வகுப்பு 7 ப1 அ6 அறிவியல் உடல் நலமும் சுகாதாரமும் வினா-விடைகள்

 



அலகு 6 உடல் நலமும் சுகாதாரமும்


மதிப்பீடு


I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. ரவி நல்ல மனநிலையும் திடகாத்திரமான உடலையும் பெற்றிருக்கிறான். இது எதைக் குறிக்கிறது?

அ. சுகாதாரம் 

ஆ. உடல்நலம்

இ. சுத்தம் 

ஈ. செல்வம்

விடை: ஆ. உடல்நலம்


2. தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் சிறந்தது.

அ. மகிழ்ச்சி 

ஆ. ஓய்வு

இ. மனம் 

ஈ. சுற்றுச்சூழல்

விடை: இ. மனம்


3. நாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்.

அ. திறந்த 

ஆ. மூடியது

இ. சுத்தமான 

ஈ. அசுத்தமான

விடை: இ. சுத்தமான


3. புகையிலையை மெல்லுவதால் ஏற்படுவது

அ. இரத்த சோகை 

ஆ. பற்குழிகள்

இ. காசநோய் 

ஈ. நிமோனியா

விடை: இ. காசநோய் 


4. முதலுதவி என்பதன் நோக்கம்

அ. பணத்தைச் சேமித்தல்

ஆ. வடுக்களைத் தடுத்தல்

இ. மருத்துவப் பராமரிப்பைத் தடுத்தல்

ஈ. வலி நிவாரணம்

விடை: ஈ. வலி நிவாரணம்


II. கோடிட்ட இடத்தை நிரப்புக. 

1. ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களை ________________​​​​ என அழைக்கிறோம். 

விடை: சமூகம்


2. நான் பச்சை நிறத்தில் குப்பைகளோடு இருக்கக்கூடிய பெட்டி. நான்________________.

விடை: மட்கும் குப்பைகள் போடப்படும் பெட்டி


3. கண்கள் உலகினைக் காணப் பயன்படும் ________________ கருதப்படுகின்றன.

விடை:சாளரங்களாகக் 


4. முடியை மென்மையாக வைத்திருக்க மயிர்க்கால்கள்________________உற்பத்தி செய்கின்றன.

விடை: எண்ணெய்யை


5. காசநோய் என்பது ________________பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

விடை: மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே


III. சரியா அல்லது தவறா எனக்கூறுக.தவறெனில் சரிசெய்து எழுதுக.

1. அனைத்து உணவுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

விடை: சரி


2. சின்னம்மை லுகோடெர்மா என்றும் அழைக்கப்படுகிறது.

விடை: தவறு

சின்னம்மை வேரிசெல்லா என்றும் அழைக்கப்படுகிறது.


3. வயிற்றுப்புண் ஒரு தொற்றாநோய்.

விடை: சரி


4. ரேபிஸ் நோய் இறப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு அபாயகரமான நோயாகும்.

விடை: சரி


5. முதல்நிலை தீக்காயத்தில் முழுத்தோல் பகுதியும் சேதமடைகிறது.

விடை: தவறு 

முதல் நிலை தீக்காயங்கள் தோலின் வெளிப்புற அடுக்கினைப் (மேல்புறத் தோல்) பாதிப்படையச்செய்கின்றன.




IV. பொருத்துக.


ரேபிஸ்

ஹைட்ரோபோபியா

காலரா

கால் தசை

காசநோய்

மைக்கோபாக்டீரியம்

ஹெபடைடிஸ்

மஞ்சள்நிற சிறுநீர்

டைபாயிடு

சால்மோனெல்லா


V. ஒப்புமை தருக.

1. முதல்நிலைத் தீக்காயம் : மேற்புறத்தோல் :: இரண்டாம்நிலைத் தீக்காயம் : ________________ .

விடை: உட்புறத்தோல்


2. டைபாய்டு : பாக்டீரியா :: ஹெபடைடிஸ் : ________________ .

விடை: வைரஸ்


3. காசநோய் : காற்று :: காலரா : ________________.

விடை: தண்ணீர் / உணவு


VI. கீழ்க்காணும் கூற்றுக்கைள ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்க.

அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

இ. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

ஈ. கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.


1. கூற்று: வாய்ச் சுகாதாராம் நல்லது. 

காரணம்: நல்ல பற்கள் ஆரோக்கியமான திசுக்களைக் கொண்ட ஈறுகளால் சூழப்பட்டுள்ளன.

விடை: அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.


