வகுப்பு 6 ப1அ7 அறிவியல் கணினி ஓர் அறிமுகம் வினா-விடைகள்






கணினி – ஓர் அறிமுகம்

I.  சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

அ) மார்ட்டின் லூதர் கிங்

ஆ) கிரகாம்பெல்

இ) சார்லி சாப்ளின்

ஈ) சார்லஸ் பாபேஜ்

விடை: ஈ) சார்லஸ் பாபேஜ்


2. கீழ்க்காண்பவற்றுள் கணினியின் மறுவடிவம் எது?

அ) கரும்பலகை   

ஆ) கைப்பேசி

இ) வானொலி    

ஈ) புத்தகம்

விடை: ஆ) கைப்பேசி


3. முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

அ) 1980 

ஆ) 1947 

இ) 1946 

ஈ) 1985

விடை: இ) 1946 


4. கணினியின் முதல் நிரலர் யார்?

அ) லேடி வில்லிங்டன்

ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்

இ) மேரி க்யூரி     

ஈ) மேரிக்கோம்

விடை: ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்


5. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

அ) கணிப்பான்  

ஆ) அபாகஸ்

இ) மின் அட்டை  

ஈ) மடிக்கணினி

விடை: இ) மின் அட்டை


II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. தரவு என்பது ___________ விவரங்கள் ஆகும்.

விடை: முறைப்படுத்த வேண்டிய


2. உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி ___________ .

விடை: ENIAC (Electronic Numerical Integrator and Computer)


3. தகவல் என்பது __________ விவரங்கள் ஆகும்.

விடை: முறைப்படுத்தப்பட்ட


4. ஐந்தாம் தலைமுறைக் கணினி ___________ நுண்ணறிவு கொண்டது.

விடை: செயற்கை


5. குறியீட்டு எண்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் கருவி ___________ .

விடை: அனலாக் கணினி


III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாகஇருப்பின் சரியான கூற்றை எழுதுக.

1. கணினி ஒரு மின்னணு இயந்திரம்.

விடை: சரி


2. கணினியைக் கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன்.

விடை: தவறு

கணினியைக் கண்டறிந்தவர் சார்லஸ் பாப்பேஜ்


3. கணினி, கணக்கீடுகளை மிகவும் விரைவாகச் செய்யக்கூடியது.

விடை: சரி


IV. பொருத்துக:


முதல் தலைமுறை

வெற்றிடக்குழாய்கள்

இரண்டாம் தலைமுறை

மின்மயப்பெருக்கிகள்

மூன்றாம் தலைமுறை

ஒருங்கிணைந்த சுற்று

நான்காம் தலைமுறை

நுண்செயலி

ஐந்தாம் தலைமுறை

செயற்கை நுண்ணறிவு



V. சுருக்கமாக விடையளி.

1. கணினி என்றால் என்ன?

கணினி என்பது தரவு மற்றும் தகவல்களைத் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்க உருவாக்கப்பட்ட ஒரு மின்னணு இயந்திரம். இதில் நாம் தரவுகளைச் சேமித்து வைக்கலாம். இத்தரவுகளை நமது தேவைக்கு ஏற்றவாறு தகவல்களாக மாற்றி எடுத்துக் கொள்ளலாம்.


2. கணினியின் முன்னோடிகள் யாவை?

அபாகஸ்

கணிப்பான்

முதலாம் தலைமுறைக்கணினி

இரண்டாம் தலைமுறைக்கணினி

மூன்றாம் தலைமுறைக்கணினி

நான்காம் தலைமுறைக்கணினி


3. தரவு பற்றி சிறுகுறிப்பு வரைக.

‘தரவு’ என்பது ‘முறைப்படுத்தப்பட வேண்டிய’ விவரங்கள். இவை நேரடியாக நமக்குப் பயன் தராது. பொதுவாக எண், எழுத்து மற்றும் குறியீடு வடிவில் அவை இருக்கும்.


4. ஏதேனும் நான்கு உள்ளீட்டுக் கருவிகளைக் கூறுக.

விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse), ஜாய்ஸ்டிக், வெப் கேமரா


5. மென்பொருள் மற்றும் வன்பொருள் இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.


மென்பொருள்

வன்பொருள்

கணினியை இயக்குவதற்கு உதவும் மென்பொருள் இயக்க மென்பொருள் எனப்படும்.

கணினியில் இருக்கக்கூடிய மென்பொருள்கள் செயல்படுவதற்கு உதவக்கூடிய கணினியின் பாகங்களே வன்பொருள்கள் ஆகும்.

எ.கா. Windows, Linux

எ.கா.Keyboard, Mouse, Printer



VI. விரிவாக விடையளி

1. கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.


கணினி இன்றைய சூழலில் பல்வேறு வகைகளில் பயன்படுகிறது. 

கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடைபெறாது எனும் வகையில் அதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

கணினி அதற்கு இடப்படும் கட்டளைகளுக்கேற்ப, விரைவாகவும், துல்லியமாகவும் வேலைகளைச் செய்து முடிப்பதால், அனைவரும் பயன்படுத்தும் சாதனமாக மாறியுள்ளது.

  • எளிய கணக்குகள் முதல் சிக்கலான கணக்குகள் வரை அனைத்தையும் செய்வதால், பல்வேறு தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது.

  • பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், ராக்கெட் தொழில் நுட்பம், செயற்கைக்கோள்கள் இயக்கம் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

  • வங்கிகளில் பல்வேறு வகையான வேலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

  • பேருந்து,இரயில், விமான சேவைகளில் பயன்படுத்தப்படுகிறது.

  • அஞ்சல் அலுவலகம்,சரக்கு போக்குவரத்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

  • பல்வேறு தொழிற்சாலைகளிலும், விற்பனைக் கூடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

 

Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்