8அQ12 வினாடி-வினா-விடைகள்
வினாடி-வினா- 12
அணு அமைப்பு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. உலக அளவில் இதுவரை எத்தனை தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன? அவற்றில் இயற்கையில் கிடைக்கக்கூடிய தனிமங்கள் எத்தனை?
அ. 118, 94
ஆ. 118, 92
இ. 118, 93
ஈ. 118, 90
விடை: ஆ.118, 92
2. கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில்எது டால்டனின் அணுக்கொள்கையின் சிறப்புகளில் ஒன்றாகும்?
அ. அணுஎன்பது பிளக்கமுடியாத மிகச் சிறிய துகள் என்பது தவறு.
ஆ. ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறுஅணுநிறைகளைப் பெற்றுள்ளன.
இ. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒரே அணுநிறையைப் பெற்றுள்ளன.
ஈ. டால்டனின் அணுக் கொள்கை பெரும்பாலான திரவங்கள் மற்றும் வாயுக்களின் பண்புகளை விவரிக்கின்றது.
விடை: ஈ. டால்டனின் அணுக்கொள்கை பெரும்பாலான திரவங்கள் மற்றும் வாயுக்களின் பண்புகளை விவரிக்கின்றது.
3. கீழ்க்கண்ட படத்தில் 1, 2, 3 மற்றும் 4 குறிப்பது என்ன?
அ. 1 –ஆனோடு, 2 – வெற்றிடக்குழாய், 3 – கேதோடு, 4 –ஆனோடு கதிர்கள்
ஆ. 1 – கேதோடு, 2 – வெற்றிடக் குழாய், 3 –ஆனோடு, 4 – நியூட்ரான்கள்
இ. 1 – கேதோடு, 2 – குறைந்த அழுத்தத்திலுள்ள வாயு, 3 – ஆனோடு, 4 – கேதோடு கதிர்கள்
ஈ. 1 – கேதோடு,2–குறைந்தஅழுத்தத்திலுள்ள வாயு,3–ஆனோடு, 4– நியூட்ரான்கள்
விடை: இ. 1-கேதோடு, 2- குறைந்த அழுத்தத்திலுள்ல வாய், 3- ஆனோடு, 4- கேதோடு கதிர்கள்
4. முந்தைய தலைமுறை தொலைக்காட்சிப் பெட்டிகளில் பயன்படுத்தப்பட்ட மின்
குழாயின் பெயர் என்ன?
அ. ஆனோடு கதிர் குழாய்
ஆ. கேதோடு கதிர் குழாய்
இ. துளையிடப்பட்ட கேதோடு கதிர் குழாய்
ஈ. காந்தக் கதிர்வீசல் குழாய்
விடை: ஆ. கேதோடு கதிர் குழாய்
5. ஆனோடு கதிர்களைப் பற்றிய பின்வரும் கருத்துக்களில் தவறானது எது?
அ. ஆனோடு கதிர்கள் நேர்கோட்டில் பயணிக்கின்றன.
ஆ. நேர் மின்வாய்க் கதிர்களின் பண்புகள் மின்னிறக்கக் குழாயினுள் இருக்கும் வாயுவின் தன்மையைச் சார்ந்ததுஅல்ல.
இ. ஆனோடு கதிர்கள் துகள்கனால்ஆனவை.
ஈ. ஆனோடு கதிர்கள் மின்புலம் மற்றும் காந்தப்புலத்தால்விலக்கமடைகின்றன.
விடை: ஆ. நேர்மின்வாய் கதிர்களின் பண்புகள் மின்னிறக்க குழாயினுள் இருக்கும் வாயுவின் தன்மையை சார்ந்தது அல்ல.
6. ஆனோடு கதிர்கள் மின்புலத்தில் எதிர்மின் தகட்டை நோக்கி விலகலடைகின்றன.
இதுஆனோடு கதிர்கள்_____ மின்சுமையைப் பெற்றுள்ளனஎன்பது புலனாகிறது.
அ. எதிர்
ஆ. நேர்
இ. சுழி
ஈ. குறைவான
விடை: ஆ. நேர்
7. கீழே தரப்பட்டுள்ள அட்டவணையைப் பயன்படுத்தி வினா எண். 8 &9
ஆகியவற்றிற்குப் பதிலளிக்கவும்.
8. எந்த இரு அடிப்படைத்துகள்கள்ஒரே நிறையைக் கொண்டுள்ளன?
அ. புரோட்டான், நியூட்ரான்
ஆ. புரோட்டான், எலக்ட்ரான்
இ. எலக்ட்ரான், நியூட்ரான்
ஈ. இவை எதுவுமில்லை
விடை: அ. புரோட்டான், நியூட்ரான்
9. எந்த ஒருஅடிப்படைத்துகள் மிகக் குறைந்த அல்லது புறக்கணிக்கத்தக்க நிறையைக்
கொண்டுள்ளது?
அ. புரோட்டான்
ஆ. நியூட்ரான்
இ. எலக்ட்ரான்
ஈ. இவை எதுவுமில்லை
விடை: ஆ. நியூட்ரான்
10. பின் வரும் வேதிச்சமன்பாட்டில் ஆங்கில எழுத்துகக்கள் X, Y எவற்றைக் குறிக்கின்றன?
CH4 +XCl2 → CCL4 + YCl
விடை: அ. 4, 4
II. குறுகிய விடையளி
11 கால்சியம் கார்பனேட்டுஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபட்டு கால்சியம் குளோரைடு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரைத் தருகின்றது.இதற்கான சொற்சமன்பாட்டை எழுதுக.
விடை:
கால்சியம் கார்பனேட் + ஹைட்ரோகுளோரிக் அமிலம் →
கால்சியம் குளோரைடு +கார்பன்டை ஆக்சைடு + நீர்
CaCO3 + 2HCl → CaCl2 + CO2 + H2O
12. பின் வரும் வேதிச் சமன்பாட்டை சமன் செய்யவும்.
விடை:
3Mg + N2 → Mg3N2