2. கூற்று: சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.

காரணம்: உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல், மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன.

விடை: அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.


VII. மிகச் சுருக்கமாக விடையளி.

1. சுகாதாரம் என்றால் என்ன?

சுகாதாரம் என்பது நோய்களைத் தடுப்பதற்காகவும், நல்ல ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தூய்மையைப் பேணுதல், பாதுகாப்பான குடிநீர் பருகுதல் மற்றும் சரியான முறையில் கழிவுகளை அகற்றுதல் போன்ற சிறந்த செயல்கள் மற்றும் பழக்கவழக்கங்களைக் குறிப்பதாகும்.


2. கண்களைப் பாதுகாக்கும் முறைகள் பற்றி எழுது.

  • கேரட் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  • ஆரஞ்சு, லெமன்,பப்பாளி மற்றும் சாத்துக்குடி போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  • நீண்டநேரம் தொலைக்காட்சி / கணினி/கைபேசி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

  • குளிர்ந்த நீரில் பஞ்சை நனைத்து கண்களை மூடி பின் கண்மேல் சிறிது நேரம் வைத்து ஓய்வளிக்கலாம்.


3. உனது முடியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணுவது எவ்வாறு?

  • தினமும் உச்சந்தலையை நன்றாகத் தேய்த்துக் குளிப்பதன்மூலம், இறந்த சருமச் செல்கள், அதிக எண்ணெய் மற்றும் தூசி ஆகியவற்றை அகற்றலாம். 

  • சுத்தமான தண்ணீரில் தலைமுடியை அலசுதல், நல்ல தரமான சீப்புகளைப் பயன்படுத்துதல் ஆகியவை முடியைப் பராமரிப்பதற்கு மிகவும் அவசியமாகும்.


4. தனது கைபேசியில் சோபி அடிக்கடி விளையாடுகிறார். கண் எரிச்சலிலிருந்து அவரது கண்களைப் பாதுகாக்க உனது பரிந்துரை என்ன?

  • கைபேசி அதிக நேரம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

  • குளிர்ந்த நீரில் பஞ்சை நனைத்து கண்களை மூடி பின் கண்மேல் சிறிது நேரம் வைத்து கண்களுக்கு ஓய்வளிக்கலாம்.

  • கண்களை சுத்தமான குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யலாம்.


5. மழைக்காலத்தில் உங்கள் பகுதியில் பரவும் இரண்டு தொற்று நோய்களின் பெயர்களைக் கூறு.

  • காலரா

  • ஹெபடைடிஸ்


6. காயங்களுக்கு என்ன முதலுதவி வழங்க வேண்டும்?

  • காயங்கள் தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பாதிப்புகளாகும்.

  • சிறிய வெட்டுக்காயம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதியைச் சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவிய பின் ஒரு கிருமிநாசினித் திரவத்தால் சுத்தம் செய்ய வேண்டும். காயம் பட்ட இடத்தில் கிருமிநாசினிக் களிம்பு இட்டு, தொற்றுநோயைத் தடுக்கும் வண்ணம் காயம்பட்ட இடத்தைச் சுற்றி கட்டுத்துணியால் கட்ட வேண்டும். 

  • வெட்டு ஆழமாக இருந்தால், ஒரு சுத்தமான பருத்தித் திண்டு (cotton pad) வைத்து அழுத்திப் பிடித்தவாறு, காயமடைந்த நபரை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.


7. கங்காவிற்கு சிறிய தீக்காயம் ஏற்பட்டதால், நான் தண்ணீரால் புண்ணைக் கழுவினேன் என்று ரவி கூறினான். அவனது கூற்றினை ஏற்றுக் கொள்கிறாயா, இல்லையா? ஏன் என்பதை விவரி.


ஆம்.

சிறிய தீக்காயங்களைப் பொருத்தவரை, பாதிக்கப்பட்ட பகுதியை குளிர்ந்த நீரில் கழுவி, கிருமிநாசினிக் களிம்பைத் தடவுவது சரியான முதலுதவி ஆகும்.


ஆனால், கடுமையான தீக்காயங்கள் மூலம் கொப்பளங்கள் தோன்றியிருந்தால் தண்ணீர் பயன்படுத்துவதைத்தவிர்க்க வேண்டும்.


VIII. சுருக்கமாக விடையளி.

1. முதலுதவியின் அவசியம் என்ன?

முதலுதவி என்பது விபத்து மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்கும் முன் வழங்கப்படும் உடனடிச் சிகிச்சையாகும். 

