வகுப்பு 7 ப1 அ7 அறிவியல் காட்சித்தொடர்பு வினா-விடைகள்
மதிப்பீடு
I. சரியானதைத் தேர்வு செய்.
1. அசைவூட்டம் எதற்கு உதாரணம்?
அ. ஒலித் தொடர்பு
ஆ. காட்சித் தொடர்பு
இ. வெக்டர் தொடர்பு
ஈ. ராஸ்டர் தொடர்பு
விடை:ஆ. காட்சித் தொடர்பு
2. போட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன்படுத்துபவர்கள் யார்?
அ. ஆசிரியர்கள்
ஆ. மருத்துவர்கள்
இ. வண்ணம் அடிப்பவர்கள்
ஈ. புகைப்படக் கலைஞர்கள்
விடை: ஈ. புகைப்படக் கலைஞர்கள்
3. மைக்ரோசாப்ட் போட்டோஸ்டோரியில் நமது படங்களைப் பதிவேற்ற பயன்படுத்தப்படும் தெரிவு எது?
அ. Begin a story
ஆ. Import pictures
இ. Settings
ஈ. View your story
விடை: அ. Begin a story
4. கீழ்க்காண்பவற்றுள் கணினியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது எது?
அ. இங்க்ஸ்கேப்
ஆ. போட்டோ ஸ்டோரி
இ. மெய்நிகர் தொழில் நுட்பம்
ஈ. அடோபி இல்லுஸ்ட்ரேட்
விடை: இ. மெய்நிகர் தொழில் நுட்பம்
5. படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை எவை?
அ. ராஸ்டர்
ஆ. வெக்டர்
இ. இரண்டும்
ஈ. மேற்கண்ட எதுவுமில்லை
விடை: அ. ராஸ்டர்
6. சின்னங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?
அ. போட்டோஷாப்
ஆ. இல்லுஸ்ட்ரேட்டர்
இ. வெக்டார் வரைகலை
ஈ. போட்டோ ஸ்டோரி
விடை: இ. வெக்டார் வரைகலை
II. பொருத்துக
III. சுருக்கமாக விடையளி.
1. ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?
ராஸ்டர் வரைகலை மூலம் உருவாக்கப்பட்ட படம் (Image) அல்லது உருவத்தை கோப்பு அல்லது தரவு முறையில் அப்படியே பதிவு செய்யலாம்.
ராஸ்டர் (Raster Graphics) வரைகலைப் படங்கள் படப்புள்ளிகளை (Pixels) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை.
இவ்வகைப் படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கும்போது அவை செவ்வக அடுக்குகளாகத் தெரியும்.
நிழற்படக் கருவி (Camera) மூலம் எடுக்கப்படும் படங்களும், வருடி (Scanner) மூலம் பெறப்படும் படங்களும் இவ்வகையைச் சார்ந்தவை.
2. இருபரிமாண மற்றும் முப்பரிமாணப் படங்கள் பற்றி எழுதுக.
இருபரிமாணப் (2D) படங்கள் நீளம் மற்றும் அகலம் ஆகிய இரு பரிமாணங்களை மட்டும் கொண்டிருக்கும்.
முப்பரிமாணப் படங்கள் நீளம், அகலம் மற்றும் உயரத்தையும் கொண்டிருக்கும
3. ராஸ்டர் மற்றும் வெக்டர் வரைகலைப் படங்களை வேறுபடுத்துக.
4. மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி மூலம் படக்கதை காணொளி ஒன்றை எவ்வாறு உருவாக்குவாய்?
மென்பொருள் மூலம் நமது புகைப்படங்களை காணொளியாக எளிதில் மாற்றுவதற்கு நாம் முதலில் அவற்றை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அதற்கான இசையையும் தேர்ந்தெடுத்து தனிக் கோப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
படி 1 மைக்ரோசாப்ட் போட்டோஸ்டோரி செயல்பாட்டைத் திறந்து, அதில் 'Begin a New Story' என்பதைத் தேர்வு செய்து அதில் Next என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2 அடுத்ததாகத் தோன்றும் திரையில் ’Import Picture’ என்பதைக் கிளிக் செய்தால் நம் கணினியில் உள்ள கோப்புகள் தோன்றும். அதில், ஏற்கனவே சேமித்து வைத்திருந்த புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கவும். படங்களில் திருத்தங்களைச் செய்யவும் அதில் வசதிகள் உண்டு. தேவையெனில் திருத்தங்களை மேற்கொண்டு ’Next’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3 இப்போது ஒவ்வொரு படத்திற்கும் பொருத்தமான சிறு சிறு உரைகளை உள்ளிடலாம். பின்னர் ’Next’ என்பதைக் கிளிக் செய்து, திரையில் உள்ள படங்களுக்கு அசைவூட்டம் கொடுக்கலாம். இக்கதைக்குத் தேவையான கருத்துகளைப் பேசி அவற்றை நாம் பதிவு செய்யவும் முடியும். அதனை முடித்தபின் ’Next’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4 கதைக்கு, பின்னணி இசையை இணைக்க 'Select Music’ மூலம் இசைக் கோப்பைத் தேர்ந்தெடுத்து, பின்னர் Next என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5 அடுத்தபடியாக, கதைக்கான பெயர் மற்றும் அது சேமிக்கப்படவேண்டிய இடத்தைத் தேர்வு செய்யவும். பின்னர் 'Settings’ மூலம் காணொளியின் தரத்தினை மாற்றிக் கொள்ளவும்.
படி 6 இதோ நமது காணொளி தயாராகி விட்டது. திரையில் ’View Your Story’ என்பதைக் கிளிக் செய்தால் நமது காணொளியினைக் காணலாம்.