செயற்கை
நீலவான் - நிலவில்
நாளை - வேளை
3.பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
பார்க்கின்றான், நினைக்கின்றான்
சிறக்கின்றான், உரைக்கின்றான்
படைக்கின்றான், கொடுக்கின்றான்
காக்கின்றான், பார்க்கின்றான்
வாழ்ந்திடுவான், அமைத்திடுவான்
குறுவினா
1.செயற்கைக்கோள் எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது?
செயற்கைக்கோள்கள் உதவியுடன் செய்தித் தொடர்பிலும், இயற்கை வளங்களையும் புயல், மழை ஆகியவற்றை கண்டறியவும் பயன்படுகிறது.
2.நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?
விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான். அங்கு சென்றுவர விண்வெளியிலும் பாதை அமைத்திடுவான்.
சிந்தனை வினா
1.எவற்றுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்பது பற்றிச் சிந்தித்து எழுதுக
மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி, அறிவியல், விவசாயம், கணினி,சாலைகள் அமைத்தல், மாற்று மின்சாரம் தயாரித்தல் போன்றவற்றில் புதிய கண்டுபிடிப்புகள் தேவை.
2.இதுவரை எத்தனை கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? அவை யாவை?
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோள்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
பூமி
யுரேனஸ்
நெப்டியூன்
3.இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக்கோளின் பெயர் யாது?
இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக்கோள் சந்திராயன் ஆகும்.