™ முதலுதவி உயிரைப் பாதுகாக்கிறது. 

™ இரத்தக் கசிவைத் தடுத்து நோயாளியின் நிலையை உறுதிப்படுத்துகிறது. 

™ வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. 

™ ஆரம்பநிலையில் அவசர மருத்துவ உதவியை வழங்குகிறது.


2. இந்தப் படம் எதை விளக்குகிறது?

குப்பைகளைக் கீழே போடாதீர்கள்/ குப்பைகளைக் கீழே போட்டு இந்த இடத்தை மாசுபடுத்தாதீர்கள்.


3. தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்களை வேறுபடுத்துக.


தொற்று நோய்கள்

தொற்றா நோய்கள்

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் நோய்கள் தொற்று நோய்கள் எனப்படும்.

தொற்றா நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதில்லை. அவை பிற காரணிகளால் ஏற்படுகின்றன

அசுத்தமான காற்று, நீர், உணவு அல்லது வெக்டார்கள், பூச்சிகள் மற்றும் பிற விலங்குகள் மூலமாகவும் தொற்றுநோய்கள் பரவுகின்றன

அசுத்தமான காற்று, நீர், உணவு அல்லது வெக்டார்கள், பூச்சிகள் மற்றும் பிற விலங்குகள் மூலமாக தொற்றுநோய்கள் பரவுவதில்லை.



4.உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைக்க நீ எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?

  • ஒரு நாளைக்கு இரண்டு முறைபல் துலக்குவதன் மூலம் பற்களிலும், ஈறுகளில் பற்காரை மற்றும் கருவண்ணம் உருவாவதைத் தடுக்கலாம். 

  • நாம் பற்களைத்தழுவும்போது (Flossing) உணவுத் துகள்கள், பற்காரை மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகின்றன


5. தொற்று நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?

  • ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் நோய்கள் தொற்று நோய்கள் எனப்படும். 

  • அசுத்தமான காற்று, நீர், உணவு ,நோய் கடத்திகளான பூச்சிகள் மற்றும் பிற விலங்குகள் மூலமாகவும் தொற்று நோய்கள் பரவுகின்றன. 


6. மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் போன்ற குறைபாட்டை குறைக்க கூறும் ஆலோசனை யாது?

  • தினமும் உச்சந்தலையை நன்றாகத் தேய்த்துக் குளிப்பதன்மூலம், இறந்த சருமச்செல்கள், அதிக எண்ணெய் மற்றும் தூசி ஆகியவற்றை அகற்றலாம்.

  • சுத்தமான தண்ணீரில் தலைமுடியை அலசுதல், நல்ல தரமான சீப்புகளைப் பயன்படுத்துதல் ஆகியவை முடியைப் பராமரிப்பதற்கு மிகவும் அவசியமாகும்.


IX. விரிவாக விடையளி.

1. ஏதேனும் மூன்று தொற்று நோய்களைப் பற்றி விரிவாக எழுதுக.

1. காசநோய் 

காசநோய் எனப்படும் டி.பி. மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. 

பரவும் முறை:

காற்றின் மூலமும், துப்புதல், நோயுற்றவருடன் தொடர்பு மற்றும் அவர்களுடன் பொருள்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவை மூலமும் பிறருக்குப் பரவுகிறது. 


அறிகுறிகள்:

காய்ச்சல், எடை இழப்பு, தொடர்ந்து இருமல், சளியுடன் இரத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.


தடுப்பு மற்றும் சிகிச்சை: 

BCG தடுப்பூசி போடுதல். 

நோயாளிக்கு சிறப்புக் கவனம் செலுத்துதல். 

DOT போன்ற மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளுதல்.


2. டைபாய்டு: 

சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீரியா மூலம் இது உருவாகிறது. 

பரவும் முறை:

அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் இது பரவுகிறது. 


அறிகுறிகள்:

பசியின்மை, தீவிர தலைவலி, அடிவயிற்றில் புண் அல்லது தடிப்புகள் மற்றும் தீவிர காய்ச்சல் ஆகியவை (104°F வரை) காய்ச்சல் இந்நோயின் அறிகுறிகளாகும்.


தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள்:

  • கொதிக்கவைத்து ஆற வைத்த குடிநீரைப் பருகுதல்.

  • முறையாக கழிவுநீரை அகற்றுதல் 

  • தடுப்பூசி போடுதல்


3. தட்டம்மை:

தட்டம்மை நோய் வாரிசெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. இது வாரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரஸால் ஏற்படும் தீவிரமான தொற்றுநோய் ஆகும். 

பரவும் முறை:

இந்த நோய் காற்றின் மூலமும், பாதிக்கப்பட்ட நபர் மூலமாகவும் எளிதில் பரவுகிறது. 

அறிகுறிகள்:

உடல் முழுவதும் தடிப்புகள் தோன்றுதல், காய்ச்சல், தலைவலி மற்றும் சோர்வு போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள்:

  • சின்னம்மையைத் தடுப்பதற்கான சிறந்த வழி சின்னம்மை (வேரிசெல்லா) தடுப்பூசி போடுவதாகும். 

  • நோயாளிகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.


2. ஒரு நபருக்குத் தோலில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வாய்? முதலுதவிக்கான பல்வேறு சூழ்நிலைகளையும் கூறுக.

வெப்பம், வேதிப்பொருள்கள், மின்சாரம், சூரிய ஒளி அல்லது அணுக்கதிர்வீச்சினால் திசுக்கள் சேதமடைவதே தீக்காயம் என்று அழைக்கப்படுகின்றது. 

தீக்காயங்களுக்கான முதலுதவி:

  • சிறிய தீக்காயங்களைப் பொருத்தவரை, பாதிக்கப்பட்ட பகுதியை குளிர்ந்த நீரில் கழுவி, கிருமிநாசினிக் களிம்பைத் தடவ வேண்டும். 

  • கடுமையான தீக்காயங்கள் மூலம், திசுக்களின் ஆழமான அடுக்குகள் அழிக்கப்பட்டு, கொப்பளங்கள் தோன்றியிருந்தால், நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். 

  • காயம்பட்ட இடத்தைச் சுற்றிச் சுத்தமான ஒட்டக்கூடிய தன்மையற்ற துணி அல்லது கட்டுத்துணியால் சுற்ற வேண்டும். 

  • பெரிய தீக்காயங்களாக இருந்தால் உடனடியாக மருத்துவரின் சிகிச்சையை நாட வேண்டும். 

  • தீயணைப்பான்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். 


3. ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எவ்வாறு நோய் பரவுகிறது?

நோயினை உருவாக்கும் கிருமிகளால் உருவாகி, நோய்த்தொற்றுடைய நபரிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆரோக்கியமான நபருக்குத் தொற்றக்கூடிய நோய்கள் தொற்று நோய்கள் எனப்படும்.

அ. பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்: 

காசநோய், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் தொற்று நோய்களாகும். இவை, காற்று, நீர் மற்றும் பிற உயிரிகள் மூலம் பரவுகின்றன.  


ஆ. வைரஸ் மூலம் தோன்றும் நோய்கள்:

பல வகையான வைரஸ்களால் தோன்றும் தொற்றுநோய்களே வைரஸ் நோய்களாகும். மஞ்சள் காமாலை, சின்னம்மை மற்றும் ரேபிஸ்போன்றவை வைரஸ்களால் ஏற்படும் சில நோய்களாகும்.

இ. ரேபிஸ் (வெறிநாய்க் கடி) 

வெறிநாய்க் கடி இறப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு அபாயகரமான நோயாகும். நோய்த்தொற்றுடைய நாய், முயல், குரங்கு, பூனை ஆகியவை கடிப்பதன் மூலமாக இது பரவுகிறது. 


X. உயர் சிந்தனை வினா. 

ஒரு நபர் அலுவலகத்தில் அல்லது வகுப்பறையில் பகல் நேரத்தில் தூங்குவது ஏன்? இத்தகைய சூழ்நிலையை எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா? விவரி.

ஒரு நபர் அலுவலகத்தில் அல்லது வகுப்பறையில் பகல் நேரத்தில் தூங்குவது பெரும்பாலும் சோர்வின் காரணமாகவே இருக்கும்.

உண்ணும் உணவின் மூலமும், சுற்றுப்புறத்தில் இருந்து கிடைக்கும் தூய காற்று மூலமாகவும், மூளைக்கு அவசியமான ஆக்சிஜன் கிடைக்காத சூழ் நிலைகள் இருக்கும்போதும், சரியான, அளவான, சத்தான மற்றும் போதுமான உணவுகள் உண்ணாமல் இருந்தாலும் தூக்கம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.


Popular posts from this blog

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்

8 - அறிவியல் - அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்- மதிப்பீடு- வினா - விடைகள்